குடியரசு தினத்திற்காக ஒரு கட்டுரை

இன்று குடியரசு தினம்

.இந்தியா குடியரசு   ஆகி 70  ஆண்டுகள் ஆகி விட்டது. .இந்த குடியரசு தினத்தில் நான் இந்திய விமானப் படையில் பணிபுரிந்த போது எனக்கு கிடைத்த சில மெடல்களைப் பற்றி இங்கு குறிப்பிடலாம் என்று இருக்கிறேன் .தயவு செய்து தாங்கள் அனைவரும்  சற்று செவிமடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் இதை இங்கு பதிவிடுவதற்கு முக்கிய காரணம் சகோதரி radha sriram அவர்கள்.அவர் சார் ‌ தங்களுக்கு  விமானப் படையில் கிடைத்த மெடல்களைப் பற்றி குறிப்பு எழுத வேண்டும் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார் .மேலும் வருகிற ஜனவரி 26ம் தேதி அவசியம் தாங்கள் தங்களுடைய மெடல்களை  பற்றிய பதிவு வரவேண்டும் என்று அன்பாக கேட்டுக்
கொண்டதற்கிணங்க இந்த பதிவை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

1. முதல் மெடல். WAR MEDAL (Sangram Medal).

பாகிஸ்தானின் கிழக்குப் பாகிஸ்தானில் பெங்காலிகள் அதிகளவில் வசித்து வந்தனர். அவர்கள் தங்களுக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்று கோரி பாகிஸ்தானில் போராட்டம் நடத்தினர் .அது உள்நாட்டு கலவரமாக வெடித்தது .அதிலிருந்து முஜிபுர் ரகுமான் அவர்கள் பெங்காலிகளுக்கு தலைவராக உருவானார் .அவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தார்.இந்திராகாந்தியும் உதவி கரம் நீட்டினார் .1971 ஆம் வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே யுத்தம் நடந்தது .மொத்தம் 14 நாட்களே நடந்த யுத்தத்தில் இந்தியா அமோக வெற்றி பெற்றது. பங்களாதேஷ் என்ற ஒரு தனி நாடு உருவானது. அந்த யுத்தத்தில் பங்கெடுத்தின்  காரணமாக விமானப்படையில் உள்ள அனைவருக்கும் சங்ராம்  எனப்படும் வார் மெடல்  கிடைத்தது. இந்த மெடல் 1972ம் வருடம் டிசம்பர் மாதம் வரை மிலிட்டரியில் இருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.அந்த மெடலின் போட்டோவை முதலில் இங்கு பதிவிடுகிறேன். இதை சற்று உற்றுப் பார்த்தீர்கள் என்றால் எனது பெயரும் எனது பதவியும் எனது சர்வீஸ் நம்பரும் நன்கு புலப்படும்(. Pl zoom and see.)

2. இந்திய சுதந்திர தின மெடல்.  

இந்தியா சுதந்திரம் அடைந்து 25வது ஆண்டை 1972ம் வருடம் அனைவரும் விமரிசையாக கொண்டாடினர்.இந்திய சுதந்திர தின வெள்ளிவிழா ஆண்டு கொண்டாட்டத்தின் காரணமாக மிலிட்டரியில் இருந்த அனைவருக்கும் சுதந்திரதின விழா வெள்ளி விழா மெடல் ஒன்று வழங்கப்பட்டது. நானும் 1972ல் விமானப் படையில் இருந்த காரணத்தினால் எனக்கும் அந்த மெடல் வழங்கப்பட்டது. அந்த போட்டோவையும் இங்கு இதனுடன் இணைத்துள்ளேன். இதையும் உற்றுப் பார்த்தீர்கள் என்றால் எனது பெயர் நம்பர் அனைத்தும் தெரியும்.

3. மூன்றாவது மெடல்.

LSM எனப்படும் ‌(Long service medal).

  இந்திய மிலிட்டரியில் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் என்று அனைவரும் குறுகிய காலத்திற்கு அதாவது ஐந்து வருட காலத்திற்கு மிலிட்டரியில் பணி செய்வார்கள் .அவர்களை ஷார்ட் சர்வீஸ் கமிஷன்  பெர்ஸன்ஸ் என்று அழைக்கும் வழக்கம் உள்ளது .ஆனால் எங்களைப் போல் நீண்ட காலம் பணி செய்பவர்களுக்கு 9 வருடம் கழிந்த பிறகு நீண்ட பணி செய்ததன் காரணமாக long சர்வீஸ் மெடல் என்று ஒன்று வழங்கப்படும்.. ஒன்பது வருட காலம் பணி செய்த அனைவருக்கும் இந்த மெடல் வழங்கப்படும். இது லாங்க் சர்வீஸ் மெடல் .அதனுடைய போட்டோவையும் இத்துடன் இணைத்துள்ளேன்.

இதையும் உற்றுப் பார்த்தீர்கள் என்றால் எனது பெயர் சர்வீஸ் நம்பர் அனைத்தும் இருக்கும். இதுவே நான் விமானப்படையில் சேவை செய்த போது வாங்கிய மெடல் களாகும். இந்த மெடல்களின் மொத்தத்தையும் முன்புறமும் பின்புறமும் உங்களுக்கு நன்கு தெரியும் படி எடுத்துள்ள போட்டோவையும் இத்துடன் இணைத்துள்ளேன். காண்க

இந்த குடியரசு தினத்தில் நாம் அனைவரும் இன மொழி மத பேதங்களை கடந்து அனைவரும் ஒற்றுமையாக நாட்டை காப்போம் என்று உறுதி ஏற்போம் .
ஜெய்ஹிந்த்.
வந்தே மாதரம் .
வாழ்க பாரதம் .
தாய் மண்ணே வணக்கம்.

ஃபோட்டோ 1 2 3  சங்ராம் மெடல் எனப்படும் வார் மெடல்.

ஃபோட்டோ 4  5 இந்திய சுதந்திர தின வெள்ளிவிழா மெடல்.

ஃபோட்டோ 6. 7. LSM எனப்படும் லாங் சர்வீஸ் மெடல்.

ஃபோட்டோ 8. 9. 10. என் பெயர் நம்பர் முதலியவை தெரியும். சற்று நன்கு உற்றுப் பார்க்க வேண்டும். காரணம் சிறிய எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஃபோட்டோ 11. 12. 13. அனைத்து மெடல்களின் முன்புறம் மற்றும் பின்புறம்.

(இந்த மெடல்களை ஏன் நான் தனித்தனியாக போட்டோவாக காண்பித்திருக்கிறேன் ஏன் நான் நெஞ்சில்  குத்தி போட்டோ எடுக்க வில்லை என்றால் இந்த மெடல்களை யூனிஃபார்மில் இருக்கும் பொழுதுதான்  நெஞ்சினில் குத்த வேண்டும்  .மற்றபடி நெஞ்சினில் யூனிபார்ம் இல்லாத நேரத்தில் குத்தக் கூடாது என்ற காரணத்தினால் தான் நான்  நெஞ்சினில் இதை அணிந்து போட்டோ எடுக்க வில்லை என்பதை தயவுசெய்து கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் மெடல்கள் அனைத்தும் ஒரு போலவே இருக்கும். ஏன் அதில் பெயர் நம்பர் முதலியவற்றை பதிவிடுகிறார்கள் என்றால் அவரவர்களுக்கு உரிய மெடல் அவரவர்கள் தான் அணிய வேண்டும். மற்றவர்கள் அணியக்கூடாது என்ற காரணத்தினால் தான் அந்த மெடல்களில் அவரவர்களது பதிவை நம்பரை பெயரை பதிவிடுகிறார்கள் .அவ்வாறு பெயரும் நம்பரும் இல்லை என்றால் அந்த மெடல்களை யார் வேண்டுமானாலும் அணியலாம் அல்லவா?? அதற்காகவே சம்பந்தப்பட்டவர்களின் பெயர் நம்பர் முதலியவற்றை  பதிவிடுகிறார்கள் .இது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ