பரளி வாய்க்கால் அத்திக்கடவு அன்னமலை டிரிப்

மத்யமர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .நான் ஜூலை மாதம் முடிய விடுமுறையில் உள்ளேன். எனக்கு விடுமுறை ஜூலை வரை மத்யமரில் இருந்து கிடைத்துள்ளது.நிற்க.

என்பால் அன்பும் மதிப்பும் மரியாதையும் கொண்ட பல தோழர்கள் விடுமுறை முடிந்து விட்டதா?? ஏன் இன்னும் விடுமுறை முடியவில்லை?? என்று பல கேள்விகள் கேட்டு இருந்தார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த உளமார்ந்த நன்றி.

நான் மத்யமரில் விடுமுறையில் இருந்த பொழுதும் கோவை மத்தியமர்  நண்பர்களுடன் அடிக்கடி பேசிக் கொண்டும் அளவளாவிக் கொண்டிருந்தோம்.

பிறகு அனைவரும் பேசி ஒரு முடிவெடுத்து கோவை நண்பர்கள் அனைவரும் ஒரு சுற்றுலா செல்லலாம் என்று முடிவெடுத்து தலைக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்து ஃபாரஸ்ட் ஆபிஸர் பத்ராசாமி அவர்கள் தலைமையில் காரியதரிசியாக அனுராதா விஸ்வேஸ்வரன் அவர்கள் முன்னிலையில் தொழில் வல்லுனராக நானும் கேஷியராக  ஐசக்கும் ரேணுகாவும் ஈடுபட 5.5.19 அன்று பயணப்பட்டோம். எங்கு எப்படி கூறுகிறேன் .கேளுங்கள்.

அதிகாலை 3 மணிக்கு எழுந்து அனைத்து நியமங்களையும் முடித்துவிட்டு 5 மணிக்கு பஸ் பிடித்து 6 மணிக்கு சுந்தராபுரத்திற்கு சென்றோம் .அங்கு நான் எனது மனைவி  பத்ரா சாமி  ரேணுகா அனைவரும் காத்திருக்க பானுமதி நாச்சியர் தலைமையில் டூரிஸ்ட் வேன் வர அதில் சபாரத்தினம் குடும்பம் வந்து சேர பிறகு அங்கிருந்து நஞ்சுண்டாபுரத்தில் ஐசக்கும் ரகுலும் அவர் மனைவியும் ஏற நேராக உக்கடம் வழியாக பூ மார்க்கெட் வந்து மீனாவையும் மூர்த்தியையும் ஏற்றிக்கொண்டு வடகோவை சென்று வரதராஜன் அவர் மனைவி பின் அனுராதா  அவர்களையும் வள்ளிநாயகத்தையும் ஏற்றிக்கொண்டு கடைசி நேரத்தில் வெங்கியும் மதுர வாணியும் நாகமாணிக்கமும் சீதா மேடமும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வரவில்லை என்று கூறியதால் நாங்கள் 18 பேருடன் பயணப்பட்டோம்.

முதலில் துடியலூரில் இருந்த அமுதா உணவகத்தில் காலை சிற்றுண்டியை முடித்துக்கொண்டு காரமடை வழியாக அன்சூர் மன்சூர் கேத்தை வழியாக பரளி வாய்க்கால் சென்றடைந்தோம். அருமையாக நீந்தி நீராடிவிட்டு பிறகு அங்கிருந்து நேராக அத்திக்கடவு சென்றோம்.

எங்களுக்காக அங்கு உணவு தயாராக இருந்த பொழுதும் ஃபோட்டிங்க முடித்துவிட்டு உணவு அருந்தலாம் என்று கூறி அனைவரும் போட்டிங் boating ல் சென்றோம் .என்ன பிரமாதமான ஒரு போட்டிங். அந்த அத்திக்கடவு நீர்தான் கோவையின் பிரதானமான குடிநீர் என்ற காரணத்தினால் மோட்டார் படகு முதற்கொண்டு அங்கு இயங்குவதில்லை.நீர் அசுத்தமாகும் என்ற காரணத்தினால். ஒரு பொல்யூஷன் இல்லாமல் சுத்தமாக உள்ள நீரில் பைபர் போட்டில்  தான் சென்றோம் . நீர் மிகவும் சுவையாக உள்ளது என்று கூற நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் .காரணம் அங்கு வாழும் ஆதிவாசிகள் மலைவாழ் மக்கள் அவ்வளவு கவனமாக அங்கு அக்கறை எடுத்து அதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .நடாத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுவது சாலவும் சிறந்தது.தலைக்கு  500 ரூபாய் வசூல் செய்கிறார்கள் .படகில் செல்வது உணவு உண்பது அனைத்தும் அவர்களை சார்ந்தது. என்ன ஒரு சுவையான உணவு. ராகி உருண்டை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று மலைவாழ் மக்கள் தந்து தான் சாப்பிட்டேன். அருமையாக இருந்தது. சப்பாத்தி, சாதம் ,அங்கு வெஜிட்டேரியனும் உண்டு. நான்வெஜிடேரியனும் உண்டு.

படகுப் பயணத்தை முடித்துக் கொண்டு உணவு உண்ண வந்தோம். சுவையான அருமையான சுகாதார முறையில் சமைக்கப்பட்ட பிரமாதமான கிராம நகர ங்களில் வசிப்பவர்களுக்கு ஏற்றது போல் உருவாக்கியுள்ள அந்த ஆதிவாசிகளுக்கு நன்றி கூற நாங்கள் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம். என்ன ஒரு பக்குவமான பேச்சு. பிரமாதம் பிரமாதம் வாழ்த்திக் கொண்டே போகலாம்..

இங்கு நான் முக்கியமாக ஒன்றை கூற விரும்புகிறேன் .நானும் அனுராதா மேடமும் தனித்தனியாக தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தோம்  பேட்டி இன்றோ நாளையோ சன் டிவி ,கலைஞர் டிவி ,லோட்டஸ் டிவி ,சத்தியம் டிவி, கேப்டன் டிவி, முதலியவற்றில் ஒளிபரப்பாகும். ஒளிபரப்பாகும் நேரத்தை அவர்கள் போன் செய்து கூறுகிறேன் என்று கூறியிருக்கிறார்கள். நேரம் தெரிந்த பிறகு நான் மத்தியமர் குழு நண்பர்களுக்கு கூறுகிறேன். விருப்பப்பட்டவர்கள் எங்களது பேட்டியை பார்க்கலாம் .ஆனால் அனைத்து நண்பர்களும் தவறாமல் பார்க்க வேண்டும் என்று உளமாற மனதார விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

பிறகு உணவு உண்டு மீண்டும் மலைமேல் பயணப்பட்டோம். தென்னகத்தில் பழனி மிகவும் முக்கியமான ஒரு முருகன் திருத்தலம் . (நான் பிறந்ததே பழனி தானே. எங்க ஊர் பெருமையை கூறாமல் இருப்பேனா). அத்தலத்திற்கு இணையாக இரண்டாவது பழனி என்று கூறுமளவிற்கு அன்னமலை என்ற ஒரு முருகன் கோயில் உள்ளது .மலைமேல் அருமையாக அழகாக அமைந்துள்ள முருகன் ஸ்தலத்தை அனைவரும் சென்று தரிசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் வந்து இரவு உணவை முடித்துக் கொண்டு கோவை உக்கடம் வந்து அனைவரும் இறங்கினோம். நான் பொள்ளாச்சி வந்து சேரும் பொழுது இரவு ஒரு மணி .ஆனால் மனமெல்லாம் மகிழ்ச்சி சந்தோஷம். அருமையான பயணம்.

முக்கியமான ஒரு தகவல் .இங்கு நினைத்தவுடன் சுற்றுலா ஸ்தலம் போல் அனைவரும் சென்றுவிட முடியாது .ஒரு நாளைக்கு 150 பேர்கள்தான் அலவ்டு.சனி ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டுமே செல்ல முடியும் .சம்மர் வெக்கேஷன் என்பதால் தற்பொழுது மே மாதத்தில் ஐந்து தினங்கள் செல்லமுடியும். ஒருவருக்கு 500 ரூபாய் கட்டணம் .உணவு படகுப் பயணம் அனைத்தும் அதனுள் அடக்கம். நாம் இங்குசெல்வதற்கு முன்பு கூகுளில் சென்று paralivaikkal egno tourist.com சென்று (சரியாகத் தெரியவில்லை விலாசம் தேவை என்றால் நான் கேட்டு சரியான விலாசத்தை அனுப்புகிறேன்) நம்முடைய விவரங்களை பதிந்து அனுமதி பெற்று பணத்தைச் செலுத்தி அந்த ரசீதுடன் சென்றால்தான் வனத்திற்குள் செல்ல முடியும் என்பதை இங்கு நான் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். நாங்கள் பத்ராசாரின் தலைமையில் சென்றதால் அவர் அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்.

அன்பு ,அரவணைப்பு ,உணவு, உபசரிப்பு, நதியில் பயணம் ,நதியில் நீராட்டம், உடலுக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி, அனைத்தும் ஒருசேர உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால் வனத்திற்குள் சென்று ஆதிவாசிகளுடன் பழகி அவர்களின் உணவை உண்ண வேண்டும் என்றால் ,அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது தவறாமல் இந்த ஸ்தலத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இத்துடன் முடித்துக் கொண்டு விடைபெறுகிறேன் நன்றி நன்றி நன்றி .

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

யாயும் ஞாயும் யாராகியரோ