இன்று நாம் காணவிருப்பது சில சாபங்களும், வரங்களும். அது என்ன? சாபங்களும் வரங்களும், நமது இதிகாச புராணங்களை படித்தால் அதில் பெருமளவு வருபவை சாபங்களும் வரங்களும் தான். சாபத்தின் காரணமாக பிறவி எடுப்பது, வரத்தின் காரணமாக பிறவி எடுப்பது, என்று பல பல கதைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தொடர்ந்து பார்ப்போம். பிரம்மதேவன் சனகாதி முனிவர்களை படைத்தார். அவர்கள் பிரஜாபதி ஆக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவர்கள் அதை வெறுத்து தவத்தை நாடினார்கள். ஒருசமயம் மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டம் சென்றனர். அப்போது வாயில் காப்பாளர்களாக இருந்த ஜெய விஜயர்கள் அனுமதி மறுக்க உடனே அவர்களுக்கு சாபம் கொடுக்க ஆரம்பித்தனர். இதுதான் நமது இதிஹாச புராணத்தில் தோன்றிய முதல் சாபம். இதன் காரணமாகத்தான் இரணியன், இரணியாட்சன், கும்பகர்ணனும், ராவணனும், கம்சனும், சிசுபாலனும், தோன்றினார்கள். அது மாத்திரமல்ல வராக அவதாரம், நரசிம்ம அவதாரம் ,ராம அவதாரம், பலராம, கிருஷ்ண அவதாரம் இந்த சாபத்தின் காரணமாகத் தான் எடுக்க வேண்டி வந்தது. இனி இரண்டாவது சாபம் பார்ப்போம். பிருகு முனிவரின் மனைவி அரக்கர்களுக்கு அடைக்கலம் ...