சந்தேகம்

அனைவருக்கும் வணக்கம்."" இன்று இந்த தருமிக்கு ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது . அதைத் தீர்த்து வைப்போர்க்கு  ஆயிரம் பொற்காசுகள் பரிசு அளிக்கப்படும். டும் டும் டும் டும் டும்.

1975ம் ஆண்டு நான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றேன் .சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வரும்பொழுது இடப்பக்கம்  ஊனமுற்ற ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். பெரிய மண்டபம் போல் ஒன்று இருந்தது. மஞ்சள் திரை தொங்கிக் கொண்டிருந்தது. அவன் என்னை அழைத்து இதுதான் ""சிதம்பர ரகசியம்"" இரண்டு ரூபாய் கட்டணம் கொடுங்கள். சென்று உள்ளே பாருங்கள் என்று கூறினான். அங்கிருந்த பலரும் ஒன்றும் இல்லை சார் உள்ளே போனால் வெட்டவெளி வான்வெளி மேகங்கள் தான் தெரியும் சிவன் சக்தி என்பது ஆகாயத்தில் வெட்டவெளி வான்வெளியில் இருக்கிறார்கள் இது தான் சிதம்பர ரகசியம் வேறு ஒன்றுமில்லை என்று கூறினார்கள்.

நான் மீண்டும் 2015இல் சிதம்பரம் சென்று சாமி தரிசனம் செய்து முடித்தவுடன் உடனே அடுத்த அறைக்குச் சென்று( ஸ்வாமி சன்னதியை அடுத்து) கதவைத் திறந்து தீபாராதனை காட்டினார்கள். இரண்டு மரம்போல் அதில் நிறைய தீபங்கள் எரிந்து கொண்டிருந்தது. கேட்டதற்கு இதுதான் சிதம்பர ரகசியம் என்று கூறினார்கள்..

நான் உடனே அங்குள்ள வயது முதிர்ந்த தீட்சதர்கள், சிவாச்சாரியார்கள், குருக்கள், போன்றோரிடம் முன்பு வெளியில் சிதம்பர ரகசியம் இருந்தது. இப்பொழுது அடுத்து உள்ளது. அங்கு வேறு மாதிரி இருந்தது. இங்கு வேறு மாதிரி இருக்கிறது. எப்பொழுது முதற்கொண்டு இங்கு வந்தது என்று கேட்டேன். அதற்கு அனைவரும் ஒருசேர ஒருமித்த குரலில் ஆதியிலிருந்து இங்குதான் இருக்கிறது என்று கூறி விட்டார்கள். என்னால் என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னைப்போல் சிதம்பரத்திலே வசிக்கும் பெரியவர்கள் யாரேனும் அல்லது பழைய காலத்தில் கண்டவர்கள் யாரேனும் இருந்தால் நான் கூறுவது சரியா தவறா என்று தயவு செய்து விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2. அதே காலகட்டத்தில் நான் திருப்பதியும் சென்றுள்ளேன் 1975 வாக்கில் தற்போது உள்ளது போல் கர்ப்பகிரகம், முன் மண்டபம், அர்த்த மண்டபம், ஒன்றும் இல்லாமலிருந்தது. நான் நேரடியாக வெங்கடாஜலபதியின் பாதம் வரை சென்று அவரை சுற்றி ஒரு திருவாய்ச்சி மட்டும் இருந்தது. அவர் பாதத்தின் அருகில் சென்று திருப்பாச்சியை சுற்றி வெங்கடாஜலபதியை வலம் வந்து நான் வெளியில் வந்தேன்.

அதுபற்றி சிலரிடம் நான் கேட்டதற்கு ஒரு சிலர் நானும் அதுபோல் பார்த்துள்ளேன் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் அது போல் இல்லை என்று கூறுகிறார்கள். இது எனது இரண்டாவது சந்தேகம்.

அனுபவம் வாய்ந்தவர்கள் யாரேனும் தயவு செய்து எனது சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

(ரெண்டு படங்களையும் சந்தேகத்திற்கு இணைத்துள்ளேன்)

நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ