ஆரூஷ் வாங்கிய அவார்ட்

இப்பவும் எனது பேரன் அமெரிக்காவில் டெக்சாஸ்ல் வசிக்கிறான் .

அவன் மூன்று வயதில் இருந்தே பியானோ வாசிக்க தொடங்கினான். பிறகு அவனது தாய் தந்தையர் தகுந்த ஆசிரியரை நியமித்து அவனை அதில் நன்கு தேர்ச்சி பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்கினர் .அதன் காரணமாக அவன் அங்கு பொங்கல் திருவிழா ஆண்டுவிழா ஸ்கூல் பள்ளி விழா பிறகு தீபாவளி பண்டிகையில் பொதுமேடைகளில் வாசிக்கத் தொடங்கினான் .அவனுடைய வாசிப்பில் மிகவும் கவரப்பட்டு டெக்ஸாஸில் உள்ள பேப்பர் அவனை கௌரவித்து இன்று அவனுடைய  ஃபோட்டோ போட்டு அவனை மிகவும் பாராட்டி உள்ளது.

அவனை கௌரவிக்கும் விதமாக அமெரிக்கா பேப்பர் நடத்திய பாராட்டு விழாவினை எனக்கு அனுப்பி உள்ளனர். அதை இங்கு நான் பதிந்துள்ளேன் பெரியவர்கள் அனைவரும் ஆசீர்வதிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இங்கு அவனுடைய பெயர் காரணத்தை பற்றிய ஒரு சிறு குறிப்பு கொடுக்க விரும்புகிறேன் .அவனது பெயர் ஆரூஷ்.

ஆரூஷ்  என்றால் சூரியனிலிருந்து வரும் முதல் கதிருக்கு பெயர் ஆரூஷ். இந்தப் பெயர் எவ்வாறு அவனுக்கு வைத்தார்கள் என்றால் ,எனது மகனின் பெயர் அருண், அருண் என்றால் சூரியன் என்று அர்த்தம் மாட்டுப்பெண் பெயர் அருணா ,அருணா என்றாலும் சூரியன் என்று பொருள் படும், அருண் அருணா  இணைந்து உருவாக்கிய முதல் கதிருக்கு ஆரூஷ் என்று பெயர் வைத்துள்ளார்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

பெரியவர்களின் ஆசிர்வாதத்தை வேண்டி இங்கு பதிவிடுகிறேன் நன்றி.

(தலைவரிடம் பதி விடலாமா என்று கேட்டு அவர் பதிவிடுங்கள் என்று கூறியதற்கு பிறகே இங்கு பதிவிடுகிறேன். ஆதலால் தயவுசெய்து அப்ரூவல் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.)

He is featured in the Avery Ranch living magazine

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ