தெரிந்த கதை. தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது அர்ஜுனன் எவ்வாறு வில் வித்தையில் சிறந்து விளங்கினான்.வில்லுக்கு விஜயன் என்ற பெயர் அவனுக்கு பின்னாளில் எவ்வாறு அமைந்தது என்பதை பற்றி விரிவாக விளக்கமாக பார்ப்போம். துருபத மன்னனால் அவமானப்படுத்தப்பட்டு, மனம் நொந்து, வெந்து, சோர்ந்து, நடை தளர்ந்து, துரோணர் வந்து கொண்டிருந்தார், கிருபாச்சாரியாரின் குருகுலம் நோக்கி. அப்பொழுது அவரின் குருகுலத்தில் பாண்டவர்களும் கௌரவர்களும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர் .அவர்கள் வீசிய பந்து வேகமாக சென்று ஒரு கிணற்றுக்குள் விழுந்து விட்டது .கிணற்றை சுற்றி அனைவரும் மிகுந்த கவலையுடன் சத்தமிட்டு கொண்டு இருந்தனர். அப்பொழுது அழுக்குத் துணி உடுத்தி, மீசை தாடியுடன் ,பரிதாமாக வந்து நின்ற துரோணர் ,அவர்களை நோக்கி ஏன்? கிணற்றை சுற்றி அனைவரும் நின்று கொண்டிருக்கிறீர்கள்! என்று கேட்டார். அவருடைய தோற்றத்தைக் கண்டு முகம் சுழித்து, ஒரு அலட்சிய பார்வையுடன் துரியோதனன் ,அவரிடம் நாங்கள் எதற்கு நின்றால் உங்களுக்கு என்ன? உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறினான்.(தமிழில் ஒரு பழமொழி உண்டு. உருவம் கண்டு எடை போடாதே! த...