இன்டக்ஷன் ஸ்டவ்
இப்பவும் தருமிக்கு ஏற்பட்டது போல் எனக்கும் ஒரு மாபெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தீர்த்து வைப்போருக்கு மனமார்ந்த நன்றிகள் .ஆயிரம் பொற்காசுகள் எல்லாம் கிடையாது. மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.சந்தேகம் என்னவென்றால்
நான் புதியதாக எங்கள் விமானப் படை கேண்டீனில் இருந்து மூன்று மாதத்திற்கு முன்பு ஒரு இன்டக்ஷன் ஸ்டவ் வாங்கினேன்.20 நாட்களுக்கு முன்பு என் தங்கையின் கணவர் திடீரென இறந்த காரணத்தினால் அவர்களிடம் உள்ள ஒரு கேஸ் ஸ்டவ் பத்தவில்லை என்ற காரணத்தினால் இதைக் கொண்டு வந்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார் என் தங்கை. நான் எனது வீட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அவர்கள் வீட்டிற்கு டூவீலரில் கொண்டு சென்றேன் .தற்சமயம் பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை தோண்டுவதன் காரணமாக 10 கிலோ மீட்டர் ரோடும் படு மோசமாக இருப்பதால் தூக்கி தூக்கி போட்டது .அதன் விளைவு.
எனது induction stove in கீழ்ப்புறத்தில் கண்ணாடி உடைந்து விட்டது நாலு சைடு மட்டுமே கண்ணாடி சிறு அளவில்உடைந்தது என்றும் நடுவிலோ வேறு எங்கும் ஒன்றும் சேதாரம் இல்லை என்றும் மேலும் விரிசல் ஒன்றும் இல்லை. அதைத் திருப்பிக் கொண்டுவந்து உபயோகப்படுத்துவதற்கு என் மனைவிக்கு தயக்கம் .காரணம் ஷாக் அடித்து விடுமோ என்று. கடையில் கொண்டு கொடுத்த போது அவர்கள் ஷாக் அடிக்காது என்று சொல்லியும் என் மனைவி அதை மாற்ற வேண்டும் என்று கூறியதால் (இங்குதான் நான் சப்ஜெக்டுக்கு வருகிறேன்) பொள்ளாச்சியில் மிகவும் ஃபேமஸ் ஆன ஸ்டீல் ஹவுஸ் என்ற கடையை அணுகினேன்.
அவர்கள் இது கண்ணாடியை மாற்ற வேண்டுமென்றால் 2000 ரூபாய் ஆகும். ஆனால் நீங்கள் எக்ஸ்சேஞ்ச் எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அனுசரித்து நாங்கள் விலையை போட்டு தருவோம் என்று கூறினார்கள்..
சரி அப்படியென்றால் இதற்கு என்ன விலை. இது என்ன விலைக்கு எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்டேன் .அவர்கள் இதற்கு விலை கிடையாது சார் .நீங்கள் எடுக்கும் பொருளை அனுசரித்து இதற்கு விலையை நாங்கள் முடிவு செய்வோம் என்று கூறினார்கள். இன்டக்ஷன் ஸ்டவ் மாற்றி எடுத்தால் 2500 கழிக்கப்படும். ரைஸ் குக்கர் எடுத்தால் 500 கழிக்கப்படும் .ஸ்டீல் பாத்திரம் எடுத்தால் இதன் விலை 100 கழிக்கப்படும் .இதே நீங்கள் ஒரு அலுமினிய பாத்திரம் எடுத்தால் இந்த ஸ்டவ்வின் விலை 50 ரூபாய் ஆக கணக்கிடப்படும் என்று கூறினார்கள் .எனது சந்தேகம் இதுதான். விலையை நிர்நகிக்காமல் நாம் எடுக்கும் பொருளை அனுசரித்து அவர்கள் விலை கூறுவது என்பது சாத்தியமா??! இது நடைமுறையில் உள்ளதா??! இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அனுபவமுள்ள அனுபவஸ்தர்கள் யாராவது தயவுசெய்து இந்த என் சந்தேகத்தை தீர்த்து வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..
அவ்வாறு கூறும் பட்சத்தில் அவர்களிடம் சென்று மீண்டும் கோரிக்கை வைக்க முடியும். ஆதலால் நமது குரூப்பில் உள்ள யாராவது இந்த என் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .இதுவே தருமியின் சந்தேகம்.
Comments
Post a Comment