கூட்டுக் குடும்பம் சாத்தியமா
#கூட்டுக்குடும்பம் சாத்தியமா இல்லையா#. 1980 வரை கூட்டுக்குடும்பம் சாத்தியமே. இது தொடர்ந்து ஐடி கம்பெனி உருவாகி ஆணும் பெண்ணும் படித்து ஐடி தொழிலில் வேலை பார்க்க தொடங்கியதற்கு பிறகு அதாவது 85 லிருந்து 90 அல்லது 2000 வரைக்கும் கூட சில வீடுகளில் கூட்டுக்குடும்பம் சாத்தியமாக இருந்தது. பிறகு அனைத்து பெண்களும் படித்து சுயமாக தன் காலில் நிற்க தொடங்கியதற்கு பிறகு கூட்டுக்குடும்பம் சுருங்கி தன் கணவன் தன் குழந்தை தன் குடும்பம் என்ற சூழ்நிலை உருவாக்கிய பிறகு அங்கு கூட்டுக்குடும்பம் தோற்றுவிட்டது காரணம். முதலில் கூட்டுக் குடும்பம் உருவாவதற்கு அடிப்படைக் காரணம் பணம் .ஒருவர் கூட்டுக் குடும்பத்தின் தலைவர் சம்பாதிப்பார் .அனைவரும் அவரை அண்டி வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் தற்போது அனைவரும் படித்து கைநிறைய சம்பாதிக்க தொடங்கியதற்கு பிறகு பரந்த மனப்பான்மை சுருங்கி தன் கையில் பணம் உள்ளது எதற்கும் யாருக்கும் பயப்பட வேண்டாம். தன் காலில் தன்னால் நிற்க முடியும் என்ற நிலை உருவானதற்கு பிறகு ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் மரியாதை சற்று குறைந்தது.(குறிப்பாக சிறியவர்கள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை) அ...