ஏழுமலையான் மகிமை

தெரிந்த கதை தெரியாத வரலாறு .

இன்று நாம் காணவிருப்பது திருப்பதி ஏழுமலையான் மகிமை களில் ஒன்று. திருப்பதி வெங்கடாஜலபதி அனைவரையும் ஒரு போல பாவித்து ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் அருளை வாரி வழங்குகிறார்.அவ்வாறு அருளை வாரி வழங்கும் ஒரு ஏழை குடும்பத் தலைவனைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.;!??

ஒருமுறை திருப்பதியில் உள்ள சுவாமி புஷ்கரணி தீர்த்தத்தில் ராமசாமி என்ற  ஒரு  பெரியவர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த படிப்பறிவில்லாத பெரியவர் .. அவர் புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குளிப்பதற்காக சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த  ஒரு ரிஷி வந்தார். அப்போது ராமசாமி நீரில் மூழ்கி எழுந்து கோஹிந்தா கோஹிந்தா என்று ஏழுமலையானை வணங்கினார்.

அப்போது கற்றுணர்ந்த பெரியவர்
அவரிடம் சென்று அன்பரே கோஹிந்தா என்று சொல்லக் கூடாது .அது தவறு. கோவிந்தா என்று சொல்லவேண்டும் என்று கூற வாய் எடுத்தார்.

அதற்குள் அந்தப் பெரியவர் அப்பனே கோஹிந்தா .ஒவ்வொரு வருடமும் உனக்கு முடிகாணிக்கை செலுத்த வேண்டிகிட்டேன். இந்த வருஷமும் என் வேண்டுதலை செய்துவிட்டேன். போன வருஷம் என்னை மிகவும் சந்தோசமாக மகிழ்ச்சியாக வைத்திருந்தது போலவே இந்த வருஷமும் நீ வைக்க அருள் செய்ய வேண்டும் என்று ஏழுமலையானை நோக்கிப் பிரார்த்தித்தார்.

உடனே சகலமும் கற்றுணர்ந்த ரிஷி சற்று நிதானித்து மனதில் எண்ண ஓட்டங்களை ஓடவிட்டார். இந்தப் பெரியவர் போன வருஷமும் ஏழுமலையானை கோஹிந்தா கோஹிந்தா என்று சொல்லித்தானே அழைத்திருப்பார் .அதற்காக ஏழுமலையான் ஒன்றும் கோபித்து கொள்ள வில்லையே .போன வருஷம் இவருக்கு தேவையான அனைத்தையும் திருப்பதி வெங்கடாஜலபதி செய்தானே. அது போல இந்த வருஷமும் எனக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும் என்று தானே வேண்டிக் கொள்கிறார். அப்படியென்றால் தன்னை பக்தர்கள் எப்படி அழைத்தாலும் ஏற்றுக் கொண்டு அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுபவன் தானே இந்த ஏழுமலையான் .இந்த வருஷம் எனக்கு சகல நன்மைகளையும் அருள வேண்டும் என்று தானே வேண்டிக் கொண்டார்.அதானால் தானே போன வருடம் அழைத்ததை போலவே இப்பவும் கோஹிந்தா  என்று அழைத்துள்ளார். ஒரு குழந்தை மழலை மொழியில் அழைத்தால் தாயோ தந்தையோ கோபித்துக்கொள்வது இல்லையே .அதன் உச்சரிப்பை கேட்டு மகிழ்ச்சி தானே அடைகிறார்கள். அதுபோல ஏதுமறியாத இந்த பெரியவரின் பக்தியைத்தான் ஏழுமலையான் கண்டு கொண்டு இருக்கிறானே அன்றி அவர் எவ்வாறு உச்சரிக்கிறார் என்ன சொல்லி கூப்பிடுகிறார் என்று சற்றும் கவனம் செலுத்துவதில்லை என்று இதில் இருந்து தெரிகிறது அல்லவா.!!?? ஏழுமலையான் திருப்பதி வெங்கடாஜலபதி பக்திக்கு தான் கட்டுப் பட்டவன் என்று இதன் மூலம் நன்கு விளங்குகிறது.பக்தர்கள் என்ன சொல்லி அழைத்தாலும் பக்தி தான் சிறந்தது என்று முடிவு செய்து அவர்களது தேவையை நிறைவேற்றுகிறார்.  பக்தர்கள் தன்னை எவ்வாறு அழைக்கிறார்கள் என்று ஏழுமலையான் கவலைப்படுவதே இல்லை என்பது போன வருஷம் அவருடைய தேவையை நிறைவேற்றியதிலிருந்து நன்கு தெரிகிறது .ஆதலால் அவரை திருத்துவதற்கு நாம் முனைய வேண்டாம் என்று கற்றுணர்ந்து ரிஷி தெளிவடைந்து அவர்தம் பாதையில் அந்தப் பெரியவரை மனதார வாழ்த்தி தன் வழியே ஏழுமலையானின் கருணையை நினைத்து மகிழ்ந்து அவனை வணங்கியபடியே சென்றார்.

இதுவே ஏழுமலையானின் கருணை. ஏழுமலையான் பக்திக்குத் தான் கட்டுப்பட்டவன் என்றும் வேறு ஒன்றுக்கும் அல்ல என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி.

நன்றி நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்