லைஃப் சர்டிபிகெட் கண் ஆபரேஷன்

இன்று நவம்பர் 30. மத்திய அரசில் பணிபுரிபவர்கள்  இன்று லைப் சர்டிபிகேட் கொடுப்பதற்கான கடைசி நாள் .

நான் 20 தினங்களுக்கு முன்பே சென்று இந்தியன் வங்கியில் எனது லைஃப் சர்டிபிகெட்டை கொடுத்துவிட்டேன். இம்முறை அனைவருக்கும் அவருடைய பிபிஓ நம்பர் தவறு என்று பலருக்கு பல முறை வந்ததால் மீண்டும் மீண்டும் திருத்தி கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது .அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்பட்ட சமயத்தில் நான் பேங்கிற்கு சென்ற பொழுது அங்கு அவர்கள் படும் இன்னலை கண்ட பொழுது எனது நண்பர் தான் அங்கு அப்டேட் செய்து கொண்டிருந்ததார்.

அவர் என்னிடம் உதவி கோரினார். நானும் சரி என்று அவருக்கு உதவி செய்வதாக வாக்களித்து 6 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை விடாமல் தினமும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பேங்கில் இருந்து அனைவரும் லைப் சர்டிபிகேட் கொடுப்பதற்கு உதவி செய்தேன். அங்கு நான் கண்ட காட்சிகள் என் மனதை மிகவும் பாதித்தது .

அதாவது தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது ,மேம்பட்டு விட்டது, கல்வி வளர்ச்சியில் மிகவும் உயரத்திற்கு சென்று விட்டது ,என்று கூறுவது அனைத்தும் பொய்யோ என்று தோன்றும் அளவிற்கு, லைப் சர்டிபிகேட்  கொடுக்க வந்தவர்கள் அனைவரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்வி அறிவு குறைந்தவர்கள். அவர்களுக்கு ஓடிபி நம்பர் என்றால் என்ன ,அதை எவ்வாறு போன் துறந்து மெசேஜை பார்ப்பது, அந்த நம்பரை எவ்வாறு படிப்பது ,ஆதார் நம்பர் எவ்வாறு காண்பிப்பது ,கைரேகை எவ்வாறு வைப்பது, என்பது முதற்கொண்டு தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறார்கள்,

 அது மட்டுமல்ல பலருக்கும் அவர்கள் உழைப்பினால் வயதான காரணத்தினால் கையில் உள்ள ரேகைகள் அழிந்து விட்டதால் அவர்களை ப்ரூப் செய்ய முடியாமல்  ஆதாருடன் டேலி ஆகாமல் பலமுறை ,பலமுறை முயன்று முடியவில்லை .இது போன்ற இன்னல்களை காணும்பொழுது எனக்கு மிகுந்த மன உளைச்சலும் மன வேதனையும் அடைந்தேன் .அங்கு அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டு ஒருவர் அப்பா என்றும் ,ஒருவர் அண்ணா என்றும், ஒருவர் மாமா என்றும் , எனக்கு உதவி செய்யுங்கள், எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கும் பொழுது நாம்.  எங்கோ முன்னேறிச் சென்று விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் இத்தகைய மனிதர்களின் சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது மனம் மிகவும் வேதனை  அடைந்தது.

கல்வி வளர்ச்சி இன்னும் தமிழ்நாட்டிற்கு மிக மிக அத்தியாவசியத் தேவை. கல்வி வளர்ச்சி ஒன்றுதான் தமிழகத்தை முன்னேற்ற முடியும் என்று அவர்களை கண்ட பொழுது தான் நான் உணர்ந்துகொண்டேன் .சிலருடைய கைரேகைகள் வயதின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, முழுவதும் அழிந்து விட்ட காரணத்தினால் பல முறை முயன்றும்  பேங்கில் தோல்வியை தழுவியதால், அவர்களை நெட் சென்டருக்கு சென்று கண்ணைச் செய்யுமாறு கூறினேன் .அவ்வாறு சென்றவர்களில் சிலர் கண்ணைச் செக் செய்துவிட்டு சரியாகிவிட்டது. வேறு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நான் அவ்வளவுதான் என்று கூறி பலரையும் அனுப்பி வைத்தேன். நிற்க.இந்த இடத்தில் தான் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது என்னவென்றால்

அதாவது எனக்கு ஆதார் அடையாளமாக கை விரல்களையும் கண்ணையும் போட்டோ எடுத்த பொழுது ஒன்றும் தோன்றவில்லை. தற்பொழுது எனது அறியாமையின் காரணமாக கூட இந்த சந்தேகம் தோன்றியிருக்கலாம். அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பு எனது விழித்திரையில் புரையோடி இருக்கவில்லை. ஆதலால் ஆப்ரேஷன் செய்யவில்லை. ஆனால் தற்போது கண்புரை நோய் ஏற்பட்டு மிக மிக அடர்த்தியாக வளர்ந்து மிகவும் சிரமப்பட்டு லேசர் ஆபரேஷன் செய்து புதிய விழித்திரை பொறுத்தி இருக்கிறேன் . இதன் காரணமாக நான் முன்பு கொடுத்திருந்த அடையாளத்திற்கான மாற்றம் ஏற்படுமா?? விழித்திரை பொறுத்தியதால் ஏதாவது கண்ணில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா?? இது எனது அறியாமையின் காரணமாகவே நான் இந்த கேள்வியை எழுப்புகிறேன். தெரிந்தவர்கள் விளக்கம் கொடுக்க  வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மாற்றம் ஏற்படாது என்று கூறினால் சந்தோஷம்.அவ்வாறு மாற்றம்  ஏற்படுமாயின் நான் என்ன செய்ய வேண்டும். மீண்டும் சென்று ஆதாருக்கு கண்ணை அடையாளமாக கொடுக்க வேண்டுமா?? தயவு செய்து விவரம் தெரிந்தவர்கள் விளக்கமாக கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ