பேச்சிலர்ஸ் டே
என்னுடைய பேச்சிலர்ஸ் டே. நான் என்னுடைய 18-வது வயதிலேயே இந்திய விமானப் படையில் சேர்ந்து விட்டேன். அதற்கு முன்பு பள்ளிப்படிப்பு கல்லூரிப் படிப்பு. கோடை விடுமுறையில் கூட எங்கும் சுற்ற இயலாமல் டைப்ரைட்டிங் ஷார்ட்ஹேண்டுக்கு அனுப்பி அதை படிக்க வைத்தார்கள். ஆதலால் இந்த காதல் கத்திரிக்காய் அது கருப்பா சிவப்பா என்பதையெல்லாம் நான் 18 வயது வரை அறியாமல் இருந்து இந்திய விமானப் படையில் சேர்ந்து ஒரு வருடம் பயிற்சி முடிந்த பின்பு ஆக்ராவிற்கு போஸ்டிங் போட்டார்கள். 1972 ,73 எல்லாம் ஆக்ரா ஒரு பாலைவனம் போலத்தான் இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் காடும் மரமும் செடியும் கொடியும் தான். மனிதர்களையே பார்க்க முடியாது. இடையில் இந்த நேரத்தில் பெண்களையா. ஐயா , என்னைப்பொறுத்தவரை பெண்கள் என்பது கற்பனைக்கு எட்டாத பாத்திரமாக எங்களுக்கு பெண்கள் திகழ்ந்தார்கள் .அந்த வயதில் பெண்களை ஓவியங்களிலும் நாடகங்களிலும் தான் பார்த்திருக்கிறோம். பெண்களை அதுவும் இளம் வயதினரை நேரடியாக நாங்கள் பார்த்ததில்லை என்பது தான் உண்மை. வருடத்துக்கு ஒரு முறை கோடை விடுமுறையில் வருவோம். அதற்கிடையில் இங்கு சொந்த ஊர் விட்டு பல ஊர்களுக...