இந்திரன் அகலிகை யை அடைந்த வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு. 

இன்று நாம் காண
 இருப்பது அகலிகையை அடைய இந்திரன் ஏன் விரும்பினார். அகலிகையின் பிறப்பு எவ்வாறு நிகழ்ந்தது. கௌதமர் எவ்வாறு அகலிகையை அடைந்தார் என்பது போன்ற சில முக்கியமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் நடந்தது பாற்கடலை கடைந்து பகவான் கூர்மாவதாரம் எடுத்து தன் முதுகின் மேல் மந்தார மலையை நிறுத்தி வாசுகியை மத்தாக கொண்டு கடைந்த பொழுது ஆலகால விஷம் வந்து அதை ஈசன் அருந்த, பிறகு அனைத்தும் நல்ல பொருள்களாக வந்தது.

அப்பொழுது அகலிகையும் பாற்கடலிலிருந்து பேரழகியாக சொரூப சுந்தரியாக தோன்றினாள். அதைக்கண்டு அப்பொழுது இந்திரனும் கௌதமரும் ஒருசேர அவளை அடைய விருப்பம் தெரிவித்தனர்.

அப்பொழுது அங்கு தோன்றிய பிரம்மன் நீங்கள் இருவரும் ஒருசேர அவளை அடைய விரும்புவதால், நான் உங்களுக்குள் ஒரு போட்டியை வைக்கிறேன். அதில் யார் வெற்றி பெறுகிறீர்களோ அவர்களே அகலியை அடையத்தக்கவர்கள் என்று கூறினார் .போட்டி என்னவென்றால்!!?

எந்த ஒரு பசுமாடு முகம்  முன்னும் பின்னும் உள்ளதோ அதை மூன்று முறை வலம் வந்து எவர் முதலில் வருகிறார்களோ அவர்களே  அகலிகையை அடையத் தக்கவர் என்று கூறினார்.

பசுமாட்டிற்கு முன்னும் முகம் பின்னும் முகம் இருவரும் மிகவும் யோசிக்க தொடங்கினார்கள்.இருந்த போதிலும் தன்னுடைய மேக வாகனத்தை எடுத்துக் கொண்டு இந்திரன் உலகை சுற்றி வலம் வந்து நான் கண்டுபிடித்து வருகிறேன் என்று தேடத் தொடங்கினார்.

கௌதமர் மிகுந்த யோசனைக்குப் பிறகு முன்னும் பின்னும் முகமுள்ள பசுவைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லையே. அப்படிப்பட்ட பசு எங்கே இருக்கிறதோ?? இல்லையோ?? அது போன்ற பசு உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும் நாம் அதனை எவ்வாறு தேடி கண்டுபிடிக்க முடியும். மேலும் நாம் நடந்தே சென்றபடி இந்த உலகை சுற்றி வரவும் எவ்வளவு காலம் ஆகும் !!என்று மிகவும் மனம் நொந்து நமக்கு அகலிகை கிடைக்க மாட்டாள் என்று நினைத்து பிறகு ஒருவாறு மனம் தேறி, வனத்திற்கு சென்று தவம் செய்யத் தொடங்கினார். அப்போது அங்கு நாரதர் தோன்றினார்.

நாரதரைக் கண்ட உடன் கௌதம முனிவர் அவரை  வணங்கி அன்புடன் தழுவிக்கொண்டார். பின்னர் நாரதர் அவரிடம் உங்களுடைய உள்ளக்கிடக்கையை நானறிவேன். உங்கள் மனக்கவலையை மாற்றுகிறேன் .இங்கு சற்று தூரத்தில் ஒரு மாட்டுத் தொழுவம் உள்ளது .அங்கு ஆயிரக்கணக்கான பசுக்கள் இருக்கின்றன. அங்கு ஏதாவது ஒரு பசு அதுபோல் இருக்கிறதா பார்க்கலாம் என்னுடன் வாருங்கள் ,என்று கூறி, அவரை அழைத்து அந்த மாட்டுத்தொழுவத்திற்கு சென்றார்.

அவர்கள் இருவரும் அங்கு மாட்டுத்தொழுவம் முழுவதும் தேடினர் ஒன்றும் அதுபோல் காணவில்லை. அப்பொழுது கௌதமர் மகரிஷி நான் இரண்டு முகம் உள்ள கன்றினை பார்த்திருக்கிறேன். அது கருவில் ஏற்பட்ட மாற்றம் .ஆனால் முன்னும் பின்னும் முகமுடைய பசுவை இதுவரை பார்த்ததில்லை என்று கூறினார். அதுபோன்ற பசுவை காணாமல் மிகவும் சோர்வுற்று மனம் வருந்தினார் அப்போது நாரதர் அதைக்கேட்டு மெல்ல சிரித்து நண்பரே அதோபார் முன்னும் பின்னும் முகமுள்ள பசு என்று ஒரு கருவுற்றிருந்த பசுவினை காண்பித்தார்.

அந்த சமயத்தில் ஒரு பசு கருவுற்று தன் கன்றை ஈன்று கொண்டு இருந்தது. அப்பொழுது கன்றின் முகம் பின்பக்கமாக வந்து கொண்டிருந்தது. அதைக்கண்ட கௌதம மகரிஷி முன்னும் பின்னும் முகமுள்ள பசு இதுவே என்று அதை மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தார்.

அதைக் கண்டு மிகவும் மகிழ்ந்து பிரம்ம தேவருடைய கேள்வியின் அர்த்தத்தை புரிந்து கொண்டு நாரதரையும் அழைத்துக்கொண்டு பிரம்மலோகம் சென்றார்.

பிறகு பிரம்ம தேவரிடம் சென்று தான்கண்ட விவரத்தை கூறினார் .நாரதர் அதற்கு நானே சாட்சி என்று கூறினார். அதைக்கேட்டு பிரம்மதேவர் மிகவும் மகிழ்ந்தார்.

பின்னர் பிரம்ம தேவர் நாரதர் முன்னிலையிலேயே அகலிகையை கெளதம முனிவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவ்வாறாகத்தான் கௌதம முனிவர் அகலிகை யின் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை சுற்றியிருந்த தேவர்கள் அனைவரும் ஆசீர்வதித்து நல்லாசிகள் வழங்கினார்கள். நாரதரும் இருவருக்கும் ஆசி கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

தன்னுடைய விருப்பம் நிறைவேறி விட்ட மகிழ்ச்சியில் அகலிகையை அழைத்துக்கொண்டு கௌதமர் பூலோகம் வந்து சேர்ந்தார்.

மேக வாகனத்தில் உலகம் முழுவதும் சுற்றித் திரிந்த இந்திரன் அதுபோன்ற ஒரு பசுவை காணாமல் சோர்வடைந்து மன வருத்தத்துடன் பிரம்மதேவரிடம் வந்து அகலிகை கௌதமர் திருமணம் நடந்து முடிந்துவிட்டது அறிந்து ஆத்திரப்பட்டு வேறு ஒன்றும் செய்யமுடியாமல் மனதில் அகலிகையை பற்றிய எண்ணத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தான்.

அகலிகையை அடையத்தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் ,ஒருநாள் சேவலை  அதிகாலையில் கூவச் செய்து கௌதமரை இருட்டில் நீராட செல்ல செய்து அகலிகையின் குடிலுக்குச் சென்று அவளை அடைந்து பின் சாபம் பெற்றான். இதுவே அகலிகையை இந்திரன் அடைவதற்கான அடைந்ததற்கான வரலாறு.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறு உடன் சந்திப்போம்.

(கீழே உள்ள பசுவின் முதுகில் சுயமாக ஓம் என்ற எழுத்து உள்ளது
 இது சிருங்கேரி, மடத்தில்  உள்ள கோசாலையில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோ)

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ