கவிதை போட்டி

கவிதைப்போட்டி

# வீழ்வேன் என நினைத்தாயோ!!??

மண்ணில் பிறந்தேன் மனிதனாய்!? மனிதன் என்று சொல்லுதல் தகுமோ! காரணம் சொல்லால் நீவிர் அறிவீரோ? செப்புகிறேன் என்னால் இயன்றதை மட்டும்.

மனிதன் என்று சொன்னால், பிறந்தவுடன் குடிக்க பால் வேண்டும் கிட்டியதா ?
பசித்தவுடன் உண்ண உணவு வேண்டும் கிட்டியதா !?
மானம் மறைக்க ஒரு ஆடை வேண்டும் கிட்டியதா!?
இவையெல்லாம் இல்லா உலகில் மனிதன் என்று சொல்லுதல் தகுமோ!!

பின்பும் வளர்ந்து நின்றேன் உலகில் ஒர் மரமாய்
அனைவரின் ஏச்சும் பேச்சும் அளவின்றி கேட்டேன் நான்  தனியாய்
ஏழை என்ற ஓர் வரியன்றி வேறு காரணம் தேடி நான் அறியாய்
இல்லார்க்கு இல்லையடாஇப்பூவுலகம் நிலையாய்.

இத்தனையும் சகித்தும் இப்பூவுலகில் வாழ்கின்றேன்
இறவாமல் இருப்பதனால்  இங்கு உள்ளோரை கேட்கின்றேன்
புவியில் வாழ்வதற்கு பணம் தான் பெரிது என்றால்
பாசம் என்ற ஒன்று உண்டு என்று உன் வாழ்நாளில் கண்டீரோ மானிடரே!!??

நீர் என்னை நோகடிக்க சாகடிக்க வார்த்தைகளால் முயன்றாலும்
மீண்டும் எழுந்து மனிதனாய் ஜொலிப்பேன் இப்பூவுலகில் ஒருநாள்
அன்றி வாழ்வதை விட்டு கோழை போல்
வீழ்வேன் என்று நினைத்தீரோ.??

பொய்யாமொழி புலவன் போல் பொய் உரைக்க வில்லை மானிடா!!
இப்புவி தன்னில் நானும் ஒருநாள் ஜெயிப்பேன்  நீ பாருடா.!!

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ