குடும்ப பாட்டு
நேற்று நான் எனது குலதெய்வம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். இன்று எங்களது குடும்பப்பாட்டு பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.
நாளை நமதே படத்தில் வரும் அன்பு மலர்களே நம்பி இருங்களேன் நாளை நமதே என்ற குடும்பப் பாட்டை வைத்து அனைவரும் இணைவது போல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு பாட்டு இருக்கும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்தப்பாடல் எனது கொள்ளுத் தாத்தா பாட்டி எனது தாத்தா பாட்டியை தாலாட்டித் தூங்கவைத்த தாகவும் எனது தாத்தா பாட்டி எங்களது அப்பா அம்மாவைத் தாலாட்டி தூங்க வைத்ததாகவும் எங்களது அப்பா அம்மா எங்களைத் தாலாட்டுப் பாடலாக பாடி தூங்க வைத்ததாகவும் நான் எனது மகனை இந்த பாட்டு பாடி தாலாட்டித் தூங்கவைத்தேன் என்றும் தற்பொழுது என் மகன் அவன் மகனை எனது பேரனை இந்தப் பாட்டு பாடி தூங்க வைத்துக் கொண்டு இருக்கிறான் என்றும் பரம்பரையாக இந்த குடும்பப் பாட்டு வந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் பெருமையுடன் கூற விரும்புகிறேன் .
அந்தப் பாடல் இதோ.
குழந்தைகளைப் புகழ்வது போன்று ஒரு பாடல்.
இந்தப் பாடல் அம்மானை ராகத்தில் வரும்.
அதாவது வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் போன்று முடிவு தொடக்கமாக தொடர்ந்து வரும். அந்தாதி போல் இருக்கும்
இனி அந்த பரம்பரை தாலாட்டுப் பாடல்.
சாந்தோ !! சந்தனமோ!!?
சந்தனமானால் மணக்காதோ!!?
மணக்க மாங்காயோ!!!
மாங்காயானால் தொங்காதோ!!
தொங்க தோரணமோ !!!
தோரணமானால் கட்டாதோ!!!
கட்ட கோவிலோ!!
கோவிலானால் கும்பிடாணோ!!
கும்பிட ராஜாவோ!!
ராஜாவானால் ஏவானோ!!
ஏவ பல்லியோ!!
பல்லியானால் பதுங்காதோ;;;
பதுங்க கள்ளனோ!!!(கள்ளன்=திருடன்)
கள்ளனானால் ஓடாணோ!!!
ஓட காவிரியோ!!
காவிரியானால் கலங்காதோ!!
கலங்க வெள்ளமோ!!!(வெள்ளம்==தண்ணீர்)
வெள்ளமானால் வேண்டாம் போ!!.
இது தான் எங்களது குடும்ப பாட்டு,
இந்தப்பாடல் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.
Comments
Post a Comment