திருப்பு முனை 2
#திருப்புமுனை#. எனது வாழ்க்கையில் நான் செய்த இரண்டு பயங்கரமான சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுத்தனமான நடவடிக்கை என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது .என்ன என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம். எனக்கு பத்து வயது இருக்கும். என் அண்ணனுக்கு வயது 12. நான் சிறுவயதிலிருந்தே சற்று துடுக்குத் தனமும் வீரமும் ஒரு பலசாலி போல ஒரு நடவடிக்கையும் உடன்பிறந்த குணமாக இருந்தது. எனது அண்ணன் சற்று ஒல்லியாக நோஞ்சானாக இருப்பார். யாரையும் எதிர்த்துப் பேசுவதோ அடாவடி நடவடிக்கையோ கிடையாது .இவ்வாறு இருக்கையில் நான் ஒருநாள் பள்ளி விட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது பழனியில் அடிவாரத்தில் கொழுமம் சத்திரத்திற்கு அருகில் எனது அண்ணனை இரண்டுபேர் அடிப்பதை பார்த்து இயற்கையாக உள்ள வீரம் கொப்பளிக்க நேராக பாய்ந்து இரண்டு பேருடைய கழுத்திலும் கையை வைத்து தள்ள அவர்கள் விழுந்து மண்டையில் அடிபட்டு ரத்தம் வர பிறகு அவர்கள் ஓ என்று அழுக அனைவரும் என்னை பிடித்து திட்ட அண்ணனை அடிச்சார்கள். எனக்கு கோபம் வந்தது என்று நான் சொல்ல மிகவும் சிரீயஸ் ஆகாமல் ஓரளவுக்கு சமாளிக்கும் நிலை இருந்ததால் அன்றைய விஷயம் அத்துடன் முடிந்தது. சிறு குழந்தை...