உறங்காவில்லி கதை

தெரிந்த கதை. தெரியாத வரலாறு.

 இன்று நாம் காண இருப்பது உறங்கா வில்லி என்ற சீடரின் கதை. இவர் ராமானுஜரின் முக்கியமான சீடர்களில் ஒருவர் .இவர் மேல் ராமானுஜர் மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருந்தார். இவர் வேட்டுவ குலத்தை சேர்ந்தவர்.இவர் மேல்
அன்பும் பாசமும் வைத்திருந்தது ஏனைய சீடர்களுக்கு துளியும் பிடிக்கவில்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவரை பற்றி குற்றம் குறை கூறிக் கொண்டிருந்தார்கள். மேலும் ராமானுஜர் அவரிடம் அன்பாக பழகுவதும் பேசுவதும் அவர் வீட்டில் உண்பதும்  இவர்களுக்கு துளியும் பிடிக்கவில்லை. எப்படியாவது அவருடைய உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்று சீடர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். அவ்வாறு இருக்கையில் ஒருநாள்.

ஒருமுறை இவருடைய சீடர்களில் ஒருவருடைய காவியாடை கிழிந்து இருந்தது. அவ்வாறு கிழிந்து இருந்த ஆடையை கண்ட  சீடர்  மற்றவர்கள் மேல் சந்தேகப்பட்டு குற்றம் கூறிக் கொண்டிருந்தார். அவர்களுக்குள் ஒரு ஆடை கிழிந்து இருந்தால் தங்களுக்குள் வாதம் செய்து கொண்டும் அடித்துக்கொண்டும்  இருந்தார்கள்.ஒருவர் மற்றவர் மேல் பழி கூறிக்கொண்டிருந்தார். அப்போது ராமானுஜர் இதுதான் நல்ல சந்தர்ப்பம் நமது உறங்காவில்லியின்  பெருமையை இவர்களுக்கு புரியவைக்க தகுந்த  சமயம் என்று முடிவு செய்தார்.

தம்முடைய வைணவ சீடர்களை அழைத்துக் கொண்டு உறங்காவில்லியின்  வீட்டிற்கு சென்றார்கள்.
 அப்போது அவர் வீட்டில் இல்லை .அவரின் மனைவி பொன்னாயி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ராமானுஜர் சீடர்களிடம் அவளது வைரத்தோடு மற்றும் நகைகளை கழற்றி வரும்படி கூறினார் .இவர்கள் நகைகளை கழட்டும் சமயம் பொன்னாயி  பார்த்துவிட்டு சீடர்கள் மேலுள்ள மரியாதையால் அசையாமல் படுத்திருந்தார் ஒரு பக்கமாக. பிறகு அவர்கள் ஒரு பக்கம் கழட்டியதும் அவர்கள் மற்றொரு பக்கத்தில் உள்ள நகைகளையும்  கழட்டி கொள்ளட்டும் என்று  நினைத்து மறுபக்கம் திரும்பிப் படுத்தார். உடனே அவரின் சீடர்கள் அவள் விழித்துக் கொண்டதாக எண்ணி பயந்து வெளியே ஓடிவந்து கிடைத்த நகைகளை ராமானுஜரிடம் கொடுத்தார்கள்.

சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய உறங்காவில்லி நடந்ததை அறிந்து கொதித்துப் போய் மனைவியை திட்டிவிட்டு இனி உன்னுடன் என்னால் வாழ முடியாது என்று கோபமாகக் புறப்பட்டுவிட்டார்.

உடனே அவர் மனைவி நான் என்ன தவறு செய்தேன் .அவர்களுக்கு நல்லதுதானே செய்தேன். என்று கூற இல்லை நீ தவறு செய்துவிட்டாய். அவர்களாக கழட்டி கொள்ள விடாமல் அவர்களுக்கு வசதியாக இருக்கட்டும் என்று நீ திரும்பி படுத்ததால் நீ முழித்துக் கொண்டதாக நினைத்து பயந்து அவர்கள் போய்விட்டார்கள் .பாகவதர்களின் தேவைக்கு உதவாமல் விரட்டிவிட்டாயே  பாவி !!என்று ,மனைவியிடம் கோவித்துக் கொண்டார். அவர் மனைவி எவ்வளவு கூறியும் அவர் அதை ஏற்கவில்லை.

உடனே மனைவியும் அவரும் ராமானுஜரிடம் வந்து முறையிட வந்தார்கள் .அவர்களின் நகைகளை எடுத்து அவர் முன்வைத்த ராமானுஜர் சீடர்களை அழைத்தார் .அவர்களைப் பார்த்து விலை உயர்ந்த நகைகளை பற்றி கவலைப்படாமல் நமக்கு உதவ முடியாமல் போயிற்றே என்ற துக்கமும் அதன் காரணமாக மனைவியே வேண்டாம் என்று ஒதுக்கிய வில்லியின் அன்பையும் ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள் .நீங்கள் ஒரு ஆடை கிழிந்து அதற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டீரகள். இப்பொழுது கூறுங்கள் உங்களில் யார் சிறந்தவர்கள் .என்னுடனே இருக்கும் வைணவ  சீடர்களான நீங்கள் உயர்ந்தவரா ??உறங்காவில்லி உயர்ந்தவரா ??யார்? உயர்ந்தவர்கள் என்று கேட்க பதில் கூறமுடியாமல் சீடர்கள் வாயடைத்து மௌனமாக நின்றனர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அன்பும் பக்தியும் செய்வதற்கு ஜாதியோ மதமோ இனமோ ஒன்றும் தேவையில்லை. உண்மையான பக்தி தான் மனிதர்களை ஆண்டவனிடம் சேர்க்கும் என்று கூறி இனிமேல்  சீடர்களும் அதுபோல் உண்மையான பக்தியில் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ