Posts

கூட்டுக் குடும்பம் சாத்தியமா

#கூட்டுக்குடும்பம் சாத்தியமா இல்லையா#. 1980 வரை கூட்டுக்குடும்பம் சாத்தியமே.  இது தொடர்ந்து ஐடி கம்பெனி உருவாகி ஆணும் பெண்ணும் படித்து ஐடி தொழிலில் வேலை பார்க்க தொடங்கியதற்கு பிறகு அதாவது 85 லிருந்து 90 அல்லது 2000 வரைக்கும் கூட சில வீடுகளில் கூட்டுக்குடும்பம் சாத்தியமாக இருந்தது. பிறகு அனைத்து பெண்களும் படித்து சுயமாக தன் காலில் நிற்க தொடங்கியதற்கு பிறகு கூட்டுக்குடும்பம் சுருங்கி தன் கணவன் தன் குழந்தை தன் குடும்பம் என்ற சூழ்நிலை உருவாக்கிய பிறகு அங்கு கூட்டுக்குடும்பம் தோற்றுவிட்டது காரணம். முதலில் கூட்டுக் குடும்பம் உருவாவதற்கு அடிப்படைக் காரணம் பணம் .ஒருவர் கூட்டுக் குடும்பத்தின் தலைவர் சம்பாதிப்பார் .அனைவரும் அவரை அண்டி வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் தற்போது அனைவரும் படித்து கைநிறைய சம்பாதிக்க தொடங்கியதற்கு பிறகு பரந்த மனப்பான்மை சுருங்கி தன் கையில் பணம் உள்ளது எதற்கும் யாருக்கும் பயப்பட வேண்டாம். தன் காலில் தன்னால் நிற்க முடியும் என்ற நிலை உருவானதற்கு பிறகு ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் மரியாதை சற்று குறைந்தது.(குறிப்பாக சிறியவர்கள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை) அ...

ஆரூஷ் அவார்ட் வாங்கிய கதை

இப்பவும் எனது பேரன் அமெரிக்காவில் டெக்சாஸ்ல் வசிக்கிறான் . அவன் மூன்று வயதில் இருந்தே பியானோ வாசிக்க தொடங்கினான். பிறகு அவனது தாய் தந்தையர் தகுந்த ஆசிரியரை நியமித்து அவனை அதில் நன்கு தேர்ச்சி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கினர் .அதன் காரணமாக அவன் அங்கு பொங்கல் திருவிழா ஆண்டுவிழா ஸ்கூல் பள்ளி விழா பிறகு தீபாவளி பண்டிகையில் பொதுமேடைகளில் வாசிக்கத் தொடங்கினான் .அவனுடைய வாசிப்பில் மிகவும் கவரப்பட்டு டெக்ஸாஸில் உள்ள பேப்பர் அவனை கௌரவித்து இன்று அவனுடைய  ஃபோட்டோ போட்டு அவனை மிகவும் பாராட்டி உள்ளது. அவனை கௌரவிக்கும் விதமாக அமெரிக்கா பேப்பர் நடத்திய பாராட்டு விழாவினை எனக்கு அனுப்பி உள்ளனர். அதை இங்கு நான் பதிந்துள்ளேன் பெரியவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இங்கு அவனுடைய பெயர் காரணத்தை பற்றிய ஒரு சிறு குறிப்பு கொடுக்க விரும்புகிறேன் .அவனது பெயர் ஆரூஷ். ஆரூஷ்  என்றால் சூரியனிலிருந்து வரும் முதல் கதிருக்கு பெயர் ஆரூஷ். இந்தப் பெயர் எவ்வாறு அவனுக்கு வைத்தார்கள் என்றால் ,எனது மகனின் பெயர் அருண், அருண் என்றால் சூரியன் என்று அர்த்தம் மாட்டுப்பெண் பெயர் அருணா ,அருணா என்ற...

ஆரூஷ் வாங்கிய அவார்ட்

Image
இப்பவும் எனது பேரன் அமெரிக்காவில் டெக்சாஸ்ல் வசிக்கிறான் . அவன் மூன்று வயதில் இருந்தே பியானோ வாசிக்க தொடங்கினான். பிறகு அவனது தாய் தந்தையர் தகுந்த ஆசிரியரை நியமித்து அவனை அதில் நன்கு தேர்ச்சி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கினர் .அதன் காரணமாக அவன் அங்கு பொங்கல் திருவிழா ஆண்டுவிழா ஸ்கூல் பள்ளி விழா பிறகு தீபாவளி பண்டிகையில் பொதுமேடைகளில் வாசிக்கத் தொடங்கினான் .அவனுடைய வாசிப்பில் மிகவும் கவரப்பட்டு டெக்ஸாஸில் உள்ள பேப்பர் அவனை கௌரவித்து இன்று அவனுடைய  ஃபோட்டோ போட்டு அவனை மிகவும் பாராட்டி உள்ளது. அவனை கௌரவிக்கும் விதமாக அமெரிக்கா பேப்பர் நடத்திய பாராட்டு விழாவினை எனக்கு அனுப்பி உள்ளனர். அதை இங்கு நான் பதிந்துள்ளேன் பெரியவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இங்கு அவனுடைய பெயர் காரணத்தை பற்றிய ஒரு சிறு குறிப்பு கொடுக்க விரும்புகிறேன் .அவனது பெயர் ஆரூஷ். ஆரூஷ்  என்றால் சூரியனிலிருந்து வரும் முதல் கதிருக்கு பெயர் ஆரூஷ். இந்தப் பெயர் எவ்வாறு அவனுக்கு வைத்தார்கள் என்றால் ,எனது மகனின் பெயர் அருண், அருண் என்றால் சூரியன் என்று அர்த்தம் மாட்டுப்பெண் பெயர் அருணா ,அருணா என்ற...

போகி பண்டிகை தோன்றிய வரலாறு

தெரிந்த கதை தெரியாத வரலாறு இன்று போகிப் பண்டிகை போகி என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும். அதாவது வெறும் வீட்டிலுள்ள வேண்டாதவற்றை தீயிட்டு பொசுக்குவது போகி அல்ல. நம் மனதில் உள்ள காமம், குரோதம், வன்மம், பொறாமை, அனைத்தையும் களைந்து நல்லதை நினைத்து நல்லதையே செய்வதுதான் பழையன கழிதலும் புதியன புகுதல் என்றும் பொருள். இந்தப் போகிப் பண்டிகை எவ்வாறு வந்தது ஏன் போகியைக் கொண்டாடுகிறோம் என்று புராண ரீதியில் விளக்கம் காண்போமா??? மதுராவில் இந்திர விழா வருடா வருடம் நடக்கும். ஒருமுறை கிருஷ்ணர் இந்திரவிழா வேண்டாம் கோவர்தனகிரி விழா நடத்துவோம் என்று கூறி கோவர்த்தனகிரி  விழாவை  அவ்வருடம் நடத்தினார் .அதனால் இந்திரன் வெகுண்டு மதுராவில் கடும் மழையை பொழிவித்தான். சற்றும் அசராமல் கிருஷ்ணர் கோவர்த்தன கிரியை தன் சுண்டு விரலால் தூக்கி அனைத்து மதுரா வாசிகளையும் காப்பாற்றினார்.இதனால் கிருஷ்ணரின் மகிமையை அறிந்து தன் ஆணவம் அகம்பாவம் அனைத்தையும் விட்டு கிருஷ்ணரிடம் இந்திரன் மன்னிப்பு கோரினார். இந்திரனுக்கு மறுபெயர்"" போகி"" என்பதாகும். அதனால்தான் மதுராவில் இந்திர விழா என்று கூறுகிறார்கள். இந்திரன...

மத்யமர் ரெண்டாவது ஆண்டு விழா

இன்றைய தலைவர் பதிவைப் படித்த பிறகு நாட்டு நடப்பை பற்றிய ஒரு உண்மையை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு டெல்லியில் மத்திய உள்துறையில் சில நண்பர்கள் இருக்கிறார்கள் .அவர்களிடமிருந்து வந்த தகவலை இங்கு யாரும் அறியாவண்ணம் இரகசியமாக பதிவிடுகிறேன்.  மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கை சென்றிருக்கிறது .அதாவது வரும் 19-ஆம் தேதி சென்னையில் மத்தியமர் மீட்டிங் நடக்க இருப்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்ற காரணத்தினால், ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்த போதிலும் ,சில பேக்டரிகளும் கடைகளும் வணிக நிறுவனங்களும் இயங்கும் .அவ்வாறு இயங்கும் பட்ஷத்தில் தொழிலாளர்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் ,அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும், தொழில் முதலீட்டாளர்களுக்கும் ,வணிக நிர்வாகத்திற்கும் ,அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது,. அதன் விவரம் என்னவென்றால் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும், தொழிற்சாலைகளும், வேண்டும் பேக்டனிகளும், மற்றும் இன்னபிற  நிர்வாகங்களும், மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் ,அவ்வாறு அந்த ஒருநாள் மூடப்பட்டு இரு...

மாதங்களின் பெயர்கள் எவ்வாறு தோன்றியது

தெரிந்த கதை .தெரியாத வரலாறு.  இன்று நாம் காண இருப்பது தமிழ் மாதத்தில் 12 மாதங்களின் பெயர்கள். அது எவ்வாறு ஏற்பட்டது?? என்ன? என்பதை பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!. நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது எனது தமிழாசிரியர் எந்த ஒரு பாடத்தையும் மிகவும் தத்துரூபமாக நடத்துவார். ராமாயணத்தில் கும்பகர்ணனை எழுப்பும் படலத்தில் கையிலுள்ள பிரம்பை (அந்த காலத்தில் ஆசிரியர்கள் பிரம்பு வைத்துக்கொள்வது வழக்கம்). உலக்கையாக  பாவித்துக் கொள்ளுங்கள் என்று கூறி , உரலில் உலக்கையை இடிப்பது போல் ""உறங்குகின்ற கும்பகர்ண எழுந்திராய் எழுந்திராய் ""என்று உலக்கையால் குத்தி எழுப்புவார்கள் என்று தத்ரூபமாக நடித்துக் காட்டுவார். வேறொரு சமயத்தில் ஒரு பாடலை விவரிக்கும் பொழுது"" தேரோடும் வீதியெல்லாம் செங்கயலும்  சங்கினமும் நீரோடு உலாவி வரும் நெல்லையே கார் ஓடும் கந்தர்ந்த ரந்தரத்தர் கந்தரந்த ரந்தரத்தர் கந்தரந்த ரந்தரத்தர் காப்பு"" என்ற பாடலை அது தோன்றிய விதம் அதன் வழித் தோன்றல்கள் அனைத்தையும் அழகாக விவரமாக கூறுவார் .(இதைப் பற்றிய பதிவை நான் தனியாக இடுகிறேன்). ...

மகாவிஷ்ணு மார்பில் ஸ்ரீதேவி பூதேவி அடைக்கலம் புகுந்த கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு . நாம் கோயில்களில் ஆலயங்களில், ஸ்ரீரங்கத்தில் ,திருவனந்தபுரத்தில், அனேக இடங்களில் நாம் மகாவிஷ்ணுவை பார்த்திருப்போம், மகாவிஷ்ணு சிலா ரூபத்தில் ஆதிசேஷன் குடை தாங்க, வஷ்சஸ்தலத்தில்  ஸ்ரீ  தேவியும் (மார்பில்) ஸ்ரீதேவியும் ,பாத கமலத்தில் பூதேவியும் அமர்ந்திருப்பார்கள். இதன் தத்துவம் ,தாத்பரியம் என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??. ஒருமுறை பாற்கடலில் மகாவிஷ்ணு துயிலும் பொழுது சற்று கண்ணயர்ந்து விட்டார். அப்போது அரக்கர்கள் ஆன மது, கைடபர், ஆகியோர் பாற்கடலில் தோன்றி ஸ்ரீதேவியையும், பூதேவியையும், கவர்ந்து செல்ல முயன்றனர். அவ் வரக்கரர்களைக் கண்டு பயந்த  ஸ்ரீ தேவித் தாயாரும் பூதேவித் தாயாரும் பகவானை எழுப்பக்கூடாது .எழுப்பினால் குற்றம் என  நினைத்து என்ன செய்வது என்று ஒரு வினாடி ஆலோசித்து ஸ்ரீதேவி பகவானின் மார்பிலும் (வஷஸ்தலத்தில்) பூதேவி தாயார் பகவானின் பாதத்திலும் சரணடைந்தனர். அப்போது ஆதிசேஷன் பகவானின் நித்திரையைக் கலைக்கக் கூடாது என்று வருந்தி தன் வாயில் உள்ள விஷத்தை உமிழு விஷத்தின் நெடியினால் அரக்கர்கள் பயந்து அவ்விடம் விட்டு ஓ...