சஃபாரி வரலாறு

மத்யமர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக ஆண் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஏன் ஆண் நண்பர்கள் அனைவருக்கும் மட்டும் வணக்கம் என்று கூறுகிறேன் என்றால் இங்கு நடக்கும் அலப்பறைகள் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது . என்ன என்று கேட்கிறீர்களா?? சற்று விரிவாக விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.

என்று மத்யமர் மீட்டிங் பிப்ரவரி 3ஆம் தேதி என்று அறிவித்த நாளிலிருந்து இன்றுவரை மத்தியமரில்  உள்ள பெண்கள் அனைவரும் எந்த சாரி எந்த சேலை என்ன மேட்சிங் ப்ளவுஸ் என்று தினமும் ஒரு பதிவாக போட்டுக்கொண்டு அதுமட்டுமல்ல அவர்களுக்குள் போன் செய்து சீக்கிரம் முடிவு எடுங்கள் நான் இந்த கலர் வாங்க வேண்டும் அதை நான் வாங்க வேண்டும் பிளவுஸ் தைக்க வேண்டும் என்று கடந்த பத்துப் பதினைந்து நாட்களாக மத்தியமரில் அவர்கள் போடும் பதிவுகள் தாங்க முடியாத அளவிற்கு உள்ளது.

அதுமட்டுமல்ல நண்பர்களே நமக்கும் அவர்களே என்ன டிரஸ் போட வேண்டும் என்று முடிவெடுத்து 40 45 வயது உள்ளவர்கள் பேண்ட் சர்ட் என்றும் 45 லிருந்து 55 வரை இருப்பவர்கள் டி ஷர்ட் என்றும் 55 லிருந்து 60 கல் உள்ளவர்களுக்கு வந்து பைஜாமா என்றும் 60லிருந்து 65 எழுவதற்கு மேல் வேட்டி சட்டை என்றும் அவர்களே முடிவு எடுத்துவிட்டார்கள். ஆதலால் நாம் இதை அவசியம் எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்.

ஆதலால் நான் நமது ஆண் நண்பர்கள் அனைவருக்கும் கூறிக் கொள்வது என்னவென்றால் நாமும் ஒன்றுகூடி ஒருமித்த கருத்துடன் ஒரே விதமான யூனிஃபார்ம் மாதிரி ஒரு டிரெஸ் போடலாம் என்று இருக்கிறேன். இதற்கு நான் தேர்ந்தெடுத்தது வயதையும் கண்டுபிடிக்க முடியாது பார்ப்பதற்கும் கண்களுக்கு நன்றாக இருக்கும் என்ற காரணத்தினால் நான் சஃபாரி போடுவது என்பதை முடிவு செய்திருக்கிறேன். இந்த ஃசபாரியின்  பின் ஒரு கதை உள்ளது .அதை இங்கு சொல்ல விரும்புகிறேன்.

நான் தற்பெருமைக்கோபுகழ்ச்சிக்கோ வஞ்சப்புகழ்ச்சிக்கோ  பெருமைக்கோ நான் கூறவில்லை .இந்தியாவில் முதன்முதலில் 1972ஆம் ஆண்டு சபாரியை அறிமுகம் செய்தவன் நான் தான் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன் .காரணம் அதுவரை வீட்டில் பெற்றோர்கள் துணி எடுத்துக் கொடுத்தார்கள் டெய்லரிடம் சென்று தைய்த்து வாங்கி வருவோம் .வேறுஒரு விவரமும் தெரியாது.

அதாவது பேண்டிற்கு எவ்வளவு எடுக்க வேண்டும் சர்ட்டுக்கு எவ்வளவு எடுக்க வேண்டும் என்ற விவரம் தெரியாது .நான் சுயமாக சம்பாதித்து முதன்முதலில் பேண்ட் சட்டை துணி எடுக்கும் பொழுது பேண்டுக்கும் சர்ட்டுக்கும் சேர்த்து மொத்தமாக துணி எடுத்து டெய்லரிடம் கொண்டு கொடுக்க அவர் என்ன இவ்வாறு எடுத்து விட்டீர்கள் என்று வினவ நான் வேறு வழியில்லை என்று சொல்ல இதே துணியில் சட்டைக்கும் நான் தைய்த்து விடுகிறேன் என்று கூறி முதன்முதலாக அவர் தைத்துக் கொடுக்க அதை நான் போட விமானப் படையில் உள்ள வீரர்கள் அனைவரும் அதை ஒரு வினோதமாக பார்க்க என்னை பார்த்து என் நண்பர்கள் எட்டு பத்து பேர் உடனே  உடனே நன்றாக இருக்கிறது நாங்களும் இது போல் தைத்து போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்ல நாங்கள் அனைவரும் அதை போட்டுக்கொண்டு ஆக்ரா வீதிகளில் நடக்க ஆக்ராவில் லோக்கல் பேப்பரில் தற்போதைய நாகரீகம் விமானப்படை வீரர்கள் உருவாக்கியது என்று இந்தியில் லோக்கல் பேப்பரில் எங்களுடைய போட்டோவோடு அது பப்ளிஷ் செய்ய அது எங்கெல்லாமோ பரவி இந்தி பீல்டில் அந்தக் காலத்தில் அனுபம்கெர் என்ற ஒரு நடிகர் இருந்தார் .அவர் ஒருமுறை பேட்டி அளிக்கும் பொழுது நீங்கள் உங்களது நாகரீகங்கள் துணி போடும் முறைகள் முதலியவற்றை எங்கிருந்து யாரிடமிருந்து இந்த நாகரிகத்தைக் கற்றுக் கொண்டீர்கள் என்று வினவ  அவர் நான் விமானப்படை வீரர்களிடம் இருந்து தான் நாகரீகத்தை கற்றுக்கொண்டேன் என்று கூற அது கேட்டு நாங்கள் அனைவரும் புளகாங்கிதம் அடைந்தோம் .இது நான் கூறுவது தற்பெருமையோ  தற்புகழ்ச்சியோ அல்ல நடந்த உண்மை கதை.

ஆதலால் ஆண் நண்பர்கள் அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் கூடுமான வரைக்கும் நாம் அனைவரும் முடிந்தால் யாரும் நமது வயதை கண்டு பிடிக்க முடியாது என்ற காரணத்தினால் சபாரி டிரஸ் போடுவோம் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன் .நான் எந்த சபாரி டிரஸ் போடப் போகிறேன் என்பதற்கான போட்டோவையும் இத்துடன் இணைத்துள்ளேன். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ