மானவேடன் கதை

தெரிந்த கதை தெரியாத வரலாறு .

இன்று நாம் காண இருப்பது குருவாயூரப்பனின் திருவிளையாடல்களில் ஒரு பகுதி .நாம் குருவாயூர் சென்றால் ஐப்பசி மாதத்தில் கடைசி நாளில் "கிருஷ்ணகீதி" என்றொரு நாடகம் நடக்கும். ஏன் இந்த நாடகம் நடக்கிறது !!??எதனால் நடக்கிறது!!?? இதன் பின்னணி என்ன என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா¡??

ஒரு சமயம் மானவேடன்  என்ற அரசன் கேரளாவை ஆண்டு வந்தான். ஒரு நாள் அவன் குருவாயூரப்பனை தரிசிக்க வேண்டி குருவாயூர் வந்தான். அப்பொழுது குருவாயூரப்பனை தினமும் நேரில் சந்தித்து அவருடன் உரையாடும் வில்வமங்கலம் சுவாமியை கண்டான்.

அவரின்  காலில் விழுந்து வணங்கி பணிவுடன் சுவாமிகளே நீங்கள் தினமும் குருவாயூரப்பனை பரம்பொருளை கிருஷ்ணனைக் கண்டு அவனுடன் உரையாடுகிறீர்கள் .நான் ஒரே ஒரு முறை அவனை தரிசிக்க வேண்டும். நேரில் காணவேண்டும். தாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் பணிவுடன் கேட்டுக் கொண்டான்.

அதற்கு வில்வமங்கல  சுவாமிகள் என்ன விளையாடுறியா !!??அதெல்லாம் நடக்கிற காரியமா?? பெரிய பெரிய முனிவர்கள் எல்லாம் அவரது கடைக்கண் பார்வையாவது  கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள். தவம் செய்து உடலை வருத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காத தரிசனம் உனக்கு எப்படி திடீரென கிடைக்கும். அதெல்லாம் முடியாத காரியம் என்று கூறிவிட்டார்.

அவர் சொல் கேட்டு மானவேடன் அங்கேயே அமர்ந்து ஓவென்று கதறி அழ ஆரம்பித்து விட்டான். நான் உன்னி கிருஷ்ணனை குருவாயூரப்பனை கண்டே ஆக வேண்டும் என அடம் பிடித்தான்.

அவனது  நிலையைக் கண்ட திரு வில்வமங்கல சுவாமிகள் சரி  சரி நீ அழ வேண்டாம் .நான் இன்றிரவில்  கிருஷ்ணனிடம் பேசும் பொழுது இது பற்றி கேட்டு கிருஷ்ணர் என்ன கூறுகிறார் என்று உன்னிடம் கூறுகிறேன். அவர் சம்மதித்தால் நீ அவரைப் பார்க்கலாம் என்று கூறினார். அதுகேட்டு அரசன் மிகவும் மகிழ்ந்து அவருடைய பதிலுக்காக காத்து இருந்தான்.

அன்றிரவில் கிருஷ்ணரிடம் சுவாமிகள் அதுபற்றி கேட்ட உடனே குருவாயூரப்பன் சம்மதித்து விட்டார். நாளை அதிகாலையில் மகிழ மரத்தடியில் நான் விளையாடிக் கொண்டிருப்பேன் .அங்கே வந்து என்னைப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார் உன்னிகிருஷ்ணன். மானவேடனுக்கு மிகவும் அதிர்ஷ்டம் அடித்தது.

மறுநாள் பகவான் சொன்னது போலவே தன் தலையில் மயிலிறகு காலில் கொலுசு இடுப்பில் ஒட்டியாணம் என்று அனைத்து அணிகலன்களையும் அணிந்து கொண்டு உன்னிகிருஷ்ணன் என்று மலையாளத்திலும் சின்ன கண்ணன் என்று தமிழிலும் அழைக்கப்படும் குருவாயூரப்பன் விளையாடிக் கொண்டிருந்தார்.அவரைக் கண்ட அரசன் கண்குளிர கண்டு உணர்ச்சி வேகத்தில் அவரை தூக்கிக் கொஞ்ச ஓடினான். உடனே கிருஷ்ணர் தடுத்து விட்டார்.

மன்னா  வில்வமங்கல சுவாமிகள் என்னைப் பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி கேட்டார் .நான் கொடுத்தேன். என்னை தூக்கி விளையாட கொஞ்ச அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மானவேடன் பரவசத்தில் நின்ற வேளையில் அவனது கையில் ஒரு மயில் இறகு இருந்தது .அது கண்ணன், கிருஷ்ணன் ,குருவாயூரப்பன், உன்னிகிருஷ்ணன், சின்னக்கண்ணன், தனக்கு கொடுத்தது என்பதை உணர்ந்து அவன் மிகவும் மகிழ்ந்து அதை ஒரு ரத்தினகீரிடத்தில்  பதித்து பூஜித்து வந்தான்.

உடனே அவன் அரண்மனைக்கு வந்து கிருஷ்ணரின் புகழ்பாடும் கிருஷ்ணகீதி என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். இந்நிகழ்வு நடந்தது ஒரு ஐப்பசி மாதத்தின் கடைசி நாள் என்பதால் அந்த நாளில் அன்றிலிருந்து இந்த நாடக நிகழ்ச்சியை குருவாயூரில் எப்பொழுதும் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து இன்றும் ஐப்பசி மாதத்திலன் கடைசி நாளில் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணனாக நடிப்பவர் மயிலிறகு பொருத்திய ரத்தின கிரீடம் தரித்து இருப்பார். இதுவே கிருஷ்ணகீதி என்ற நாடகத்தின் பின்னணி ஆகும்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்