மத்யமர் ரெண்டாவது ஆண்டு விழா

இன்றைய தலைவர் பதிவைப் படித்த பிறகு நாட்டு நடப்பை பற்றிய ஒரு உண்மையை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு டெல்லியில் மத்திய உள்துறையில் சில நண்பர்கள் இருக்கிறார்கள் .அவர்களிடமிருந்து வந்த தகவலை இங்கு யாரும் அறியாவண்ணம் இரகசியமாக பதிவிடுகிறேன்.

 மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கை சென்றிருக்கிறது .அதாவது வரும் 19-ஆம் தேதி சென்னையில் மத்தியமர் மீட்டிங் நடக்க இருப்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்ற காரணத்தினால், ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்த போதிலும் ,சில பேக்டரிகளும் கடைகளும் வணிக நிறுவனங்களும் இயங்கும் .அவ்வாறு இயங்கும் பட்ஷத்தில் தொழிலாளர்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் ,அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், தொழில் முதலீட்டாளர்களுக்கும் ,வணிக நிர்வாகத்திற்கும் ,அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,. அதன் விவரம் என்னவென்றால் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும், தொழிற்சாலைகளும், வேண்டும் பேக்டனிகளும், மற்றும் இன்னபிற  நிர்வாகங்களும், மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் ,அவ்வாறு அந்த ஒருநாள் மூடப்பட்டு இருப்பதால் ஏற்படும் நஷ்டத்தை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும் என்றும் ,அந்த ஒரு தினத்திற்கான கூலியை அனைவருக்கும் அரசாங்கம் பே செய்யும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் முக்கியமாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ,கர்நாடகாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிச்சயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் ,அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காரணம் இந்த நாலு மாவட்டத்திலுள்ள பெரும்பாலானோர் சென்னை நோக்கி வருவதால் சென்னையில் போக்குவரத்து மிகவும் நெருக்கடியாக இருக்கும் என்ற காரணத்தினால் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் மாவட்ட காவல் அதிகாரிக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மீட்டிங் நடக்க இருக்கும் இன்போஸிஸ்  ஹால்அமைந்துள்ள தி.நகரில்  நெருக்கடி அதிகம் இருக்கும் என்ற காரணத்தினால் போக்குவரத்தை மாற்றி அமைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் மேதகு ஜனாதிபதி அவர்கள் மத்யமர் மீட்டிங்கிற்கு வருவார் என்று ஒரு முகாந்திரம்  உள்ள காரணத்தினால் பயங்கரமாக செக்கிங் செய்ய வேண்டும் என்றும், மெட்டல் டிடெக்டர் ஆங்காங்கு பொருத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னையில் உள்ள ஆட்டோ தொழிற்சங்க நிறுவனங்கள் அனைத்தும், டூரிஸ்ட் வேன் அனைத்தும், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, பஸ்,ஸ்டாண்டிலிருந்து விமான நிலையத்தில் இருந்தும், நாங்கள் மத்யமர் மீட்பிற்காக இலவசமாக சேவை செய்வோம் என்று கூறி ,வரும் பயணிகள் அனைவரையும் ஆங்காங்கு ஏற்றி இன்போசிஸ் ஹாலில்  இறக்கி விடுவோம்  என்றும்,யாரிடமிருந்தும் ஒரு பைசாவும்  கேட்க மாட்டோம் என்றும் அவர்கள் சங்கத்தில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள், என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

இதுமட்டுமல்லாது சென்னையில் உள்ள அனைத்து ஓட்டல் நிர்வாகிகளும் மத்யமர் மீட்டிங்கிற்கு வருபவர்களுக்கு இலவசமாக தங்கும் அறையும் ,உணவும் நாங்கள் அனைவரும் ஒருமித்த மனதுடன் அனைவரையும் வரவேற்று உபசரிப்போம்  என்றும் ,யாரிடமிருந்தும் ஒரு பைசாவும் வாங்க மாட்டோம் என்றும் சென்னை ஓட்டல் சங்கமும் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாது அன்று திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் ,மத்யமர் மீட்டிங் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும் என்ற காரணத்தினால், தயாரிப்பு நிறுவனத்தில் இருந்தும், மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் அன்றைய காட்சிகள் ரத்து செய்யப்பட உள்ளன என்றும், தயாரிப்பாளர்கள் நாங்கள் அன்று  ஷூட்டிங் வைக்க மாட்டோம் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய பெருமை வாய்ந்த மத்யமர் மீட்டிங் சீரும் சிறப்புமாக அனைவருடைய ஆதரவுடனும் ,ஒருமித்த கருத்துடனும் நலமாக நடக்க வேண்டுமென்று இறைவனை நான் மனதார உளமாற பிரார்த்திக்கிறேன்.

இத்தகைய சீரும் சிறப்பும் பெற்று நடக்க இருக்கும் மத்யமர் மீட்டிங்கிற்கு என்னால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, என்பதை இங்கு மிகவும் துயரத்துடனும், துன்பத்துடனும், வருத்தத்துடனும், கஷ்டத்துடனும் ,வேதனையுடனும் ,மன உளைச்சலுடனும்,பெருமூச்சுடன் மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் .ஒரு சிறு மாற்றம் ஏற்பட்டாலும், ஏற்பட வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கேட்டுக் கொண்டு, அன்றைய ஒரு தினம் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டு நான் வருவதற்கு ஆண்டவன் சகல உதவிகளும் செய்வார் என்ற நம்பிக்கை சிறிதளவு உள்ள காரணத்தினால் இன்னும் முழு அளவு நம்பிக்கை இழக்காமல் சற்றே மன வேதனையுடன் உள்ளேன்..

அவ்வாறு வர இயலாவிட்டால் மத்யமர் மீட்டிங் சீரும் சிறப்புமாக  நடைபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ