நந்தி தேவர் வரலாறு

தெரிந்த கதை .தெரியாத வரலாறு.

 இன்று நாம் காண இருப்பது நந்தி தேவர் வரலாறு. சிவபெருமான் கோயில்களுக்கு சென்றால் முதலில் நாம் தரிசிக்க வேண்டியது நந்தியைத் தான். நந்திதேவரை தரிசித்துவிட்டுத்  தான் நாம் சிவபெருமானை தரிசிக்க முடியும். அவ்வாறு புகழும் பெயரும் அவருக்கு எவ்வாறு கிடைத்தது .அவர் யார் ??எவ்வாறு  நந்தி ஆனார் என்பதை பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!?

திருவையாற்றில் ஒருசமயம் சிலாத முனிவர் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தது. அவர் உடனே சிவனை நோக்கி குழந்தை பாக்கியம் வேண்டும் என்று தவம் இருந்தார் .அவருடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து முனிவரே நீங்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் என்று கூறி, மேலும் நீங்கள் யாகம் செய்யும் நிலத்தை உழும்போது பூமியிலிருந்து ஒரு பெட்டி கிடைக்கும். அதனுள் இருக்கும் குழந்தையை எடுத்து வளர்த்து வாருங்கள். அந்த குழந்தை இந்த பூமியில் 16 ஆண்டுகள் தான் உயிர் வாழும் என்று கூறிவிட்டு மறைந்தார்.

சிலாதரும் அவ்வாறே செய்ய ஒரு பெட்டியில் மூன்று கண்கள் நான்கு தோள்களுடன் சந்திரன் போன்ற தேஜஸுடன் ஒரு குழந்தை இருப்பதை கண்டு வியந்து போன அவர் பயந்து பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திறக்க பழைய அடையாளங்கள் அனைத்தும் மறந்து அழகிய குழந்தையாக மாறியிருந்தது.

உடனே அக்குழந்தையை எடுத்து அதற்கு ஜபேசர் என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பித்தார் .அது நன்கு வளர்ந்தவுடன் அதற்கு14 வயது ஆனதும் இவர் மிகவும் பயந்து இன்னும் 2 ஆண்டுகள் தான் குழந்தை தன்னோடு இருக்கப்போகிறது என்பதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார்.

இதைக் கேள்விப்பட்ட குழந்தை ஜபேசர் தந்தையிடம் நீங்கள் பயப்பட வேண்டாம். நான் சிவனைக் குறித்து தவம் இருக்கிறேன் என்று கூறி திருவையாற்றில் உள்ள அயன அரி என்ற தீர்த்தக் குளத்தில் ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் புரிந்தார்.

இவ்வாறு நீரில் நின்று தவம் புரிந்த இவரை நீர்வாழ் உயிரினங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தின்றன .ஆனாலும் இவர் தவத்தை விடவில்லை. இவருடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து அவருடைய நோயையும் குணப்படுத்தி பூரண ஆயுளையும் தந்தார்.

அதன் பிறகு சிலாத முனிவர் ஜபேசருக்கு சுயசாம்பிகை என்ற பெண்மணியைத் தேர்ந்தெடுத்து திருமழபாடியில் திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமணத்திற்குப் பிறகும் ஜபேசர் சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார்.அவருடைய தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்கு சிவகணங்களின் தலைமைப் பதவியையும் கயிலாயத்தின் முதல் வாயிலைக் காக்கும் உரிமையையும் நந்திதேவர் என்ற பெயரையும் கொடுத்தார் .கைலாயத்தின் தலைமை காவலர் என்ற காரணத்தினாலும் முதல் வாயில் காப்போர் என்ற காரணத்தினாலும் சிவபெருமானின் சிறந்த சீடன் என்பதனாலும் சிவபெருமானே மனமுவந்து அவருக்கு நந்தி என்ற பெயரை இட்டார். இதுவே  நந்தி பெருமான் நந்திதேவர் தோன்றிய வரலாறு.

திருவையாற்றில் இன்றும் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் நடக்கிறது. ஒரு பழமொழி உண்டு ""நந்தி திருமணம் பார்த்தால் முந்தி திருமணம் நடக்கும் ""என்று கூறுவர்.ஆதலால் திருமணமாகாத கன்னியர்கள் இளைஞர்கள் திருமழபாடியில் புனர்பூச நட்சத்திரத்தன்று நந்தி திருமணம் பார்த்தால் அவர்களுடைய தோஷம் நீங்கி உடனடியாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

மேலும் சிலர் தாத்தா பாட்டிமார்கள் என்னிடம் சொத்து உண்டு . சுகமுண்டு செல்வம் உண்டு.ஆனால் என் மகனுக்கோ மகளுக்கோ குழந்தை பாக்கியம் மட்டும் இல்லை என்று வருத்தப்படுபவர்கள் உண்டு. அவ்வாறு வருத்தப்படுவார்கள் திருமழபாடி வைத்யநாதசுவாமி கோவிலுக்கு சென்றால் நந்திதேவர் திருமணமான இடத்திற்கு சென்றால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதும் ஐதீகம்.

இதுவே நந்திதேவர் தோன்றிய வரலாறு.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ