அனைவருக்கும் இனிய வணக்கம் இப்பவும் சில மாதங்களாக நான் மத்யமரில் ஒன்றும் எழுதாமல் இருந்தேன் .அதற்குக் காரணம் எனக்கு முழங்காலில் வலி ஏற்பட்டு ஆப்பரேஷன் செய்ய வேண்டும் பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.நானும் இரண்டு மூன்று மாதமாக எங்கும் போகாமல் வெளியிலும் செல்லாமல் பெட்டிலிருந்து கொண்டிருக்கிறேன்.இன்று நான் பதிவிடுவதற்கு முக்கிய காரணம் ஒரு வாரம் முன்பு கோவை வானொலி நிலையத்திலிருந்து (ஆல் இந்தியா ரேடியோ கோயமுத்தூர் வானொலி நிலையம்) முன்னாள் ராணுவத்தினர் என்ற முறையில் என்னை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள்.அது நேற்று காலை 7 மணியிலிருந்து 71/4 மணி வரை கோவை வானொலி நிலையத்தில் ஒளிபரப்பாகியது. அதன் வாய்ஸ் மெசேஜ் வாய்ஸ் ரெக்கார்டர் இன்று காலை எனக்கு கிட்டியது அதை அனைவரும் கேட்கவேண்டும் என்ற காரணத்தினால் நான் எங்கு இந்த பதிவிட்டு வாய்ஸ் ரெக்கார்டர் இத்துடன் இணைத்துள்ளேன்.அனைவரும் தவறாமல் கேட்டு வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தெரிந்த கதை தெரியாத வரலாறு. இன்று நாம் காண இருப்பது பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு பக்கத்தில் உள்ள மாசாணி அம்மன் கோவில் வரலாறு உலகப் பிரசித்தி பெற்ற மாசா...
தெரிந்த கதை தெரியாத வரலாறு இன்று நாம் காண இருப்பது ஒரு தமிழ்ப் பழமொழி. அது என்னவென்றால் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அது என்ன கம்பன் வீட்டு கட்டுத்தறி என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா. ஒருமுறை புலமையில் மிகவும் தேர்ந்த அம்பல சோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். அவருக்கு தான் அனைத்தும் கற்றோம் என்ற செருக்கு மிகுந்துள்ளது. கம்பரின் வீட்டிற்கு வந்த பொழுது அவர் வீட்டிற்கு முன்னால் சாணி தட்டும் ஒரு பெண்மணியிடம் கம்பர் எங்கே என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி கம்பரை காண்பதற்கு நிறைய பேர் வந்திருக்கிறார்கள் கூட்டம் மிகுந்து உள்ளது ஆதலால் சற்று காத்திருங்கள் காணலாம் என்று கூறியுள்ளார். அவருக்கு உடனே கோபம் வந்தது. ஒரு சாணி தட்டும் ஒரு பெண்மணி கேட்டால் உண்டு இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க வேண்டும் இது என்ன இவ்வளவு பேசுகிறாயே நீ என்ன கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா என்ன என்று கேட்டார்.மேலும் மிகவும் வாயாடியாக இருக்கிறாயே என்றும் கூறினார் உடனே அதற்கு அந்தப் பெண்மணி ஐயா எனக்கு அதற்கெல்லாம் ஏது நேரம் எனக்கு அன்றாட பணிகள் பொழுது ச...
Comments
Post a Comment