பத்து வரிக் கதை

#10 வரிக் கதை#.

கண்ணீரும் கம்பலையுமாக விசும்பலுடன் படுக்கையில் விழுந்தாள் பர்வதவர்த்தினி .

என்ன காரணம் !!?அவளுக்கு ஒரே மகன். சீராட்டி பாராட்டி தாலாட்டி மிக்க அன்புடனும் பாசத்துடனும் வளர்த்தாள்.

 அவ்வளவுதான் பிறவியிலிருந்தே மேல்நாட்டு மோகத்தை ,மேல்நாட்டு ஆதிக்கத்தை, செயலை, செய்கையை, அவன் ரத்தத்தில் செலுத்தினாள்.ஆங்கிலத்தில் படிக்க வைத்தாள்.  வீட்டில் ஆங்கிலம் தான் பேசவேண்டும் என்று ஊக்குவித்தாள். ஆங்கில மோகத்தை அளவுக்கு அதிகமாகவே ஊட்டினாள். அவள் நினைத்தது யாவும் நடந்தது. மகன் நன்றாகப் படித்து தேர்ச்சி பெற்று அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் வேலை. கை நிறைய சம்பளம். தேவைக்கு அதிகமாகவே அம்மாவிற்கு அனுப்பி கொடுத்தார்.பின் ஏன் அழுகிறாள்.

 மகனுக்கு வயதாகிவிட்டது. திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம். ஆனால் அவனிடம் இருந்து ஓலை வந்தது. நாளை திருமணம் என்று!!. அதற்காக மகிழாமல் ஏன் அழுகிறாள். 

 திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சாஸ்திர சடங்கு சம்பிரதாய பண்பாடு கலாச்சாரப்படி நடக்கவேண்டும் .ஆனால் இவள் மகனோ ஜேம்ஸ் பிரிக்ஸ் என்ற ஆங்கிலேயனை ஒரு ஆணை லிவ்விங் டு கெதர் ஆக இருந்தார்களாம், பிடித்துவிட்டதாம், திருமணமாம் . அவனுக்கும், அவனுக்கும், திருமணமாம் .அவள் என்ன செய்வாள்!!?

 பர்வதவர்த்தினி இன்று அழுகிறாள். பர்வதவர்த்தினி நேற்று வரை அவனுக்கு ஆங்கில மோகத்தை ஊட்டு முன்பு சிந்தித்தாளா!??.தன் வினை தன்னைச் சுடும் .அவளே அவளுக்கு வைத்து கொண்ட ஆப்பு .இன்று அழுது என்ன பயன் .விதி அவள் வாழ்க்கையில் விளையாடுகிறது.

 10 வரி கதை இனிதே நிறைவுற்றது. நன்றி.

(Sumathi Manjunath அனைவருக்கும் ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன் . பர்வதவர்த்தினி யின்கதை உண்மையில் நடந்த ஒன்று. தற்போதும் பர்வதவர்த்தினி அவர்கள் சென்னையில் நங்கநல்லூரில் வசிக்கிறார்கள் நன்றி)

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ