கடவுள் எங்கே இருக்கிறார்
தெரிந்த கதை தெரியாத வரலாறு
இன்று நாம் காண இருப்பது இறைவன் எங்கிருக்கிறான்??? அனைவரும் இறைவனை தேடிக்கொண்டிருக்கிறார்கள்!!! இறைவன் எங்கே இருக்கிறார்?? என்பது பற்றி விரிவாக விளக்கமாக பார்ப்போமா??
ஒரு பாடல் உள்ளது.
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே.
தத்துவ ஞானத்தை உண்மையை அழகாக அருமையாக இந்தப் பாடல் விவரிக்கிறது .இது புரியவில்லை என்றால் மேலும் விளக்கம் தர தயாராக உள்ளேன். விளக்கத்தைப் படித்துப் பயனடைய வேண்டுகிறேன்.
முன் ஒரு காலத்தில் மக்களனைவரும் கடவுளர்களாக இருந்தார்களாம். நாட்கள் செல்ல செல்ல பலரும் தம் இறைத்தன்மையை தவறாகப்பயன்படுத்தத் தொடங்க, பிரம்மனுக்கு மிகுந்த கோபம் உண்டாகி இவர்களிடம் இருக்கும் இறைத்தன்மையை முழுமையாக அகற்றி அவர்களால் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளித்து வைத்து விட முடிவு செய்து, தனது சக கடவுளர்களின் சபையைக்கூட்டி ஆலோசனை நடத்தினார்.
எங்கே ஒளித்து வைத்தால் இவர்களால் கண்டுபிடிக்கவே முடியாது என பல விதமாக யோசித்து விவாதம் நடை பெற்றது. ஒரு கடவுள் பூமிக்கு அடியில் மிக ஆழத்தில் புதைத்துவிட சொல்கிறார்.
உடனே பிரம்மா, இந்த மன நிலையில் அதை எங்கிருந்தாலும் தோண்டி எடுத்து விடுவார்கள் எனச் சொல்ல அடுத்த கடவுள், மிக ஆழமான கடலுள் புதைக்க அறிவுறுத்துகிறார்! அதற்கும் பிரமன், இல்லை, இல்லை! வெகு சீக்கிரம் கடலில் மூழ்குவதற்குப்பழகி தேடிக்கண்டு பிடித்து விடுவார்கள் என்றார.
அதே போல் நீண்ட ஆலோசனைக்குப்பின், யாருமே ஏற முடியா மலை உச்சியில் வைத்துவிடலாம் என்று பெரும்பான்மை கடவுள்களும் சொல்ல, பிரம்மாவும் யோசித்து பின்னர் சற்றே சலிப்புடன் இல்லை இல்லை இவர்கள் இருக்கும் பேராசை நிலையில் எப்படிப்பட்ட மாமலையானாலும் ஒரு நாள் ஏறிவிடுவார்கள் அதனால் அங்கும் பாதுகாப்பில்லை என்றார்.
எவ்வளவு யோசித்தும் ஒன்றும் புரிபடாமல், சுவாமி எங்களுக்கு ஒரு உபாயமும் கிடைக்கவில்லை. தாங்களே தான் ஒரு தீர்வு காணவேண்டும் என வேண்டினர். பலவாறும் நீண்ட நேரம் யோசித்து, இப்போதைய மனநிலையில் தங்களுக்குள்ளேயே இருக்கும் எதையும் தேடும் பக்குவம் இவர்களிடம் இல்லை. அதனால் இவர்களின் இறைத்தன்மையை மொத்தமாகக் களைந்து இவர்களுடைய ஆன்மாவுக்குள்ளேயே மிக ஆழமாகக்கொண்டுபோய் வைத்து விட லாம்.
வெறி கொண்டாற்போல் காடு, மலை, கடலிலெல்லாம் தேடுவார்களே அன்றி ஒருபோதும் தமக்குள்ளேயே இருக்கும் இறைத்தன்மையை இவர்கள் தேடப்போவதில்லை என்று சொன்னதும் அனைத்துக்கடவுள்களும் ஏகமனதாக ஆமோதித்து உடனே செயல்பாடுகள் நடந்தேறியது.
உடனே பிரம்மா அனைத்து கடவுளர்களின் சம்மதத்தோடு மனிதனின் மனதிற்குள் மிக ஆழமாக தெய்வத்தை இறைவனை பக்தியை ஞானத்தை புதைத்து வைத்தார் .அதை தேடுவதும் தேடாமல் இருப்பது அவரவர்கள் கையில் உள்ளது .மனிதர்கள் முயற்சித்தால் இறைவனைக் காணலாம் தெய்வத்தைக் காணலாம் என்றும் அதற்கு விடாமுயற்சியும் பொறுமையும் இருந்தால் அது சாத்தியம் என்று கூறி மனிதனின் ஆழ் மனதில் புதைத்து வைத்தார்.
அன்று ஆரம்பித்தது தான் மனிதன் ஓயாமல் பூமியைத்தோண்டுவதுவும், ஆழ்கடல் மூழ்கியும், காடு கானகம் சுற்றியும், கடு மலை ஏறியும் கால்கள் தேய அலைகிறான் இறைவனையும், இறைத்தன்மையையும் தேடி!!
*தனக்குள்ளேயே இருப்பது தெரியாமல்*
*SEEK WITHIN*
கட+உள்= கடவுள்.
ஆதலால் இறைவனை எங்கும் தேடாமல் தவம் தியானம் செய்து தனது மனதிற்குள்ளேயே தேட வேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
Comments
Post a Comment