கூட்டுக் குடும்பம் சாத்தியமா

#கூட்டுக்குடும்பம் சாத்தியமா இல்லையா#.

1980 வரை கூட்டுக்குடும்பம் சாத்தியமே.

 இது தொடர்ந்து ஐடி கம்பெனி உருவாகி ஆணும் பெண்ணும் படித்து ஐடி தொழிலில் வேலை பார்க்க தொடங்கியதற்கு பிறகு அதாவது 85 லிருந்து 90 அல்லது 2000 வரைக்கும் கூட சில வீடுகளில் கூட்டுக்குடும்பம் சாத்தியமாக இருந்தது.

பிறகு அனைத்து பெண்களும் படித்து சுயமாக தன் காலில் நிற்க தொடங்கியதற்கு பிறகு கூட்டுக்குடும்பம் சுருங்கி தன் கணவன் தன் குழந்தை தன் குடும்பம் என்ற சூழ்நிலை உருவாக்கிய பிறகு அங்கு கூட்டுக்குடும்பம் தோற்றுவிட்டது காரணம்.

முதலில் கூட்டுக் குடும்பம் உருவாவதற்கு அடிப்படைக் காரணம் பணம் .ஒருவர் கூட்டுக் குடும்பத்தின் தலைவர் சம்பாதிப்பார் .அனைவரும் அவரை அண்டி வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் தற்போது அனைவரும் படித்து கைநிறைய சம்பாதிக்க தொடங்கியதற்கு பிறகு பரந்த மனப்பான்மை சுருங்கி தன் கையில் பணம் உள்ளது எதற்கும் யாருக்கும் பயப்பட வேண்டாம். தன் காலில் தன்னால் நிற்க முடியும் என்ற நிலை உருவானதற்கு பிறகு ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் மரியாதை சற்று குறைந்தது.(குறிப்பாக சிறியவர்கள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை)

அதன் காரணமாக பணம் நிறைய புழங்க ஆரம்பித்தது காரணமாக கூட்டுக்குடும்பத்தில் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை குறைந்ததன் காரணமாக கூட்டு குடும்பத்தில் விரிசல் ஏற்படலாயிற்று. தற்போதைய சூழ்நிலையில் பணமே பிரதானம் என்ற காரணத்தால் கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பதால் பெரியவர்கள் எது சொன்னாலும் குற்றமாக கருதும் நோக்கில் இருப்பதால் மேலும் அவர்கள் அந்த காலம் தற்போதைய நடைமுறைக்கு ஒத்து வர மாட்டார்கள் என்ற ஒரு மனப்பான்மை நிலவுவதால் கூட்டுக்குடும்பம் நாளடைவில் மெல்ல சுருங்கிற்று.

அதுவும் பரந்த மனப்பான்மை சுருங்கி என் கணவர் என் மனைவி என் குடும்பம் என்ற சூழ்நிலை உருவாவதால் தற்போதைய நடைமுறையில் கூட்டுக்குடும்பம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்று ஆகிவிட்டது. 1980களில் முதியோர் இல்லங்கள் நாட்டில் அவ்வளவாக உருவாகவில்லை .தற்போது தனிக்குடித்தனம் ஆரம்பித்த பிறகு தாய் தந்தையரை கவனிப்பதற்கு நேரமின்மை காரணமாக தன் குடும்பம் தன் குழந்தை என்ற மனநிலை சுருங்கியதின் காரணமாக முதியோர் இல்லங்கள் பெருக கூட்டுக்குடும்ப நடைமுறை ஏறத்தாழ சுருங்கலாயிற்று.

தற்போதைய சூழலில் கூட்டு குடும்பம் என்பது சாத்தியமில்லாத ஒன்று

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ