செம்மை மாதர் போட்டிக் கதை
#செம்மை மாதர்.
சந்தேகமே இல்லாமல் செம்மை மாதர் என்று நான் குறிப்பிடுவது எனது மனைவியைத் தான். காரணம் நான் கடந்து வந்த பாதைகளில் நடந்த நிகழ்வுகளை நினைவு கூறும் போது உண்மையாகவே செம்மையாக அவர் செய்த தியாகங்களும் பணிவிடைகளும் காரியங்களும் என்னை அசத்தியிருக்கின்றன.உதாரணமாக ஒன்றிரண்டை நான் இங்கு சொல்கிறேன்.
1. 1986-ம் வருடம் நான் இந்திய விமானப்படையை விட்டு வெளியில் வருவதற்காக அப்ளிகேஷன் கொடுத்துள்ளேன். ஆனால் மனதில் உள்ளூர ஒரு பயம். 87 மே யில் வெளியில் வரவேண்டும். விருப்ப ஓய்வு பெற்று 86 டிசம்பரில் அதற்கான proceeding சரி செய்வதற்கு டில்லி செல்ல வேண்டும். அப்பொழுது நான் சூலூர் விமானப்படையில் இருக்கின்றேன். எனது மகனுக்கு மூன்று வயது.
நான் சிந்திப்பதற்கு காரணம் எனக்கு பூர்வீக சொத்தோ மாமனார் வகையில் சொத்தோ கிடையாது .நான் உழைத்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் .ஆனால் நான் விமானப் படையில் இருந்த பொழுது M.Com,BGL, PGDPM படித்துள்ளேன். வெளியில் நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விருப்ப ஓய்வு மனு விமானப்படையில் கொடுத்துள்ளேன் .ஆனால் மனம் சஞ்சலிக்க ஆரம்பித்த பொழுது எனது மனைவி தைரியமாக வெளியில் வாருங்கள் உங்களுடைய திறமைக்கும் தகுதிக்கும் படிப்புக்கும் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதுவரை பழைய சோறு என்றாலும் நாம் சாப்பிட்டுக் கொண்டு சந்தோசமாக இருப்போம். அதற்காக மீண்டும் நீங்கள் இங்கு உழைக்க வேண்டும் என்ற தேவையில்லை. நான் இருக்கிறேன் உங்களுடன் ,தைரியமாக வாருங்கள் என்று கூறினார் .அப்பொழுது அதுவே எனது அருமருந்தாய் இருந்தது. அதுமட்டுமல்லாமல் இரவு ரயிலில் ஏறுவதற்கு முன்பு கூட செல்ல வேண்டுமா ??என்று ஆலோசித்தபோது சூட்கேசில் தேவையான பொருள்களை நிரப்பி சென்று வாருங்கள் என்று சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்தது அந்த தேவதை என்று கூறினால் மிகையாகாது.
2. நான் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ல் பணி செய்து கொண்டிருந்த சமயம் ஒரு நாள் ஸ்கூட்டரில் இருந்து விழுந்து விட்டேன் .வலது கையில் சற்று லேசான வலி உண்டாயிருந்தது. ஆரம்பத்தில் நான் அதை கவனிக்கவில்லை. நாளாக நாளாக வலி அதிகமாக டாக்டரிடம் சென்று காண்பித்ததற்கு இறுதியாக கோவை கங்கா ஹாஸ்பிடல் சென்ற பொழுது கங்காவில் Dr. ராஜசேகர் அவர்கள் ஸ்பான்டிலிடிஸ் ஆல் அவதிப்படுகிறீர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி எனக்கு ஆப்பரேசன் செய்தார் ( பின்னாளில் அந்த ஆபரேஷன் தேவை இல்லாத ஒன்று என்பதை உணர்ந்தேன் அது வேறு விஷயம்) ஆனால் அந்த ஆபரேஷன் செய்த பொழுது கழுத்தை சுற்றி மப்ளர் கட்டியது போலும், மேலும் தொடையிலிருந்து ஒரு நரம்பை கட் செய்து கழுத்தின் அருகில் வைத்து என்னை ஆட கூட அசையக் கூட முடியாமல் செய்து வைத்திருந்தார்கள் .அந்த நேரத்தில்,
எனக்கு உணவு ஊட்டி விடுவதிலிருந்து எனது சகல தேவைகளையும் சகல தேவைகளையும் அடிக்கோடிட்டுக் கூறுகிறேன் சகல தேவைகளையும் முகம் சுளிக்காமல் கவனித்துக் கொண்டார் என்றால் அது போன்ற செம்மையான ஒரு மனைவி கிடைக்க நான் எத்தனை பிறவிகள் தவம் செய்து இருக்கிறேனோ தெரியவில்லை.
இது போன்ற நிறைய நிகழ்ச்சிகளை கூறிக் கொண்டே போகலாம். ஆனால் last but not the least என்பது போல் இறுதியாக ஒரே ஒரு நிகழ்வை கூறி நிறைவு செய்கிறேன்.
1983 ஆம் வருடம் பிக்கானீர் இராஜஸ்தானில் இருந்தோம் .அப்பொழுது அங்கு ஒரு எக்ஸிபிஷன் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டிற்கு பயணப்பட வேண்டும். டிக்கெட்டை நான் ரிசர்வேஷன் செய்துவிட்டேன் .அந்த நேரத்தில் அந்த exbition ல் சுற்றியும் நம்பர் இருக்கும் நடுவில் ஒரு பந்தை வைத்து இழுத்து அந்தப் பந்து எந்த நம்பரில் விழுகிறதோ அதற்கு மூன்று மடங்கு பணம் என்று கூறி ஒரு விளையாட்டு இருந்தது. to be frank it is a type of gambling hope so all are aware .
என்னுடைய போறாத காலம் நான் வைத்திருந்த ஆயிரத்து 200 ரூபாயும் அந்த விளையாட்டில் நான் தோற்றுவிட்டேன் .1983 ம் வருடம் 1200 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை.நான் வருத்தத்துடன் அழுது கொண்டே வந்து எனது மனைவியிடம் கூறினேன். நாம் தமிழ்நாட்டிற்கு உன் தாய் தந்தையரையோ என் தாய் தந்தை சகோதரர்கள் யாரையுமே பார்க்க முடியாது. காரணம் பணம் இல்லாமல் நாம் அங்கு போக முடியாது. என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறினேன் .அதற்கு அவர் கூறிய ஒரே வார்த்தை நான் தற்பொழுது தமிழ் நாட்டிற்கு செல்ல விரும்பவில்லை. உங்கள் பணம் போனதற்காக நீங்கள் வருந்தாதீர்கள் .நாம் மீண்டும் ஒருமுறை அடுத்த வருடம் செல்வோம் .இப்பொழுது விடுமுறைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி எனது மனதிற்கு ஆறுதலைத் தந்த ஒரு மகா தைரியசாலி என் மனைவி.
கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி மத்யமர் annual மீட்டிங் சென்னையில் நடந்த போது நான் வருவதா வேண்டாமா என்று ஒரு fluctuating mind லேயே இருந்தேன் .ஆனால் அவசியம் நீங்கள் செல்ல வேண்டும் ,சென்று வாருங்கள், என்று கூறி துணிமணிகளை எடுத்து சூட்கேசில் அடுக்கி என்னை ரயிலிலும் ரிட்டன் பஸ்ஸிலும் கம்பல் பண்ணி ரிசர்வேஷன் செய்ய வைத்து என்னை மீட்டிங் அட்டென்ட் செய்ய வைத்த பெருமையும் எனது மனைவியையே சாரும்.
So இது போன்ற பல நிகழ்வுகளை கூறிக் கொண்டே போகலாம். இறுதியாக உறுதியாக நான் கடந்து வந்த நடந்துகொண்டிருக்கின்ற நடக்க இருக்கும் மாதங்களில் செம்மை மாதர் என் மனைவியே என்று கூறி நிறைவு செய்கின்றேன் நன்றி நன்றி நன்றி.
Comments
Post a Comment