ஒரு சிறு கதை

பிப்ரவரி 3ஆம் தேதி மீட்டிங் இன்ஃபோசிஸ் ஹால்  டி. நகர் சென்னை.

கூட்டம் குறைவாக இருக்கிறதே என்று தலைவருக்கு சிறு வருத்தம் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று சற்று யோசிப்போமா??.

நான் நினைக்கிறேன் .அனைவருக்கும் முகநூல் வழியாகத்தான் பழக்கமே அன்றி வேறு பழக்கம் இல்லை. ஒரு சிலரைத் தவிர அனைவரும் நேரில் கண்டு உரையாடியோ அளவளவியோ பழக்கமில்லை. இதற்கு காரணம் தயக்கம் தயக்கம் தயக்கம். நாம் சென்றால் நம்மை மதிப்பார்களா ?? விட்டு விடுவார்களோ ??நமக்கு மதிப்பு கிடைக்காதோ?? என்ற ஒரு சிறு தாழ்வு மனப்பான்மையும் குற்ற உணர்ச்சியும் மனிதர்களுக்குள் தோன்றுவதால் தான் கூட்டம் வரவில்லையோ என்று எனக்கு ஒரு சிறு சந்தேகம் ஏற்படுகிறது.

இதைத் தவிர்ப்பதற்கு அனைவரும் தயக்கமின்றி வரவேண்டும் தக்க மரியாதை அனைவருக்கும் தரப்படும் என்பதை உறுதி செய்வதற்காக ஒரு சிறுகதையை இங்கு கூற விரும்புகிறேன். அங்கீகாரம் என்பது  மனிதர்களுக்கு மிகவும் முக்கியம் .அந்த அங்கீகாரம் குழந்தைகளுக்குக்கூட எவ்வாறு தர வேண்டும் என்பதை இக்கதையின் மூலம் கூற விரும்புகிறேன்.

பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு தன குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு... சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு. அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க... அப்பாவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க.. அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது.. நீங்க சொல்லிக் கொடுக்கலையான்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் சொன்னார் இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...

குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்... குழந்தை ஒன்னு சொல்லுச்சு, அப்போ ஆசிரியர் ம்ம்.. அப்படினார். குழந்தை ரெண்டு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம் அப்படின்னார். குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்.. குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு... அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு... அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்... ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்... இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும். மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார்.

ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான அங்கீகாரம் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது... எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் வாழ்கிறோம்.

இக்கதையை படித்த மத்யமர் நண்பர்கள் அனைவரும் தயக்கமின்றி அனைவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்பதை கூறிக்கொண்டு தயக்கமில்லாமல் அனைவரும் வரவேண்டும் என்று அனைவரின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ