ஸ்ரீசைலம் மகாத்மியம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
அதாவது நாம் அனைவருக்கும் தெரிந்த கதை ஒன்று . அது என்னவென்றால் பழனியில் கோவணாண்டியாக வீற்றிருக்கும் முருகப்பெருமான் பழத்தின் மீது ஆசைப்பட்டு தனக்கு அந்தப் பழம் கிடைக்கவில்லையே என்ற காரணத்தினால் கோவித்துக்கொண்டு என் நாடு என் மக்கள் என்று தனி தேசத்தை உருவாக்கி நான் ஆட்சி செய்வேன் என்று கூறி பழத்தின் மீது கொண்ட ஆசையால் பழனியில் குடியேறி பழம் நீயப்பா என்று ஔவையால் பாடப்பெற்று பழனி மாநகர் ஆயிற்று .முருகன் பழத்தின் மீது ஆசை கொண்டு அது கிடைக்காமல் போனதால் அந்த ஊர்பழனி என்று ஆனது என்ற அனைவரும் அறிந்த ஒன்று.
ஆனால் இன்று நாம் காண இருக்கும் வரலாறு இதிலிருந்து முழுவதுமாக மாறுபட்டிருக்கும். அது என்ன என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!???
அதாவது ஸ்ரீ சைல புராணத்தில் ஸ்ரீசைல மகாத்மியத்தில் கூறியிருப்பது என்னவென்றால் சிவனுக்கும் பார்வதிக்கும் இரு குமாரர்கள் முறையே ,கணபதி ,குமாரசாமி அதாவது முருகன். இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நாள் திருமணம் குறித்து விவாதம் ஏற்பட்டது. இருவருமே தனக்குத்தான் முதலில் திருமணம் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தனர்.
இதைக்கண்ட சிவனும் பார்வதியும் அவர்களிடம் உங்களில் யார் முதலில் பூமியை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் முதலில் திருமணம் நடக்கும் என்று கூறினார்கள் .உடனே முருகன் தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வரச் சென்றார்.
விநாயகரோ தன்னால் இது முடியாத காரியம். ஆகையால் நன்கு யோசித்து தாய் தந்தையரை முறைப்படி பிரதட்சணம் செய்து, அம்மா நான் போட்டியில் வெற்றி பெற்று விட்டேன் .எனக்கு திருமணம் செய்து வையுங்கள் எனக் கேட்டார். பார்வதியோ! மகனே போட்டியில் வெற்றி பெறாமல் விவாகம் கிடையாது என்றார். அதற்கு கணபதி உங்கள் இருவரையும் சுற்றி வந்தேன் அல்லவா.
""பித்ரோச்ச பூஜனம் க்ருத்வா ப்ரக்ராந்திதம் ச கரோதி ய: தஸ்ய வை வ்ருதிவிஜன்யம் பலம் பவதி நிச்சிதம்.
இதன் பொருள் என்னவென்றால் தாய் தந்தையரே உலகம். அம்மா அப்பாவே தெய்வம். தாய் தந்தையரை பூஜித்தால் வலம் வந்தால் சுற்றிவந்தால் உலகை சுற்றி வந்ததிற்கு சமம். ஆதலால் நான் உங்களை சுற்றி வந்ததால் பூமியையே சுற்றி வந்ததிற்கு சமம் ஆகும். ஆதலால் நான் தான் போட்டியில் ஜெயித்தேன் என்று கூறினார் விநாயகர்.
உடனே அவருடைய புத்தியை மிகவும் மெச்சிய பார்வதி பரமேஸ்வரர் விஸ்வரூப பிரஜாபதி குமாரிகளான சித்தி புத்தி ஆகியோரை கணபதிக்கு விவாதம் செய்தனர்.இன்றும் நிறைய இடங்களில் விநாயகருக்கு விவாகம் நடந்ததாகவும் அவருடைய மனைவியர் சித்தி புத்தி என்றும் சொல்வது வழக்கத்திலுள்ளது. விநாயகர் மனைவிகளுடன் வீற்றிருக்கும் சித்தி புத்தி கோயில்களும் சித்தி புத்தி விநாயகர் ஆலயம் என்று நாமும் வணங்கிக் கொண்டிருக்கிறோம்.
இது இவ்வாறு இருக்க உலகை வலம் வந்த முருகன் நடந்தது மோசம் என்று நினைத்து மிகுந்த கோபத்துடன் பார்வதி பரமேஸ்வரனிடம் கோபித்துக்கொண்டு கைலாச மலையை விட்டு கிரவுஞ்ச மலையை அடைந்து அதன் மீது அமர்ந்து கொண்டார்.சிவனும் பார்வதியும் புத்திர சோகத்தால் வருந்தி எத்தனையோ விதமாக கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் பலன் இல்லாமல் போகவே அவர்களும் தங்கள் குமாரனுக்கு அருகில் உள்ள ஸ்ரீசைலம் சிகரத்தில் அமர்ந்து கொண்டார்கள். இவ்வாறுதான் ஸ்ரீசைலம் தோன்றியது எனவும் ஸ்ரீசைலத்தில் உள்ள கிரவுஞ்ச மலையில் தான் முருகன் அமர்ந்தது என்றும் ஸ்ரீசைல புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கிரவுஞ்ச மலை வேறு பழனி மலை வேறா.?? பழத்திற்காக கோவித்துக்கொண்டு உண்டானது பழனிமலை என்றால் திருமணம் நடக்கவில்லையே என்று கோபித்துக் கொண்டு அமர்ந்தது கிரவுஞ்ச மலையா??என்று சந்தேகம் ஏற்பட்டால் ஸ்ரீசைல மகாத்மியத்தை படித்து தங்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அல்லது கிரவுஞ்ச மலை தான் பழனி மலையா அப்படி என்றால் பழனி மலை ஸ்ரீசைலத்தின் அருகில் இருக்க வேண்டும். (ஸ்ரீசைல புராணத்தின் படி பார்த்தால் ஆதியில் திருப்பதி ஏழுமலையில் முருகன்தான் தெய்வமாக வீற்றிருந்ததாகவும் ராமானுஜர் வந்து முருகனா!! பெருமாளா!! என்ற சந்தேகம் ஏற்பட பெருமாளே என்று தீர்த்து வைத்ததாகவும் கூறுவார்கள். ஸ்ரீசைலம் புராணத்தின் படி பார்த்தால் வேங்கடேச மலையில் கோவித்துக்கொண்டு அமர்ந்ததும் முருகனாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்படுகிறது )
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment