மாதங்களின் பெயர்கள் எவ்வாறு தோன்றியது
தெரிந்த கதை .தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது தமிழ் மாதத்தில் 12 மாதங்களின் பெயர்கள். அது எவ்வாறு ஏற்பட்டது?? என்ன? என்பதை பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!. நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது எனது தமிழாசிரியர் எந்த ஒரு பாடத்தையும் மிகவும் தத்துரூபமாக நடத்துவார். ராமாயணத்தில் கும்பகர்ணனை எழுப்பும் படலத்தில் கையிலுள்ள பிரம்பை (அந்த காலத்தில் ஆசிரியர்கள் பிரம்பு வைத்துக்கொள்வது வழக்கம்). உலக்கையாக பாவித்துக் கொள்ளுங்கள் என்று கூறி , உரலில் உலக்கையை இடிப்பது போல் ""உறங்குகின்ற கும்பகர்ண எழுந்திராய் எழுந்திராய் ""என்று உலக்கையால் குத்தி எழுப்புவார்கள் என்று தத்ரூபமாக நடித்துக் காட்டுவார். வேறொரு சமயத்தில் ஒரு பாடலை விவரிக்கும் பொழுது"" தேரோடும் வீதியெல்லாம் செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவி வரும் நெல்லையே கார் ஓடும் கந்தர்ந்த ரந்தரத்தர் கந்தரந்த ரந்தரத்தர் கந்தரந்த ரந்தரத்தர் காப்பு"" என்ற பாடலை அது தோன்றிய விதம் அதன் வழித் தோன்றல்கள் அனைத்தையும் அழகாக விவரமாக கூறுவார் .(இதைப் பற்றிய பதிவை நான் தனியாக இடுகிறேன்). ...