மத்யமர் முதல் மீட்டிங்

நேற்று பிரேம் ஆனந்த் நிம்மி சுரேஷ் பாடல் கேட்டவுடன் அந்த பாடலில் திரு குருசாமி ரமேஷ் அவர்கள் ஆண்கள் எதுவும் செய்யக் கூடாதா என்று கேட்டவுடன் திரு ரோகிணி மேடம் அவர்கள் ஏதாவது செய்யுங்கள் என்று கோர அந்தக் கணத்திலிருந்து என் மனதுக்குள் என் மண்டைக்குள் ஏதோ ஓட ஆரம்பித்தது நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ன செய்வது என்று இரவு முழுதும் மண்டையை பிய்த்துக் கொண்டது தான் பாக்கி. ஒன்றுமே தோன்றவில்லை. இருந்தும் ஏதோ தத்துபித்து என்று தோன்றியதை இங்கு உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்.

(திருவிளையாடல் தருமி வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனைய படங்களிலிருந்து சில வசனங்கள தொகுத்து வெங்கட்ராமன் வீசி சொன்னது போல் தனிப்பட்ட  உப்புமாவாக கொடுக்காமல் வீரராகவன் கேட்டுக்கொண்டபடி ஒரு கிச்சடியாக கலந்து அளிக்கலாம் என்று நினைக்கிறேன்)

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வருகிற பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி மத்தியமரில்  மீட்டிங் மத்தியமரில் மீட்டிங் உள்ளது அனைவரும் வரவேண்டும் அனைவரும் வரவேண் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும். சொக்கா என்னைக்கு ???பிப்ரவரி 3' பிப்ரவரி 3; பிப்ரவரி 3  ஆஹா எப்படியாது கலந்துக்கணுமே. மறுபடியும் சொல்லு. பிப்ரவரி 3. ஆகா பிப்ரவரி 3 போகனுமே மீட்டிங்கில் கலந்துக்ணமே என்ன பண்றதுன்னு தெரியலையே .தாயே மீனாட்சி. ஐயா கூப்பிட்டீங்களா. உன்னை இல்லம்மா!! என் தாயை கூப்பிட்டேன். எப்படியாவது கலந்து கொள்ள ஆசி கொடு.

அப்பொழுது தலைவர் சங்கர் வருகிறார் சங்கரா சிவனே.

தருமி. அனைவருக்கும் அழைப்பு அனுப்பி விட்டீரா.தலைவரே தண்டோரா போட்டத நீங்களும் கேட்டீங்களா. நீங்கதானே தலைவரே  தண்டோரா போட சொன்னது.அழைப்பிதழ் படி அனைவரும் வருவார்களா ??ஏதாவது சந்தேகமா?? உனக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் என்னை நீர் சோதித்துப் பார். கேள்விகளை நீர் கேட்கிறீரா¿அல்லது நான் கேட்கட்டுமா ??வேண்டாம் வேண்டாம் எனக்கு கேள்வி கேட்கத் தான் தெரியும். நான் கேட்கிறேன்.

சொல்லக்கூடாதது என்னவோ?.
 மத்தியமரின்  குறைகளை .

சொல்லக்கூடியது

 மத்தியமரின்  நிறைகளை .

பார்க்கக்கூடாதது.
.மத்திய மரின் பிழைகளை.

 பார்த்து ரசிப்பது .
மத்தியமரின் இசையை நடனத்தை ஓவியத்தை .

பாட்டுக்கு  

பிரேமாஆனந்த்  நிம்மிசுரேஷ் .

கவிதைக்கு       ரோகினி மேடம் மீனாட்சி உலகநாதன்.

 ஓவியத்திற்கு.     ரேவதி பாலாஜி 

கட்டுரைக்கு    வெங்கடேஷ் வீரராகவன்

 கவிதைக்கு.  அனுராதா மேடம்

மிமிக்ரிக்கு

 சுவாமிநாதன் ராமசுப்பிரமணியம்

 தெரிந்த கதை தெரியாத வரலாறுக்கு.    

 நீர்

 அப்ரூவலுக்கு      நான்.

 ஐயா தலைவரே நீர் தலைவர்  நீரே தலைவர்.அனைவரிடமும் சென்று தெரிவிக்கிறேன்.

பார்வேந்தே  என்னைப் பார் வேந்தே.
மத்யமர்  அனைவரையும் 3ஆம் தேதி அழைப்பதற்கான அழைப்பிதழுடன்  வந்திருக்கிறேன்.
எங்கே கொடு !!!படித்து விடுகிறேன் மன்னா.

இப்பவும் வருகிற பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி சென்னையில் தி.நகரில் மீட்டிங் நடக்க உள்ளதால் மெம்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 ஆழ்ந்த கருத்து அற்புதமான அழைப்பிதழ்.
தீர்ந்தது சந்தேகம். மன்னா பரிசு.மத்யமர் யாரும்  கொடுக்காத அழைப்பிதழை தனி ஒருவனாக கொண்டுவந்து கொடுத்த நீவிர் வாழ்க!!  உம் கொற்றம் வளரட்டும். இந்தாரும் பரிசு.

மன்னா சற்று பொரும் தருமியே சற்று இங்கு வருகிறீரா?. வரமாட்டேன் பரிசு வாங்கிட்டு தான் வருவேன். வந்தேன் என்னையா சந்தேகம்!.

 முதற்கன் இந்த அழைப்பிதழை கொண்டுவந்தது யார் ??யாம் யாம் கொண்டு வந்தோம்!! இதை உம்மிடம் கொடுத்து அனுப்ப சொன்னது  யார்.நானே தயாரித்தது . யாரும் தயாரித்துக் கொடுக்க வில்லை.நீர் தயாரித்ததாக தெரியவில்லையே??.அதில் நிறைய பிழை உள்ளது. போங்கப்பா மன்னருக்கே விளங்கிவிட்டது இடையில் நீர் வேறு எனக்கு பரிசு வேண்டாம் ஒன்றும் வேண்டாம் அடிக்கிற மாதிரி இருக்கு நான் வரேன்.வரேன்.வரேன்

தலைவர் சங்கர் வருகிறார் . தருமியே அனைவரையும் அழைத்தீரா?..
இதுல எல்லாம் ஒன்னும் கொறச்சல் இல்ல. பேசும்போது நல்ல பேசீரும். அழைப்பிதழ் அடிக்கும் போது மட்டும் பிழை செய்திரும். என் அழைப்பிதழில் என்ன குற்றம் கண்டாய்.

தருமியேஅவையில் நடந்ததை கூறும்.

அழைப்பிதழ் கொடுக்கச் சென்றால் அனைவரும் முதலில் கேட்கும் கேள்வி நீ வருவாயா?? என்றுதானே கேட்கிறார்கள். அதற்கு நான் என்ன பதில் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. ஏன் நீர் வருவதில் என்ன தயக்கம் .

தலைவரே நான் இருப்பதோ பொள்ளாச்சி .பொள்ளாச்சியில் இருந்து ஆட்டோ பிடித்து பஸ் ஸ்டாண்ட் சென்று ட்ரைனில் புக் செய்து சென்னை வந்து சென்னையில் இருந்து ஆட்டோ பிடித்து நெசப்பாக்கம் வந்து எனது மச்சினர் வீட்டுக்குள் நுழைந்தால் என்ன விஷயம் என்று கேட்பார்கள். அவர்களிடம் சொல்ல முடியுமா ??முகநூலில்  மத்தியர்  என்ற குரூப் ஒன்று உள்ளது. அதற்கு வருடாந்திர மீட்டிங் இங்கு நடக்கிறது. அதற்காக வந்தேன் என்று கூற முடியுமா?? என் மச்சினன் ஒன்றும் சொல்ல விட்டாலும் கூட என் மச்சினரின்  மனைவி எனது மன்னி  அவர்கள் மனதிற்குள் நினைத்துக் கொள்வார்கள் வேலை வெட்டி இல்ல பணத்திமிர் மீட்டிங்கு வந்துட்டானுங்க. அப்படீன்னு.. இதெல்லாம் எனக்கு தேவையா தலைவா??

இது என்ன கொடுமை .அனைவரையும் நீரே அழைத்துவிட்டு நீர் ஒருவர் வராமல் இருப்பது உனக்கு என்ன லாபமா??(வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம்)தலைவரே அனைவரும் வந்திருந்து நான் ஒருவன் வராமல் இருப்பதால் உமக்கு என்ன நட்டமா ??

இறுதியாக என்ன கூற விழைகின்றீர் தருமி. நான் மீட்டிங்கு வருவதைப் பற்றி இன்னும் உறுதியாக ஒரு முடிவும் எடுக்கவில்லை என்பதை தங்களுடைய தலைமைக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் தலைவரே.

நீர் வருவதையும் வராததையும் பற்றி நான் தெரிந்து கொள்வது எங்ஙனம்.( ரஜினி ஸ்டைலில் )நான் வருவது என்பது காலத்தின் கட்டாயம் .எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று தெரியாது .ஆனால் வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன் .அனைத்தும் என்னிடம் ஒன்றுமில்லை .இது காலத்தின் வசமுள்ளது. காலம் பதில் சொல்லும் . முடிந்தால் சந்திப்போம்.

நன்றி வணக்க்க்க்கம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ