துளசி மகாத்மியம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

துளசி மஹாத்மியம். சாலிக்ராம மஹாத்மியம்.

நான் இன்று எது எழுதலாம் துளசி மஹாத்மியம் கார்த்திகை மஹாத்மியம் ஸ்ரீனிவாச மஹாத்மியம் பண்டரிபுர மஹாத்மியம் என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது மனைவி வேகமாக வந்து இன்று நீங்கள் துளசி மஹாத்மியம் எழுதுங்கள் என்று கூறி விட்டு சென்று விட்டார்.

அதுவே வேதம் அதுவே சாஸ்வதம் அதுவே கட்டளை (மனசுக்குள் மத்தியானம் பூவா வேணுமில்ல) அதனால் மனைவி சொல்லே மந்திரம் என்று நினைத்து துளசி மஹாத்மியம் எழுத ஆரம்பித்தேன்.

இனி துளசி மஹாத்மியம்.

சங்குசூடன் என்று ஒரு அசுரன் பயங்கர தவம் செய்து யாராலும் அழிக்க முடியாத பல வரங்களைப் பெற்று விட்டான். ஆனால் உலகில் பிறந்த அனைவருக்கும் ஒரு நாள் மரணம் உண்டு அதனால் உனது மனைவி பத்தினித் தன்மையோடு இருக்கும் வரை உன்னை யாராலும் அழிக்க முடியாது உனக்கு மரணம் இல்லை என்று வரம் அருளினார் பகவான்.

பின் அவன் பிருந்தா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அந்த ஸ்திரீ மஹா புண்ணியவதி மஹா பதிவிரதை நிறைய பூஜை புனஸ்காரங்கள் செய்து கணவனே கண் கண்ட தெய்வம் என்றும் பதி பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என்று வாழ்ந்து வந்தாள்.

சங்குசூடன் தனக்கு உண்டான தவவலிமையால் அசுர குணத்தால் தேவர்களை எல்லாம் அடிமைப் படுத்தி தனது ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் உட்படுத்தி சொல்லொண்ணா பல இன்னல்களை விளைவித்தான்

தேவர்கள் அனைவரும் இவனது கொடுமை தாளாமல் பகவான் கிருஷ்ணரிடம் சென்று முறையிட்டனர். பகவானும் உடனே நான் யுத்தம் செய்து அவனை அழிக்கிறேன் என்று கூறி அவனுடன் யுத்தம் செய்தார். ஆனால் பல முறை யுத்தம் செய்தும் அவனை அழிக்க முடியவில்லை. என்ன காரணம் என்று அவர் ஆலோசித்து கொண்டு இருந்தார்.

அப்பொழுது திரிகால ஞானி நாரதர் க்ருஷ்ணனைக் காண வந்தார். அவர் அறியாத ரகசியம் ஏது. அவர் கண்ணனைப் பார்த்து என்ன கண்ணா ஏன் வாட்டமாக இருக்கிறாய் என்று கேட்டார். பின் க்ருஷ்ணன் சங்குசூடனைப் பற்றி கூறி அவனது அழிவிற்கு என்ன வழி என்று கேட்டார். அதற்கு நாரதர் அவன் மனைவி மஹா பத்தினி அவள் பத்தினித் தன்மையோடு இருக்கும் வரை அவனுக்கு அழிவில்லை என்று கூறினார்.

இது போதுமே கண்ணனுக்கு. மறுநாள் க்ருஷ்ணன் சங்குசூடனைப் போல் உருமாறி பிருந்தாவைக் காணச் சென்றார். பிருந்தா வந்திருப்பது தன் கணவன் என்று நினைத்து அவனுடன் இணைந்தாள். அவளது பத்தினிதன்மை பகளீகரம் செய்யப்பட்டது.

மறுநாள் க்ருஷ்ணன் சங்குசூடனுடன் யுத்தம் புரிந்து அவனைக் கொன்றார். அவன் இறந்தான் என்று கேள்விப்பட்டு பிருந்தா நம்பாமல் அங்கு வந்து பார்த்தபோது அனைத்தும் மாய கண்ணனின் லீலைகள் என்று புரிந்து கொண்டாள்.

உடனே கிருஷ்ணனுக்கு சாபமிட்டாள் என்னை வஞ்சித்த காரணத்தால் நீ கல்லாக மாறுவாய் என்று சாபம் கொடுத்தாள். கிருஷ்ணனும் உன் சாபத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.இன்று முதல் நேபாளத்தில் கண்டகி நதிக்கரையில் நான் சாலிக்கிராமக் கல்லாக மாறுவேன் என்று கூறி அவளுக்கும் சாபம் கொடுத்தார்.

நான் சாலிக்கிராமக் கல்லாக மாறுவேன் .என்னைச் சுற்றி படரும் செடியாக கரையில் நீ துளசி செடியாவாய் என்று கூறினார்.அவளும் அதை ஏற்று நான் துளசியாக மாறுவேன் ஆனால் உங்களைச் சுற்றியே படருவேன் என்று கூற உடனே பகவான் நீ இன்று முதல் துளசி பிருந்தா என்று அழைக்கப் படுவாய். உன்னால் நான் பூஜிக்கப் படுவேன் உன் தழைகளைக் கொண்டு என்னை பூஜிப்பவர்களுக்கு எல்லா நலமும் வளமும் தருவேன். அவர்கள் வாழ்வில் சிறந்து விளங்குவார்கள் .மேலும் நீ உத்தம பத்தினி என்று போற்றப் படுவாய் என்று கூறினார்.

அன்று முதல் இன்று வரை நேபாளத்தில் கண்டகி நதிக்கரையில் பகவான் சாலிக்கிராமக் கல்லாக படர்ந்து கிடக்கிறான்.அவனைச்சற்றி கரையில் துளசி செடியாக வளர்ந்து பகவானுக்கு தினமும் அரச்சிக்கப்படுகிறாள்.

இதுவே துளசி மஹாத்மியம் சாலிக்கிராம மஹாத்மியம் என்று கூறி நிறைவு செய்கிறேன்.

இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ