கோவை மீட் மத்யமர்

அனைவருக்கும் வணக்கம் .இன்று ஒரு மறக்க முடியாத நாள் (17.03.2019 மாலை 2 டு 5) .காரணம் கோவையில் நடந்த மினி மத்யமர் மீட். நாம் மத்யமர் என்று சொல்வதில் பெருமை படுவோம் .தலை நிமிர்ந்து நிற்போம். நமது மதிப்பு பெருமை உச்சத்தில் ஓங்கி நிற்கிறது என்பதற்கு உதாரணம் கோவையில் நடந்த மீட்டிங். ஒவ்வொருவரின் முகத்திலும் என்ன ஒரு சிரிப்பு. என்ன ஒரு சந்தோசம் .என்ன ஒரு ஆர்வம். என்ன ஒரு மந்தகாசம். என்ன ஒரு அனாயசமான ஒரு பங்களிப்பு .தானே மனமுவந்து மிக ஈடுபாட்டுடன் அனைத்து காரியங்களும் நடத்துவதற்கான திறமை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் விஞ்சி நிற்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. உதாரணம்

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தேர்வாகியது மத்தியமர் மீட்டிங் .17 3 2019 ல் கோவையில் நடத்தலாம் என்று. அனு மேடம் கும்பகோணத்தில் இருந்து வருகிறேன் ஆவண செய்வோம் என்று கூறினார்கள். முதலில் திரு பி எஸ் என் எல் SDE  ஆக பணிபுரிந்த சிவகாமசுந்தரியின் வீட்டில் ராம்நகரில் நடத்தலாம் என்று முடிவு செய்தோம். இடையில் 10 பேருக்கு மேல் அங்கு நடத்த முடியாத காரணத்தினால் கணபதியில் இருக்கும் மீனா அவர்கள் எங்கள் வீட்டில் நடத்தலாம் என்று கூறினார்கள் .இதற்கு இடையில் செல்வபுரத்தில் வசிக்கும் பானுமதி நாச்சியார் அவர்கள் நான் சிற்றுண்டி அனைத்தும் தயார் செய்கிறேன் என்று கூறி இடமாற்றம் காரணமாக எனது இல்லத்திலேயே நடத்தலாம் என்று மனமுவந்து அனைவரும் இங்குதான் வர வேண்டும் என்று கூறி இறுதியாக அங்கேயே நடத்துவது என்று முடிவு செய்து செல்வபுரத்தில் திருமதி பானுமதி நாச்சியார் வீட்டில் நடத்தினோம்.

கலந்து கொண்டவர். கோவை திருப்பூர் பழநி கிணத்துக்கடவு முதலிய நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைவரும். அவர்கள் பெயர்கள் முறையே. 

அனு மேம். வாசுதேவன். வெங்கட் வெங்கி. பத்ரா சாமி. வரதராஜன். நாகராஜன் வெள்ளியங்கிரி. சிவகாமசுந்தரி. மீண்டும் திண்ணை சாலை குமரன். சபாரத்தினம் .நடராஜன் வெங்கடேஸ்வரன். ரகுல்ஜி. சிவக்கொழுந்து மாரியப்பன். நாக மாணிக்கம் .நாகப்பன் .சங்கரி. மீனா பழனியில் இருப்பவர். ரேணுகா. மீனா கோவை கணபதியில் இருப்பவர். புவனா நீலகண்டன் .வீட்டு ஓனரும் அனைத்தையும் நிர்வகித்தவருமான பானுமதி நாச்சியார்.

இரண்டு மணிக்கு மீட்டிங் தொடங்கியது. முதலில் கும்பகோணம் பில்டர் காபி அருமையான சுவையுடன் இருந்தது.. அதற்குப் பிறகு அறிமுகப்படலம். அறிமுகப்படலம் மூன்றரை மணிக்கு முடிந்தது. பின் சுவையான சிற்றுண்டி படலம் .இட்லி சேவை கேசரி கடலை உருண்டை கடலை பருப்பி கடலை மிட்டாய் கேக் பாப்கார்ன் சிப்ஸ் பஞ்சாமிர்தம் கை முறுக்கு  அல்வா முத்துச்சரம் இன்னும் பிற பிற பிற சொல்லிமாளாது .தின்பதற்கு ஆசையும் எண்ணமும் இருந்தாலும் வயிறு இல்லையே என்ற காரணத்தினால் மேற்கொண்டு தின்பதைத் தவிர்த்தோம். காரணம் அனைத்தும் அத்தனை சுவையாகவும் ருசியாகவும் மணமாகவும் இருந்தது.

மீண்டும் திண்ணை சாலை குமரன் அவர்கள் அனைவருக்கும் பேனா பக்தி புத்தகம் வள்ளிமலை சாமிகள் புத்தகம் குபேர எந்திரம் அனைத்தையும் அவர்கள் சார்பாக வழங்கினார்கள்.

அதற்கு அடுத்தபடியாக திரு பத்ராசாமி அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பரிசை வழங்கினார்கள். அதனுடைய போட்டோவை நான் இங்கு போடுகிறேன். மிகவும் உபயோகமான அனைவருக்கும் வாழ்வில் தேவையான ஒரு பரிசு.

இறுதியாக நன்றி நவிலல் போட்டோ குரூப்பாக எடுத்து அனைவரும் பிரியா விடை பெற்றோம் .கோயமுத்தூர் மீட்டிங் மிக மிக இனிமையாக கழிந்தது என்று கூறி விடைபெறுகிறேன் .நன்றி வணக்கம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்