ஓணம் பண்டிகை முதலில் துவங்கும் கேரள கோயில்

தெரிந்த கதை தெரியாத வரலாறு .

இன்று நாம் காண இருப்பது கேரளாவில் ஓணம் பண்டிகை அன்று முதன்முதலில் ஓணம் துவங்கும் திருக்கோவில் எது!!? அதன் தாத்பரியம் என்ன ?வரலாறு என்ன? என்பதை சற்று விவரமாக விரிவாக காண்போம். அதற்கு முன்பு ஓணத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு..

மகாபலி சக்கரவர்த்தி இந்திர பதவியை அடைய வேண்டி யாகம் செய்ய அவருடைய கர்வத்தை அடக்க வேண்டி மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டு மூன்றாவது அடியாக அவன் தலையில் வைத்து அவனை பாதாள லோகத்துக்கு அனுப்பினார். தமிழில் நரகாசுரன் போல அவனும் பாதாளலோகம் செல்வதற்கு முன்பு நான் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று கேரள மக்கள் அனைவரையும் காண வருவேன் .அன்று அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளாசமாக ஆனந்தமாக இருக்க வேண்டுமென்று பரமாத்மாவிடம் வரம் கேட்க அவரும் அவ்வாறே அருளினார் .அதுவே கேரளத்தில் ஓணம் பண்டிகை திருவோண நட்சத்திரத்தன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது..

இனி ஓணம் பண்டிகை முதன்முதலாக ஈந்தக் கோவிலில் கேரளாவில் கொண்டாடப்படுகிறது என்று காண்போம்.

கேரளாவில் ஓணம் முதன்முதலில் எர்ணாகுளம் அருகிலுள்ள திருப்பூணி துறையில் பூர்ணத்திரயேஸ்வரர் கோவிலில் தான் முதன்முதலில் ஓணம் துவங்குகிறது. அதன் காரணம் என்ன என்பதைப் பற்றி நாம் சற்று விவரமாக காண்போம்.

இத்தலத்தில் ஒரு அந்தண தம்பதி வாழ்ந்து வந்தனர். அந்தணருக்கு பக்தி என்பது சிறிதும் கிடையாது .ஆனால் அவர் மனைவி மகாபக்தை. சிறந்த விஷ்ணு பக்தை. அவர்களுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்து உடனே இறந்து விட்டது. இதன் காரணமாக அவருக்கு பெருமாள் மீது மிகுந்த கோபம் ஏற்பட்டது.

ஒருமுறை அவர் மிகுந்த மன வருத்தத்துடன் துவாரகை சென்று கிருஷ்ணனை சந்தித்து ,கிருஷ்ணா! உன்னை திருமாலின் அம்சம் என்றும் அவதாரம் என்றும் கூறுகிறார்கள். எனக்கு பல குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டன. கடவுளின் அம்சமாக திகழும் உனக்கு அவற்றைக் காக்கும் பொறுப்பு இல்லையா ?என்று வினவினார்.!.

அதற்கு பகவான் ஒன்றும் பதில் அளிக்கவில்லை .ஆனால் அவர் அருகில் இருந்த அர்ஜுனன் அந்தணரே  ஒருவர் பிறப்பதும் இறப்பதும் விதிவசத்தால் ஆனது. இருந்தாலும் நீர் பகவான் கிருஷ்ணரை தவறாக எண்ணக்கூடாது. நான் இப்பொழுதே கிருஷ்ணரின் முன்னால் சபதம் செய்கிறேன்.. இனிமேல் உனக்கு பிறக்கும் குழந்தைகள் இறக்காமல் பார்த்துக் கொள்கிறேன் ..அப்படி இறந்தால் நான் அக்னியில் விழுந்து இறப்பேன் என்று சபதம் செய்தான். அந்தணர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார்.

சிலநாட்களில் அந்தணருக்கு பத்தாவது குழந்தை பிறந்தது .ஆனால் பிறந்தவுடன் அதுவும் இறந்து விட்டது. அதைக் கேள்விப்பட்ட அர்ஜூனன் உடனே தீயில் இறங்க தயாரானான்.

உடனே கிருஷ்ணர் அவனைத் தடுத்து அர்ஜுனா நீ அந்தணரிடம் குழந்தை பாக்கியம் வேண்டி கிருஷ்ணனை சரணாகதி அடையவேண்டும் என்று கூறாமல் பிறக்கும் குழந்தைகளை இறக்காமல் நான் பார்த்துக் கொள்வேன் என்று ஆணவத்துடன் கூறினாய் .உன் ஆணவத்தின் காரணமாக தான் அவரது பத்தாவது குழந்தை இறந்துவிட்டது என்று கூறினார்.. அதுகேட்டு அர்ஜுனன் தலை குனிந்தான். .அவனது அகம்பாவம் அழிந்தது .ஆனாலும் அவன் தான் செய்த சபதத்தின் படி அக்னியில் விழுந்து வைகுண்டம் போய் சேர்ந்தான். அங்கே மகாவிஷ்ணுவை கண்டு பகவானே எனது ஆணவம் அழிந்தது அந்தணருக்கு நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்..

அர்ஜுனன் சென்ற சமயம் மகாவிஷ்ணு ஒரு லிங்கத்தை கையில் வைத்துக் கொண்டு தியானத்தில் இருந்தார். அர்ஜுனன் கூறியதைக் கேட்டவுடன் அவன் கையில் அந்த லிங்கத்தை கொடுத்து இந்த லிங்கத்தை அந்தணர் வாழும் ஊரில் பிரதிஷ்டை  செய். அந்தணரையும் பிரார்த்தனை செய்ய சொல். இது சந்தான பாக்கியத்தை அருளக் கூடியது என்று கூறினார். அதன்படி அர்ஜுனன் பூலோகத்தில் இத்தலத்திற்கு வந்து அந்த லிங்கத்தை பெருமாளின் கையில் இருக்கும் படி வைத்து ஒரு சிலை வடித்தான். பெருமாளின் கையில் இருந்தாலும்  சிவனுக்குரிய ஈஸ்வர பட்டத்தையும் சேர்த்து பூர்ணத்திரயேஸ்வரர் என்ற பெயர் சுவாமிக்கு அமைந்தது.

இந்தக் கோவிலை பெருமாளே அமைக்க சொன்ன காரணத்தினால் கேரளாவில் முதன் முதலில் இங்குதான் ஓணம் பண்டிகை ஓணம் திருவிழா துவங்கும். இதன் பிறகுதான் மற்ற கோவில்களிலும் வீடுகளிலும் ஓணம் பண்டிகை தொடங்கும் .இது பெருமாள் அமைக்க சொன்ன காரணத்தினால் அவருக்கு கொடுக்கும் மரியாதை .இங்கு சுடர் விளக்கு என்று கூறப்படும் அணையா விளக்கு இருக்கிறது. இந்த கோவில் மூன்று அடுக்குகளைக் கொண்டது .ரிக் யஜுர் சாமம் என்ற வேதங்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. குழந்தை இல்லாதவர்கள் இங்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் நிச்சயமாக குழந்தைபாக்கியம் உண்டாகும் .காரணம் பெருமாளே இந்த கோவிலில் சந்தான பாக்கியம் ஏற்படும் என்று அர்ஜுனனிடம் கூறித்தான் லிங்கத்தை கொடுத்து ஆலயத்தை பிரதிஷ்டை செய்யச் சொன்னார்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறு உடன் காண்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ