தீபாவளி கட்டுரை 4
#அந்த தீபாவளி#_ 1983ஆம் வருடம் நான் பிக்கானீர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறேன். அந்த வருடம் மார்ச் மாதத்தில் எனக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிந்து நான் M.Com;படித்துக் கொண்டிருப்பதால் மகனைப் பார்க்க வரவில்லை. மே மாதம் தொடங்கிய எக்ஸாம் ஜூன் வரை நடந்தது. ஆக்ரா யுனிவர்சிட்டியில் படித்துக்கொண்டிருந்தேன் .அங்கு என்ன விசேஷம் என்றால் ஆக்ராவை சேர்ந்தவர்கள் தான் எழுத முடியும் .வேறு ஊரில் உள்ளவர்கள் ஆக்ரா யுனிவர்சிட்டியில் எழுதமுடியாது. அதற்காக நான் முதலில் 1974ல் நான் ஆக்ராவிலிருந்து விலாசத்தை கொடுத்து ஐடி ப்ரூப் வாங்கி அங்கு சேர்ந்து எக்ஸாம் எழுதிக்கொண்டிருந்தேன் .பிறகு விடுமுறைக்கு அப்ளை செய்து ஜூலை இறுதி வாக்கில் ஐந்து மாதம் கழித்து தான் எனது மகனை பார்க்க வந்தேன். ஆகஸ்டில் திரும்பிச் சென்றேன் பிக்கானீருக்கு. அங்கு அப்பொழுது பயங்கர வெயில் .அதுமட்டுமல்ல பிகானீரில் ஆந்தி என்று சொல்லக்கூடிய அனல் காற்று வீசும். ஆதலால் குளித்து விட்டு வெளியில் சென்று ஏதாவது வாங்கி வரலாம் என்று வீட்டிற்கு அரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்தால் மினிமும் 100 கிராம் மண் நமது உடலுக்குள் சென்று இருக்கும். நானிர...