அஷ்டாங்க யோகம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது யோகமுறை. தீட்சை. அஷ்டாங்க யோக முறை .எட்டு பகுதிகளை கொண்டது .அது என்னென்ன எவ்வாறு செயல்படுகிறது எவ்வாறு தீட்சை தரப்படுகிறது என்பதை பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

தீட்சை என்பது சீடர்களிடமிருந்து தீயவைகளை நீக்கி, சீலர்களுக்கு சக்தியையும், ஸித்தியையும் அளிப்பது. தீட்சை அளிப்பதில் எட்டுவகை உள்ளன. அவை

1. சகஷஸ்பீ : குரு தன்ன்னுடைய கண் பார்வையால் தன் சீடர்களுக்கு சக்தி கொடுத்தல்
இதற்கு உதாரணமாக மீனை எடுத்துக் கொள்ளலாம். மீன் முட்டை இட்டு தன் கண்களாலேயே முட்டையைப்  பார்த்து குஞ்சு பொரிக்கும்.இதற்கு நயன  தீட்சை என்றும் பெயர்.

2. ஸ்பர்ஸம்: சிஷ்யர்களின் தலையை தொட்டு ஆசிர்வதித்து, சக்திகளை அளிப்பது. இது தொடுதல் மூலம் தீட்சை அளிப்பது.உதாரணம் கோழி. கோழி முட்டை இட்டு தன்னுடனே  வைத்திருந்து அடைகாத்து குஞ்சு பொரிக்கும். இவ்வகை தீட்சைக்கு  ஸ்பரிச தீட்சை என்று பெயர்.

3.வாசா: குரு தன்னுடைய ஆசிர்வாதத்தினாலும், ஆசி வார்த்தைகளினாலும் சிஷ்யர்களுக்கு தீட்சை அளிக்கும் முறை. உடலால் மனதால் ஆசீர்வதிப்பது.இது வாசாவாகும்.

4. மானஸி: குரு மனப்பூர்வமாக மானஸீக முறையில் சிஷ்யர்களை ஆதரித்து அவர்களுக்கு ஆசி வழங்குதல். இது மனதால் எண்ணத்தால் ஆசீர்வதிப்பது. உதாரணம் ஆமை கடலில் இருந்து வந்து வெகுதூரம் வந்து மணலைத் தோண்டி முட்டையிடும் .முட்டையிட்டு மணலைப் போட்டு மூடி வைத்து பின் கடலுக்குள் எங்கோ சென்று விடும். ஆனால் எண்ணமெல்லாம் நினைவெல்லாம் முட்டை மேலேயே இருக்கும். மனதால் நினைவால் முட்டையை  குஞ்சு பொறிக்க வைப்பதற்கு மானஸி என்று பெயர்.

5. சாஸ்திரி: சாஸ்திரங்களை சிஷ்யர்களுக்கு கற்பித்து அதன் மூலம் தீட்சை அளிப்பது.அனைத்து சாஸ்திரங்களையும் கரைத்துக்குடித்து மாணவர்களுக்கு போதிப்பது.

6. யோகா: குரு யோக மார்க்கத்தின் மூலம் சிஸ்யர்களின் மனதில் புகுந்து தீட்சையளிப்பது. யோகம் யோகம் உடலில் ஆசன வகைகள் செய்வது ஒருவகை யோகம் . அதற்கு ஹட யோகம்  என்று பெயர்.மனதால் தியானத்தால் தியானிப்பது ஒருவகை.

7. ஹெளத்ரி கிரியாவதி: நெருப்பை உபயோகித்து ஹோமங்கள் செய்து சிஷ்யர்களைஆசிர்வதிப்பது. யோக குண்டம் மூலம் ஆவாகனம் செய்து சிஸ்யர்களை ஆசீர்வதிக்கும்  முறை.

8. ஹெளத்ரி ஞானவதி: மனதிலேயே ஹோமங்கள் செய்து மானசீகமாக சிஷ்யர்களை ஆசிர்வதிப்பது.  இது இது மானசீக முறை.பூசலார் பூசலார் நாயனார் என்பவர் மனதிலேயே கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார். இவ்வகை முறைக்கு மானசீக முறை என்று பெயர்.

இதுவே அஷ்டாங்க யோக முறை. அஷ்டம் என்றால் எட்டு .அங்கம் என்றால் பகுதி. 8 பகுதிகளைக் கொண்டதற்கு அஷ்டாங்க யோகம் என்று பெயர்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறு உடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ