சந்தேகம்
அனைவருக்கும் வணக்கம்."" இன்று இந்த தருமிக்கு ஒரு சிறிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது . அதைத் தீர்த்து வைப்போர்க்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு அளிக்கப்படும். டும் டும் டும் டும் டும். 1975ம் ஆண்டு நான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றேன் .சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வரும்பொழுது இடப்பக்கம் ஊனமுற்ற ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். பெரிய மண்டபம் போல் ஒன்று இருந்தது. மஞ்சள் திரை தொங்கிக் கொண்டிருந்தது. அவன் என்னை அழைத்து இதுதான் ""சிதம்பர ரகசியம்"" இரண்டு ரூபாய் கட்டணம் கொடுங்கள். சென்று உள்ளே பாருங்கள் என்று கூறினான். அங்கிருந்த பலரும் ஒன்றும் இல்லை சார் உள்ளே போனால் வெட்டவெளி வான்வெளி மேகங்கள் தான் தெரியும் சிவன் சக்தி என்பது ஆகாயத்தில் வெட்டவெளி வான்வெளியில் இருக்கிறார்கள் இது தான் சிதம்பர ரகசியம் வேறு ஒன்றுமில்லை என்று கூறினார்கள். நான் மீண்டும் 2015இல் சிதம்பரம் சென்று சாமி தரிசனம் செய்து முடித்தவுடன் உடனே அடுத்த அறைக்குச் சென்று( ஸ்வாமி சன்னதியை அடுத்து) கதவைத் திறந்து தீபாராதனை காட்டினார்கள். இரண்டு மரம்போல் அதில் நிறைய தீபங்கள் எரிந்து கொண்டிருந்தது. கேட்ட...