லைஃப் சர்டிபிகெட் கண் ஆபரேஷன்
இன்று நவம்பர் 30. மத்திய அரசில் பணிபுரிபவர்கள் இன்று லைப் சர்டிபிகேட் கொடுப்பதற்கான கடைசி நாள் . நான் 20 தினங்களுக்கு முன்பே சென்று இந்தியன் வங்கியில் எனது லைஃப் சர்டிபிகெட்டை கொடுத்துவிட்டேன். இம்முறை அனைவருக்கும் அவருடைய பிபிஓ நம்பர் தவறு என்று பலருக்கு பல முறை வந்ததால் மீண்டும் மீண்டும் திருத்தி கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது .அவ்வாறு ஒரு சூழ்நிலை ஏற்பட்ட சமயத்தில் நான் பேங்கிற்கு சென்ற பொழுது அங்கு அவர்கள் படும் இன்னலை கண்ட பொழுது எனது நண்பர் தான் அங்கு அப்டேட் செய்து கொண்டிருந்ததார். அவர் என்னிடம் உதவி கோரினார். நானும் சரி என்று அவருக்கு உதவி செய்வதாக வாக்களித்து 6 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை விடாமல் தினமும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பேங்கில் இருந்து அனைவரும் லைப் சர்டிபிகேட் கொடுப்பதற்கு உதவி செய்தேன். அங்கு நான் கண்ட காட்சிகள் என் மனதை மிகவும் பாதித்தது . அதாவது தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறிவிட்டது ,மேம்பட்டு விட்டது, கல்வி வளர்ச்சியில் மிகவும் உயரத்திற்கு சென்று விட்டது ,என்று கூறுவது அனைத்தும் பொய்யோ என்று தோன்றும் அளவிற்கு, லைப் சர்டிபிகேட் கொடு...