மத்யமர் ஆண்டு விழா பதிவு
பிப்ரவரி 3ஆம் தேதி அதிகாலை 8. 40 மணிக்கு இன்போசிஸ் ஹாலில் நுழைய சங்கர் ராஜரத்தினம் பாருங்கள் வாசுதேவன் என்று அழைக்க நம்மைக் கண்டவுடன் பேர் சொல்லிக் கூப்பிடுகிறாரே என்று மனம் புளகாங்கிதம் அடைய உடனே செல்வி டேக் அணிந்து கொள்ளுங்கள் என்று கூற சிவசுப்பிரமணியம் தேடி எடுத்துத் தர உடனே கீத் மாலா அபர்ணா முகுந்தன் அவர்கள் அனைவரும் வாருங்கள் என்று வரவேற்க உடனே அனு மேம் வந்து குசலம் விசாரிக்க அனைவருடனும் கலந்தாலோசித்து கொண்டிருக்கும் பொழுது கொண்டுவந்த சூட்கேசை எங்கே வைக்க என்று சங்கரிடம் கேட்க அவர் உள்ளே அறையில் சென்று வையுங்கள் என்று கூற நான் உள்ளே செல்ல ரோகினி மேடமும் மீனாட்சி உலகநாதனும் வாசுதேவன் என்று கூற ஆக நம்மை யாரும் யார் என்று கூறாமலே கண்டுபிடித்து விட்டார்கள் என்று சற்று ஆணவம் அகங்காரம் தலைக்கேற உள்மனது இருக்குடா வாசுதேவா உனக்கு என்று கூற அதையும் பொருட்படுத்தாமல் சூட்கேசை வைத்து விட்டு வெளியில் வர நண்பர் வேலுமணி வாருங்கள் காபி சாப்பிட என்று அழைக்க அப்பொழுது வெங்கட்ராமன் வீசி முதலியோர் வந்து குசலம் விசாரிக்க அந்த சமயம் யோகாம்பாள் வர அவரிடம் பேச அவர் டூத்பேஸ்ட் கொடுத்திருக்கிறார் என்று சொல்ல அதற்கு மடிப்பாக்கம் வெங்கட் டுத் பேஸ்ட்என்பது உங்களுக்கெல்லாம் அல்ல அது பல் தேய்க்கிறவர்களுக்கு தானே என்று கூற அந்த நேரம் ஒருவர் காப்பி வாங்க இந்த ஜோக்கைக் கேட்டு சிரித்து என் மேல் காபியை ஊற்ற சபாரி சூட்டில் கரைபடிந்த விட்டதே என்று நான் சென்று கழுவ (இன்னமும் வீட்டில் திட்டு கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் மறக்காமல் இங்கு கூற) என்னடா இவன் ஃபுல் ஸ்டாப் முற்றுப்புள்ளி வைக்க மாட்டானா என்று நீங்கள் கூறுவது எனக்கு கேட்க இடைச்செருகல் போல் ஒருமுறை அண்ணாதுரையிடம் a b c d என்ற alphabet இல்லாமல் உங்களால் நூறு வார்த்தை கூற முடியுமா என்று கேட்க ஒன்றிலிருந்து 99 வரை எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறி enough என்று நூறாவது வார்த்தையை கூற உடனே வேறொருவர் because because because என்ற ஒரு வார்த்தையை தொடர்ந்து தங்கள் ஒரு வார்த்தை அமைக்க முடியுமா என்று கேட்க there is a bad because because because is a conjunction என்று அவர் கூற அம்மொழியே பொன்மொழியாகக் கொண்டு நானும் ஃபுல் ஸ்டாப் கமா இல்லாமல் ஒரு பாராவை தோற்றுவிக்க முடியுமா என்று என் மனதில் தோன்ற அதன் நிமித்தமாக இந்த கட்டுரை எழுத பின் மண்டபத்தில் சென்று இருக்க வயதானவர் வருகிறார் என்று மைதிலி வரதராஜனை வணங்க அவர் கண்டவுடன் வாசுதேவன் நலமா என்று விசாரிக்க மனதில் எங்கேயோ நினைவலைகள் பறக்க அச்சமயம் சாந்தி ஸ்ரீனிவாசன் வந்து வணங்கி அவருக்கு ஆசி கூற மனம் புளகாங்கிதம் அடைய எனது உறவினரும் நண்பருமான திரு பின்னங்குடி சுப்பிரமணியன் வர அவரிடமும் கலந்து உரையாட மற்றும் காயத்ரி கணேசன் மல்லிகா பொன்னுசாமி சுஜா ஜக் தங்கம் கிருஷ்ணசாமி வித்யா போன்றவர்களுடன் அளவளவா காலை சிற்றுண்டி வேலுமணி உடன் அருந்த மதிய உணவு வித்தியா உடனும் சுஜா ஜக் வெங்கடேஷ் வீரராகவன் அனந்தநாராயணன் அவர்களுடனும் அருந்த நான் நீண்ட நெடுநாட்களாக அனந்தநாராயணனைக் கண்டு அளவளாவி வேண்டும் என்று நினைக்க பால்மனம் மாறாத பச்சிளம் குழந்தையாக என் முன் தோன்ற நான் நினைத்தது இவராக இருக்காது என்று நினைக்க அவருடன் அளவலமலேயே சென்றுவிட வீட்டிற்கு வந்து மனம் வருந்த அவரிடம் மீண்டும் மன்னிப்பு கோர மேடையில் இசை பாட்டு நடனம் முதலியவை நடக்க கடைசியாக நடந்த கச்சேரியை கண்டு எனது நண்பர் வெங்கட்ராமன் டி.நகரில் பைக்கில் கொண்டு வந்துவிட அச்சமயம் என்னை காண வேண்டி வந்த என் நண்பர் காரில் வர அவருடன் நான் கே.பி.என் பஸ் ஸ்டாண்ட் செல்ல சிற்றுண்டி அருந்தி அவர் என்னை பஸ் ஏற்றி விட காலை 6 .15 க்கு பொள்ளாச்சிவந்து சேர ஆறு முப்பது ஆகும் பொழுது ஆட்டோவில் வீட்டிற்கு வர அன்புடன் மனைவி காபி தர பருகி நிம்மதியாக மனம் மீட்டிங் கைப் பற்றி அசைபோட இனிதாக அந்த நாளை கழித்தேன் என்று கூறவும் வேண்டுமோ.
இதுவே ஆண்டுவிழாவை பற்றிய எனது தொகுப்பாகும்.
இடையில் கண்ட சில நண்பர்களின் பெயர்கள் விட்டுப்போயிருந்தால் மறக்க மன்னிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
Comments
Post a Comment