திருப்பு முனை

# திருப்பு முனை# 

1971ம் வருடம் நான் பியூசி முடித்து டைப்ரைட்டிங் முடித்து மேற்கொண்டு படிப்பதா?? வேலைக்கு செல்வதா ??என்று யோசித்துக்கொண்டிருந்தேன் .நல்ல மார்க் வந்தால் டிகிரி படிக்கலாம். இல்லை என்றால் வேலைக்கு செல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில்,

எனது நண்பன் ஏர்போர்ஸ்க்கு ஆள் எடுக்கிறார்கள் டூரிஸ்ட் பங்களா கோயமுத்தூரில். நீ சென்று முயற்சி செய்து பார் என்று கூறினான்.

அப்பொழுது காலேஜ் தொடங்காத நேரம். அட்மிஷன் தொடங்காத நேரம். நான் கோயமுத்தூர் சாய்பாபா காலனியில் ஒரு சிறிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது எனது சம்பளம் மாசம் 90 ரூபாய்.

ஆனால் வரவு-செலவு செக் பணம் அனைத்தும் என் பொறுப்பில் தான் இருந்தது.உடனடியாக லீவும் எடுக்க முடியாது. அனுமதியும் கேட்க முடியாது .என்ன செய்வது !!என்று இரண்டுங்கெட்டான் நிலையில் இருந்தபொழுது, எனது சகோதரர் துணிந்து நீ செல், நடப்பது நடக்கட்டும் என்று கூறினார். அதுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

உடனே சாய்பாபா காலனியில் இருந்து நடந்து (அப்பொழுதெல்லாம் அவ்வளவாக பஸ்வசதி கிடையாது) டூரிஸ்ட் பங்களா சென்றால் 15 ஆயிரம் பேருக்கு மேல் இருந்தார்கள்.

இவர்களுடன் போட்டி போட்டு நான் ஜெயிப்பதா என்று திணறிக் கொண்டிருந்த போதிலும் ,மனம் சற்றும் சோர்வடையாமல், பல நாட்கள் போட்டிக்குச் சென்று, அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று  இறுதியாக 16 பேர் மட்டும் தேர்வாகி (அதில் நானும் ஒருவன் ) இந்திய விமானப் படையில் சேர்ந்தேன் என்பதை இங்கு பெருமையாகக் கூறிக் கொள்கிறேன்.

இதுவே எனது வாழ்வில் அமைந்த பெரிய திருப்புமுனை.

நான் தினமும் தேர்வுக்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது ,நான் வேலை செய்த இடத்திலிருந்து தினமும் வந்து கேட்டு இரண்டு நாட்கள் ஆகிய பிறகு நான் அந்த சாவியை செக் பணம் முதலிய வைத்திருக்கும் சாவியை கொடுத்து விடுங்கள் என்று கூற மறுநாள் அவர்கள் வந்தவுடன் என் தாயார் அவரிடம் சாவியை கொடுத்து விட்டார்கள். பிறகு அனைத்தும் முடிந்து ஒரு நாள் சென்று அவரிடம் மன்னிப்பு கோரி 15 நாட்கள் அங்கு வேலையில் தொடர்ந்து அதற்குப் பிறகு சென்னையில் இருந்து எனக்கு ஆர்டர் வந்தவுடன் நான் சென்னைக்குச் சென்று மெடிக்கல் செக்கப் முடிந்து அங்கிருந்து நேராக பெல்காம் ட்ரைனிங் சென்றேன் என்பதைக் கூறிக்கொள்கிறேன்.

இந்த திருப்புமுனை என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ