ஒரு பெண்ணின் தற்பெருமை கதை

1982ம் வருடம் நான் ராஜஸ்தானில் உள்ள பிக்கானீர் இல் வசித்து வந்தேன் .அப்பொழுது அங்கு அருகில் நிறைய கிராமங்கள் உள்ளது. அந்த கிராமங்களில் ஒரு மிகவும் அருமையான கதையை அடிக்கடி அனைவரும் கூறிக் கொண்டிருப்பார்கள் .அது எனக்கு மிகவும் பிடித்தமான கதையும்கூட .அதை தற்போது இங்கு கூறலாம் என்று இருக்கின்றேன்.

அதாவது பிக்கானீரில் அனுமன் காத்தா என்ற கிராமத்தில் சுமேலி என்ற ஒரு பெண் வசித்து வந்தாள்..அவளுக்கு இயற்கையாக அமைந்த குணம் என்னவென்றால் அவள் எந்த ஒரு புதியது அணிந்தாலும் அதை ஊரில் உள்ளவர்கள் அனைவரும் பாராட்ட வேண்டும். அவ்வாறு பாராட்ட தவறினார்கள் என்றால் அதன் விளைவு மிகவும் விபரீதமாக இருக்கும். அவ்வாறு விபரீதமாக நடந்த ஒரு நிகழ்ச்சி என்ன என்று இங்கு காண்போமோ.

இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால் அந்தக் காலத்தில் ராஜஸ்தானில் அனைவரும் குடிசை வீட்டில் தான் வசித்து வந்தனர்.

ஒருமுறை சுமேலி புதிய பாவாடை தாவணி அணிந்து வீட்டிலிருந்து வெளியே வந்தார். உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள் சுமேலி  அருமையாக இருக்கிறது எங்கு வாங்கினாய் எப்பொழுது தைத்தாய்  என்று கேட்டார்கள். அதனால் மிகவும் பரவசமடைந்து ரோட்டில் நடக்க ஆரம்பித்தார். ஆனால் ஒருவர் தவறாமல் அவரிடம் கேள்வி கேட்கவும் மிகவும் மகிழ்ந்து சந்தோஷத்துடன் வீட்டிற்கு வந்தார்.

மற்றொரு நாள் புதிய சேலை ஒன்று உடுத்திக் கொண்டு சென்றாள். அதையும் அனைவரும் பாராட்ட மிகவும் மகிழ்ந்து போனாள். இவ்வாறு எந்த ஒரு புதியது அணிந்தாலும்  அனைவரும் கேட்டது இவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வாறு இருக்கையில் ஒரு நாள்.

புதிய தங்கத்திலான ஒரு ஜோடி வளையல்களை கையில் அணிந்து கொண்டு வெளியில் வந்தார். வாலண்டியராக பக்கத்து வீட்டு அக்காவிடம் சென்று கையை ஆட்டிக்கொண்டே அக்கா அக்கா என்றாள் . அவர்கள் அவளைக் கண்டுகொள்ளவில்லை .உடனே எதிர்த்த வீட்டிற்குச் சென்று அக்கா அக்கா என்றாள். அவளும்  கண்டு கொள்ளவில்லை. மிகவும் மனம் சோர்ந்து தெருவழியே அனைவரிடமும் கையை ஆட்டிக் கொண்டே சென்றாள். யாருமே அவருடைய வளையலை கண்டுகொள்ளவில்லை.

பொழுது சாய்ந்து விட்டது .யாருமே அவளை கண்டு கொள்ளவில்லை என்ற கோபாவேசத்துடன் வீட்டிற்கு வந்தாள். வீட்டிலுள்ள துணிமணிகள் பண்ட பாத்திரங்கள் போஸ்டர்கள் அனைத்தையும் நடுவீட்டில் இட்டு தீ பற்ற வைத்தாள். தீ மளமளவென்று கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லோரும் வந்து நீரை ஊற்றி குடிசை வீடு என்பதால் தன் வீட்டிற்கு பற்றி கொள்ளக்கூடாது என்ற கவலையினால் நீரை ஊற்றி அணைக்க ஆரம்பித்தனர். அனைவரும் கூட்டமாக கூடி விட்டனர்.

அப்பொழுது பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் அவள் சொல்கிறாள் என் வீடு முழுவதும் எரிந்து விட்டது. ஒன்றும் மிச்சமில்லை. இந்த வளையல் மட்டும்தான் மிச்சம் என்று தன் கையிலுள்ள வளையலை காண்பித்தாள். உடனே அந்தப் பெண் சுமேலி வளையல் மிகவும் அழகாக இருக்கிறது என்று செய்தாய் எப்படி செய்தாய் என்று வினவினாள். அதற்கு அவள் உடனே இப்பொழுதுதான் கண் தெரிந்ததா. இதை காலையிலேயே கேட்டிருந்தால் என் வீடு பற்றி எரிந்தது இருக்காதே என்று புலம்பினாள். அப்பொழுதுதான்அனைவருக்கும் தெரிந்தது வீட்டிற்கு தீ வைத்தது  சுமேலி தான் என்று. அன்றிலிருந்து சாதாரணமாக வெளியே வந்தாலே நீ நன்றாக இருக்கிறாய் என்று புகழ ஆரம்பித்தார்கள். காரணம் தன் வீடு பற்றிக் கொள்ளக்கூடாது என்ற சுயநலத்தினால்.

இந்தக் கதையை நான் இங்கு பதிவதற்கு முக்கிய காரணம் மத்திய மரின் மதிப்பிற்குரிய அட்மின் திரு ரோகிணி கிருஷ்ணா அவர்களால் தான் நான் இந்த கதையை இங்கு பதிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

நான் முகநூலில் 2002லிருந்து பதிவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறேன் 2008ல் எனது இன்சூரன்ஸ் கம்பெனியில் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு பக்திமார்க்கத்தில் முழுவதும் ஈடுபட்டு அனைத்து நூல்களையும் ஒன்று தவறாமல் படித்து பக்தி சம்பந்தப்பட்ட விஷயங்களை அன்றிலிருந்து நான் பதிவேற்றுகிறேன் எனது முகநூலில்.

2002ல் இருந்து பதிவேற்றம் எனக்கு அத்தனை likes comments கிடைப்பதில்லை ஒரு 2 comments 4 கமெண்ட் என்று கிடைக்கிறது அதை மீண்டும் அடுத்த ஆண்டு பதிவிடுவேன் இவ்வாறு நான் 2002ல் பதிவிட்டது 2004 2008 என்று தொடர்ந்து பதிவிடுகிறேன்.

அந்தக் காலத்தில் இருந்த எனது பதிவுகளை அனைவரும் காப்பி பேஸ்ட் செய்வார்கள் ஷேர் செய்வார்கள் அதைப்பற்றி நான் ஒன்றும் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.இன்றும் எனது பதிவினை அனைவரும் ஷேர் செய்கிறார்கள் நான் அவர்களிடம் ஏன் என்று ஒரு வார்த்தை இன்று வரை கேட்டதில்லை. ஆனால் தற்போது நான் ராமாயண பதிவை 2008-ல் இட்ட பதிவை நேற்று பதிவிட்டிருந்தேன். அதற்கு அவர்கள் இது உங்களுடையதுதானாஎன்று கேள்வி கேட்ட காரணத்தினால் தான் மனம் நொந்து இந்த பதிவை இங்கு பதிவிடுகிறேன்.

திரு துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய ராமாயண காவியத்தில் இறுதியில் காப்பியத்தில் வரும் அனைவருடைய பெயர்களையும் கிட்டத்தட்ட 200 பெயர்கள் இருக்கும் பதிவிட்டு அவர்களுடைய தகுதிகளையும் பராக்கிரமங்களையும் வெளியிட்டிருப்பார். அதிலிருந்து கூட நான் காப்பி செய்யாமல் என் நினைவுக்கு எட்டியதை மட்டுமே பதிவிட்டும் இவ்வாறு ஒரு கேள்வி கேட்டது எனது மனதை மிகவும் சஞ்சலப்படுத்தியது என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.

நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ