Astrology

தற்போது ஜோசியம் தான் முக்கிய டிரண்ட் ஆகி விட்டது போல் தோன்றுகிறது .காரணம் அனுராதா விஸ்வேஸ்வரன் ,யாழ் குழலி, அவரைத் தொடர்ந்து முரளிதர பாபு, தலைவர் சங்கர் ஆகியோர் அனைவரும் கடந்த ஒரு சில நாட்களாக, வாரங்களாக ஜோசியத்தின் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாம் சும்மா இருக்கலாமா?? நாமும் சற்று அதைப் பற்றி குறிப்பிட வேண் டாமா?? அத்தகைய ஜோசியத்தை பற்றி குறிப்பிடவே இந்தப் பதிவு.

நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது கண்ணால் கண்டதை பற்றி, ஞான திருஷ்டியில் உணர்ந்து கூறியதைப் பற்றி  அவர் கூறிய கூறிய அனைத்தும் பலித்ததைப் பற்றி, சத்தியமே உரைத்த ஒரு மனிதரைப் பற்றி.

கோவைக்கு அருகில் பேரூரில் பட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது.( இந்த ஆலயத்தைப் பற்றி இதன் புனிதத் தன்மையைப் பற்றி இது  தோன்றியதைப் பற்றி இதன் மகிமையை பற்றி இங்குள்ள பிறவாப்புளி இறவாப்பனை ஆகியவற்றைப் பற்றி பின்பு விளக்கமாக தெரிந்த கதை தெரியாத வரலாற்றில் கூறுகிறேன்). தற்போது ஜோஸியத்தைப் பற்றி மட்டும் கூறுகிறேன்.

பட்டீஸ்வரர் ஆலயத்தை வலமாக சுற்றி வந்தால் ஆலயத்தின் பின்புறம் முத்துக்குமாரசாமி முருகன் ஆலயம் உள்ளது. 1982 வாக்கில் அங்கு மணி குருக்கள் என்பவர் பூஜை புனஸ்காரம் முதலியவை செய்து கொண்டிருந்தார். அவருடைய வீடு ஆலயத்தில் இருந்து வெளிவந்து வலது பக்கத்தில் ஒரு பெரிய விநாயகர் லட்சுமியுடன் கூடிய கதவு போட்டிருக்கும் மணி குருக்கள் என்று அந்த காலத்தில் இருந்து இன்றுவரை பெயர் பலகை தொங்கிக் கொண்டிருக்கும்.

அப்பொழுது நாங்கள் பேரூக்கு அருகில் செல்வபுரத்தில் குடியிருந்தோம். நாங்கள் என்றால் நான் 1982ல் டெல்லியிலிருந்தேன். எனது குடும்பம் அங்கு இருந்தது. ஒரு நாள் எனது மூத்த அண்ணனும் எனது தங்கையும் பேரூர் ஆலயத்திற்கு சென்று உள்ளனர். அவர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு ஆலயத்தை சுற்றி முருகனை வழிபட நின்று கொண்டிருந்த பொழுது மணிகுருக்கள் அவர்கள் தீபாரதனை எல்லாம் காண்பித்து என் அண்ணனையும் தங்கையும் ஒரு நிமிடம் பார்த்தார் .தங்கையை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த பின் ஞானதிருஷ்டியில் என்ன உணர்ந்தாரோ தெரியவில்லை என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று வினவினார். அப்போது என் தங்கையின் வயது 20.

என் தங்கை டிகிரி இரண்டாம் வருடம் படித்து கொண்டிருக்கிறேன் என்று கூறினாள்.அவர் உடனே வேளை வந்துவிட்டது வேளை வந்துவிட்டது. கழுத்தை தயாராக வைத்துக் கொள் என்று கூறினார் .அண்ணனுக்கும் தங்கைக்கும் ஒன்றும் புரியவில்லை. காரணம் இப்போதுள்ள சூழ்நிலையில் தங்கைக்கு திருமணம் செய்வதற்கான எந்த ஒரு ஏற்பாட்டிலும் நாங்கள் இல்லை. ஆனால் என் அண்ணன் என்ன மாமா புரியவில்லை என்று கேட்டதற்கு வேளை வந்துவிட்டது உனக்கு மாங்கல்யதாரணம் ஆகப்போகிறது இன்னும் மூன்று மாதத்தில் உனது திருமணம் முடிந்து விடும் தயாராக இரு என்று கூறினார். என் அண்ணனும் தங்கையும் மாறி மாறி சிரித்தார்கள் . என் தங்கை படிக்கவேண்டும் என்று கூறினாள். என் அண்ணனும் அவ்வாறு கூறியதற்கு படிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும் வேளை  வந்துவிட்டது யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறி விட்டு அவரவர் வேலையை கவனிக்க சென்று விட்டார்கள். என் அண்ணனும் தங்கையும் சிரித்தவாறே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வீட்டில் அனைவரிடமும் கூறியவுடன் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து விட்டு விட்டு விட்டார்கள் ஆனால் காலம் தன் வேலையை செவ்வனே செய்ய தொடங்கியது. அவர் கூறிய ஒரு வாரத்திற்கு ஒன்றும் நிகழவில்லை. ஒரு வாரத்திற்கு மேல் என்ன நடந்தததோ என்னமோ யாரோ என் தங்கையின் ஜாதகம் வேண்டும் என்று கேட்க ,என் தாயார் ஜாதகத்தை கொடுக்க ,அது சேர்ந்தது என்று கூற, பெண் பார்க்க வருகிறோம் என்று கூறி, என்னென்னமோ கூற இப்பொழுது நாங்கள் திருமணத்துக்கு தயாராக இல்லை என்று எவ்வளவோ கூறியும் பெண் படித்துக் கொண்டிருக்கிறாள் படிப்பு முடியட்டும் என்று கூறியும் ஒன்றும் பிரயோஜனமில்லாமல் அந்த மஹான் கூறியது போல் இவர்கள்  ஜாதகம் பார்த்த நாளிலிருந்து 45வது நாளில் என் தங்கையின் திருமணம் நடந்து கொடுமுடிக்கு சென்று விட்டாள் (அங்கிருந்தவாறு மேற்கொண்டு படிப்பைத் தொடர்ந்தார் என்பது தனிக்கதை).தற்போது என் தங்கையின் இரு மகன்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். என் தங்கை ஈரோட்டில் கொங்கு வேளாளர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி இவளது திருமணத்திற்கு வந்து தான் நான் பெண் பார்த்து லீவ் இல்லாமல் அவசரகதியில் எனது திருமணத்தை முடித்தேன் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன் .அவ்வாறு எனது திருமணம் மிக விரைவாக நடப்பதற்கு காரணம் நான் என் தங்கையின் திருமணத்திற்கு வந்த நாட்களில் இருந்து குறைந்த நாளில் என் திருமணமும் நடைபெற்றது என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அதாவது ஜாதகம் பார்க்க வில்லை, ரேகை பார்க்கவில்லை ,ஜோசியம் பார்க்க வில்லை, நாள் நட்சத்திரம் பார்க்கவில்லை ,முகத்தை மட்டுமே பார்த்து ஞானதிருஷ்டியில் கூறியிருக்கிறார் மணி குருக்கள் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில்.தற்போது அவர் இல்லை. அவருடைய குமாரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த அதிர்ஷ்டமும் அவ்வாறு ஞானதிருஷ்டியில் கூறும் அறிவும்இல்லை என்பது வேறு விஷயம். அத்தகைய மஹான் ஒருவர் இருந்தார் என்பது மட்டும் உண்மை.

அதுமட்டுமல்லாமல் எனது ஒன்றுவிட்ட சகோதரர் மகனுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாமல் இருந்து அவர்களிடம் நான் அதுபற்றி கூற, அவர்கள் அவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கூறிய பரிகாரத்தை செய்த பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்தது என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இதிலிருந்து நான் கூற விரும்புவது என்னவென்றால் ஜோசியம் ஜாதகம் நான் முன்பே எழுதிய தெரிந்த கதை தெரியாத வரலாறு படி பாதி பலிக்கும் பாதி பலிக்காது என்றும் அதற்கான காரணத்தையும் நான் விரிவாக விளக்கமாக கூறியிருக்கிறேன். தற்போது ஞானதிருஷ்டியில் கூறியதைப் பற்றி என்ன சொல்வது என்பது பற்றி எனக்கு ஒன்றும் விளங்கவில்லை .ஆனால் முடியாததை நடத்திக் காட்டிய பெருமை அவரைச் சாரும் என்பதை நான் எந்த ஒரு வெட்கமும் இன்றி கூச்சமுமின்றி பயமும் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள இங்கு கடமைப்பட்டிருக்கின்றேன். தற்போது அது போன்ற மஹான்கள் ஜீவித்திருக்கிறார்களா?? என்பது பற்றி ஒரு விவரமும் தெரியவில்லை. சில மஹான்கள் கூறினால் உலகத்திற்கு வெளியே அவர்களைப் பற்றி தெரியாமல் இருந்த போதும் ஞானதிருஷ்டியில் கூறியதை பலிக்கும் அளவுக்கு திறமை பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நான் கண்கூடாக கண்ட உண்மை.உண்மை.உண்மை

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

முதல் ஃபோட்டோநான் என் அண்ணன் பேமிலியுடன்  இரண்டாவது ஃபோட்டோ என் தங்கை அவள் பேமிலியுடன்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ