மத்யமரும் நானும்

மத்யமரும் நானும்

மத்யமர் தலைவர் திரு  சங்கர் ராஜரத்தினம் அவர்களுடன் மத்யமர் ஆரம்பிப்பதற்கு முன்பே எனக்கு முகநூலில் நல்ல பழக்கம் இருந்தது. அவருடைய கதைகளை விரும்பிப் படிப்பவன் நான் .மத்யமர் தொடங்கியவுடன் ஜனவரி 2018 ல் என்னை அவர் மத்யமரில் இனைத்தார்.

எனக்கு மொபைலில் டைப் செய்வதோ அதிலும் தமிழில் டைப் செய்வதோ பத்தி பிரித்து போடுவதோ  பாரா பிரிப்பதோ ஃபுல் ஸ்டாப் கமா கொடுப்பதோ எங்கு நிறுத்த வேண்டும் எங்கு தொடங்க வேண்டும் என்பதோ போன்ற ஒன்றும் அறியாமல் இருந்தேன் நான்.

இவ்வாறு இருக்கும்பொழுது முதன்முதலாக உங்கள் வாழ்க்கையின் லட்சியம் பற்றி ஒரு போட்டி ஆரம்பமானது மத்யமரில்.

சரி நாம் நடந்த நிகழ்ச்சியை எழுதித்தான் பார்ப்போமே என்று நான் 1972ல் ஏர்போர்ஸ்ல் சேர்ந்த விதத்தை ஒரு கோர்வையாக எழுதினேன். பாரா பிரித்து  எழுதத் தெரியாமல் ஒரே நிகழ்ச்சியாக  ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சிகளை இடையில் சேர்க்கவோ ஒன்றும் தெரியாமல் நடந்ததை ஒரு கோர்வையாக நானும் எழுதினேன்.

இதைப் படித்த குஜராத் மேடம்  அனு மேடம் அவர்கள் கூட நன்றாக எழுதியுள்ளீர்கள் பாராவாக பிரித்து எழுதுங்கள் என்று கூறினார்கள் .தெரிஞ்சா தானே எழுதுறது. நான் முதன் முதலாக தமிழில் எழுதியதே பெரிய விஷயம் .இதுல பாரா பிரித்து எழுதுவது என்பது தெரியாத ஒன்று. நாளடைவில் என் மகன் மூலமாக அதை நான் கற்றுக்கொண்டேன்.

இங்கு முக்கியமாக கூற வேண்டியது என்ன என்றால் அவ்வாறு விஷயம் தெரியாமல் முதன்முதலாக நான் எழுதிய கட்டுரைக்கு எனக்கு POTW கிடைத்தது என்பதுதான் இதில் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இங்குதான் டர்னிங் பாயிண்ட் ஆரம்பம் .என்னை ஊக்குவித்து முதலில் எழுதிய கட்டுரைக்கே POTW  கொடுத்து என்னை குடத்தில் இருந்த விளக்கை குன்றின் மேலிட்ட  விளக்காக மாற்றிய பெருமை தலைவர் திரு சங்கர் ராஜரத்தினம் அவர்களையே சேரும் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன். இதில் இந்தக் கருத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை .

இதற்கிடையில் சில  POTW க்கும்  GEMமும் வாங்கி உள்ளேன் என்பதை இங்கு மிகவும் பெருமையாகக் கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

அதன் பிறகு பல போட்டிக்  கட்டுரைகளை
எழுதியுள்ளேன். நான் சந்தித்த சவால் என்ற கட்டுரையை எழுதும் பொழுது எனக்கு தலைப்பு கொடுக்க தெரியாது .அப்பொழுது திரு செல்வி அவர்கள் தலைப்பு எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதை எனக்கு போதித்தார்கள். அவர்களிடமிருந்துதான் # போட்டு தலைப்பு கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன் .ஆதலால் இக்கட்டுரையில் நன்றி நவிலல் தனிப்பட்ட முறையில்  Selvi Shankar அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் முதலில் எல்லாம் மனதில் தோன்றுவதை டைரியில் எழுதி வைத்துக் கொள்வேன் .பிறகு அதை நான் வாட்சப்பில் காப்பி செய்து அங்கிருந்து காப்பி பேஸ்ட் மூலமாக மத்யமரில் பதிவேன்  பிறகு என் முகநூலில் என் பக்கத்தில் நான் மட்டும் பார்க்கும் அளவிற்கு உள்ளதை பதிவு செய்தேன் .அப்போதெல்லாம் எனக்கு அதை எடிட் செய்வது என்பதெல்லாம் தெரியாது. அதுவும் நான் என் மகனிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்.

பிறகு நீண்ட வரலாறுகளை எல்லாம் எழுதுவதற்கு கஷ்டமாக இருந்தபோதும் ஒரு நாள் முழுவதும் முதலில் மனதில் தோன்றுவதை டைரியில் எழுதி பிறகு மத்யமரில அதை பதிவு செய்வேன் .திரு சந்திரமௌலி ராமமூர்த்தி அவர்கள் கூகுளில் வார்த்தையால் பதிவு செய்யலாம் என்று சொன்னதை ஏற்று அவரிடமிருந்து வார்த்தை மூலம் பதிவு செய்வதைக்  கற்றுக்கொண்டேன்.

பிறகு அனு மேடம் அவர்கள் மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள் அருமையாக எழுதுகிறீர்கள் என்று அவரும் மற்ற  அன்பர்களும் கூறியதை கேட்டு நாமும் நன்றாக எழுதுகிறோமா இதை இன்னும் சிறக்க செய்வது எவ்வாறு என்று பலமுறை எழுதி எழுதி பழக்கத்தின் அடிப்படையில் தற்போது எழுதுவதை சிரமமில்லாமல் அனைவரும் ரசிக்கும்படி எழுதக்கூடிய தன்மையை கற்றுக்கொண்டேன்.

ராமாயணம் மகாபாரதம் பாகவதம் கந்தபுராணம் ஏனைய புராணங்கள் அனைத்தையும் படித்து என் நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டது இல்லாமல் இன்று மத்யமரில் எழுதும் அளவிற்கு வாய்ப்பு கிடைத்து எனக்கும் அதில் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதை நினைத்து உவகையும் ஆனந்தமும் கொள்ளக்கூடிய அளவில் நான் என்று இருக்கிறேன் என்றால் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியதற்கான பெருமை தலைவர் சங்கருக்கும்  ஏனைய மத்யமர் நண்பர்களுக்கும் தான் சேரும்.

மத்யமர் இல்லையேல் நான் இல்லை என்று கூறும் அளவிற்கு என்னை உயர்த்திய மத்யமருக்கு """குடத்திலிட்ட விளக்கை குன்றிலிட்ட விளக்காய் மாற்றிய பெருமை மத்யமரையே சேரும்  என்று கூறி எனது பணிவான வணக்கத்தையும் நன்றியையும் பெருமையையும் வாழ்த்துக்களையும் மத்யமருக்கு கூறிக்கொள்கிறேன் வாழ்க வாழ்க மத்யமர்.

இறுதியாக நான் நாளை முதல் உஜ்ஜயினி ஜெய்ப்பூர் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்வதால் டிசம்பர் 3ஆம் தேதி வரை எனது பதிவு ஒன்றும் வராது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி

டிசம்பர் 3ஆம் தேதிக்கு மேல் வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ