ஏகலைவன் மிகவும் உயர்ந்தவன்

அதாவது, மனிதனுக்கு உடலில் ஒவ்வொரு அங்கமும் எவ்வளவு முக்கியம் என்பதை அவனவனுக்கு வரும் வலியால் ,நோயால் தான் கண்டுபிடிக்க முடியும்.

நேற்று மதியம் எனது வலது கை கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், நான் இன்று காலை படும் அவஸ்தையை, அதாவது பல் தேய்ப்பதிலிருந்து, குளிப்பதில், ஆகாரம் உண்பதில்,  அனைத்திற்கும் கட்டைவிரல் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். ஒரு நாள் நான் செய்யும் வேலையை என்னால் செய்ய முடியாமல் கட்டைவிரலை உபயோகிக்க முடியாமல் நான் படும் அவஸ்தையை எண்ணி வருந்துகின்றேன். ஆனால்

புராணத்தில் துரோணரின் கெட்ட மதியால் அரசியலில் அரசாட்சியில் அர்ஜுனனை யாரும்  விஞ்சி விடக்கூடாது என்ற ஒரு மனப்பான்மையால் ,ஏகலைவனின் கட்டைவிரல் வேண்டும் என்று கேட்டு, அவனும் குருதட்சணையாக எந்தவித தயக்கமுமின்றி துரோணருக்கு கட்டை விரலை வெட்டிக் கொடுத்த நிகழ்ச்சியை, ஒரு நிமிடம் நாம் நினைத்தோமானால் தன் வாழ்க்கையையே குருவிற்காக அர்ப்பணித்து இருக்கிறான். ஒரு மனிதனுக்கு கட்டைவிரலை தியாகம் செய்வது என்பது தன்னுடைய அனைத்து தேவைகளையும் குருவுக்காக அர்ப்பணம் செய்ததற்கு ஈடாகும். அதற்கு விலை மதிப்பே கிடையாது. இந்த விஷயத்தில் ஏகலைவன் உயர்ந்து விட்டான். ஆனால் துரோணர் தரம் தாழ்ந்து விட்டார்.

வில்வித்தை பயிற்ச்சிப்போர் வில்லை உபயோகிப்பதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்து தேவைகளுக்கும் வலது கையின் கட்டை விரல் எவ்வளவு அத்தியாவசியம், முக்கியம் என்பதை  உணராதவரா, தெரியாதவரா !!குரு துரோணாச்சாரியார்.,
 கட்டை விரலை யாசித்ததிற்கு பதில் இனி நீ வில்லையே தொடக்கூடாது என்று அவனிடம் சத்தியம் வாங்கி இருந்தால், அவனும் சத்தியம் செய்து கொடுத்து இருப்பானே! அவனுடைய அன்றாட தேவைகளை நன்கு போல் கவனித்துக் கொண்டிருப்பான். அவ்வாறு சத்தியம் வாங்குவதை விடுத்து கட்டைவிரல் தான் வேண்டும் என்று கேட்டால் ,வில்லுக்கு மட்டுமல்ல அவருடைய வாழ்க்கையே நிர்மூலமாக செய்து விட்டார் துரோணர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

ஒரு மனிதன் தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பதுபோல, கட்டைவிரல் என்பது வாழ்க்கையில் எவ்வளவு இன்றியமையாதது, என்பதை இந்த ஓரிரு நாளில் நான் புரிந்து கொண்டு படும் கஷ்டத்தை நினைக்கும்பொழுது, என்னைப்பொறுத்தவரையில் துரோணர் ஏகலைவனுக்கு இழைத்தது மகா கொடுமை ,அநீதி ,துரோகம், அதற்கு மாற்றாக வேறு ஏதும் யாசித்து இருக்கலாம் என்று ,எனக்கு தோன்றுகிறது ,வாழ்க்கையையே குருவிற்காக அர்ப்பணித்த ஏகலைவன் என்னை பொருத்தமட்டில் மிக உயர்ந்து நிற்கிறார் நன்றி.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ