தசரதர் வரம் ராமனுக்கு

சீதாதேவி அக்னிப்ரவேசம் செய்து வெளி வந்தபோது , வானிலிருந்து அக்னியுடன் பல தேவர்கள் வந்தார்கள் ; 
அவர்களுள் தசரத சக்ரவர்த்தியும் இருந்தார் ; 
மகனான இராமனைக்  கண்டு புளகாங்கிதம் அடைந்த அவர் , பின் ,
                        '' இராமா ...இரண்டு வரம் தருகிறேன் ..கேள்'' 
என்றார் இராமனிடம் ...
( மனைவியரில் கைகேயியும் , மகன்களில் இராமனும் அவருக்கு பிரியமானவர்கள் ....கைகேயிக்கு ஏற்கனவே இரண்டு வரங்கள் கொடுத்திருந்தார்.....அது அனைவரும் அறிந்ததே........ எனவே , தனது மன உறுத்தலைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு , இப்போது இராமனுக்கு இரண்டு வரங்களை அளிக்க வேண்டியே , இவ்விதம் கேட்டார் தசரத சக்ரவர்த்தி)
                        தந்தையின் கேள்விக்கு பதிலளிக்கும் பொருட்டு  இராமன்,  
 '' ..தந்தையே ...உங்களால் மனைவியல்ல என்று நிராகரிக்கப்பட்ட என்  அன்னை கைகேயியும் , தீயவன் என்று தள்ளப்பட்ட பரதனும் , மறுபடியும் என் தாயும் , தம்பியுமாக உங்களால் ஏற்கப்பட வேண்டும் !'' 
என்று கேட்டார் ;
             " சரி அவ்வண்ணமே அளித்தேன் ! ஆனால், இவ்விரண்டும் ஒரே வரம் தான் ....! 
இன்னொரு வரத்தை நானே தருகிறேன் ! ...அதாவது,  கைகேயியின் வரம் தந்த அதிர்ச்சியால் மரணமடைந்த எனக்கு , ஆயுட்காலம் இன்னும் மீதம் இருக்கிறது .! ...உனது அவதார நோக்கம் பூர்த்தியானதும்  .....அதாவது , இராவண சம்ஹாரம் முடிந்ததும் ,  நீ விரைவில் வைகுண்டம் திரும்பி விடுவாய்...!      இராவண சம்ஹாரமும் முடிந்து விட்டது !                ஆனால், அயோத்தி மக்களுக்கோ ,   உனது ஆட்சியில் .. .நீண்ட காலம் வாழ வேண்டும் என்று ஆசை !  
             ஆக,  அயோத்தி மக்களின் அபிலாட்சையை பூர்த்தி செய்யும் பொருட்டு , மீதமுள்ள என் ஆயுளை உனக்கு தந்தேன் !    இராம ராஜ்ஜியத்தில் மக்கள் சுபிக்ஷமடையட்டும்! '' 
என்றார் தசரதர்..
                      பின்னர்   இராமபிரானும் அயோத்தி வந்தார் ; 
பட்டாபிஷேகமும் நடந்தது  ...! 
          சீதாபிராட்டி கர்ப்பமானாள் ....
            ஒரு நாள் , நகர சோதனையின் போது ஒரு சலவைத் தொழிலாளி , கோபமாக தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்த போது, பேச்சினூடே , 
           ".  பெண்ணே...!     இராவணன் அரண்மனையிலே பல மாதம் இருந்த சீதையை , இப்போது இராமர்  வைத்து குடித்தனம் பண்ணுகிற மாதிரி , உன்னை நானும் சேர்த்துக்குவேன்னு நினைக்காதே '' 
என்று சொல்வதை கேட்டார் ; 
             மறுகணம் அவர் மனதிற்குள் ஒரு பொறி! 
          ' நமது ஆயுள் முடியப் போகிறது !   இனி தந்தையின் ஆயுளில் தான் வாழப்போகிறோம் .! .. அப்போது சீதை ' நாதா ' என்று என்னை  அழைத்தாலும் , நான் அவளை ' ப்ரியே ' என்று அழைத்தாலும் அது  மிக அபத்தமாக இருக்குமே ' என்று குழம்பிய இராமனுக்கு , சற்று முன்பு சலவைத் தொழிலாளியின்  இந்த பேச்சு மிக பொருத்தமான  காரணமாய் பட்டது ! 

                 நிறைமாத கர்ப்பிணியான சீதை , லக்ஷ்மணன் மூலமாக காட்டுக்கு அனுப்பப்பட்டாள்.....
அங்கேயே சீதை , லவ- குசர்களை பெற்று வளர்த்தாள்....
பின், நாட்டின் ஷேமத்திற்காக வேண்டி செய்யப்படும் அச்வமேதயாகத்திற்காக விடப்பட்ட குதிரை , 
 ( லவ- குசர்கள் தங்கியிருக்கும்)
 ஆஸ்ரமத்தை நெருங்கும் போது , அதைப் பிடித்து லவ- குசர்கள்  கட்டிப் போட்டார்கள் ...
பின், சண்டை நடந்தது ....
   ஒரு கட்டத்தில், போரிடுவது தன் குமாரர்கள் தான் என்பதை இராமன்  தெரிந்து கொண்டார் ......
                   ஒரு கட்டத்தில்,  உணர்ச்சி வசப்பட்ட இராமன்,  சீதையை தன்னுடன் அழைத்துச் செல்ல ஆசைப்பட .....
சீதையோ, புகுந்த குலத்து ஒழுக்கத்தை காப்பாற்றும் பொருட்டு , பூமி வெடிப்பில் மறைந்தாள் !
                                ஆக , 
' தசரதனின் ஆயுளில் வாழும் இராமனோடு சீதை  ஒரு நாள் கூட வாழவில்லை ' .
துளசிதாசர் தனது ' கவிதாவலியில்' இப்படி கூறுகிறார் ...
கம்பரும் , வால்மீகியும் சொல்லாத சீதா- ராமர்களின் ஒழுக்க கட்டுப்பாடு இது !

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ