குலதெய்வம் கோயில்

தெரிந்த கதை தெரியாத வரலாறு

நான் பிறந்த ஊர் பழனி. பழனி முருகனைப் பற்றியோ பழத்திற்காக கோபித்துக்கொண்டு கோவணாண்டியாக பழனியில் குடியிருந்தது பற்றியோ திரு ஆவினன்குடியில் முருகன் குடிகொண்டது பற்றியோ அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆதலால் நான் பிறந்த இடமான பழனியின் பெருமையும் புகழும் அனைவரும் அறிந்திருப்பார்கள் என்ற காரணத்தினால் அதைப் பற்றி நான் இங்கு கூற விரும்பவில்லை.

எனது குலதெய்வம் தற்போது கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் திருச்சூர் செல்லும் வழியில் கொல்லங்கோடு அருகில் உள்ள பெருங்கோட்டுப் பகவதி ஆகும் .அடிமைக் காவு என்றும் பெருங்கோட்டுக்காவு  என்றும் கூறுவர.

காவு என்றால் பாம்பு கோவில் என்று அர்த்தம். அனேகமாக கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அனைவருக்கும் குலதெய்வம் பகவதியாகும். அதை காவு என்ற பெயரிலும் அழைப்பார்கள். உதாரணமாக பெருங்கோட்டுக் காவு  பெரும்பூக் காவு  சேலக்கரைக் காவு  ஸர்ப்பக்  காவு அந்திமடக் காவு meenkulathi kavu பல்லசேனைக் காவு என்று அனைத்தையும் காவு என்று சொல்லியே அழைப்பார்கள்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உறையும் பத்மநாபசுவாமியையும் அனந்தன் காடு என்றும் ஆனந்தன் காவு என்றும் அழைப்பார்கள்.

இங்கு காவு என்ற சொல் அவரவர்களின் குல தெய்வத்தை குறிக்கும்.

நாங்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள். எனது முன்னோர்களும் தமிழர்களே. பாலக்காடு மாவட்டம் தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிலும் இருந்தது. பிறகு உண்ணாவிரதம் மொழிப்போர் முதலியவை தொடங்கி கன்னியாகுமரியைத் தமிழ்நாட்டுடன் இணைத்த பொழுது அதற்கு பதிலாக பாலக்காடு மாவட்டம் கேரளாவுடன் இணைத்து விட்டதால் பின்னாளில் மலையாள பிராமணர்களாக உருமாறினோம்.

ஆனால் இன்றும் தமிழைத்தான் தாய்மொழியாகக் கொண்டு எங்கிருந்தபோதிலும் தமிழையே பேசி வருகிறோம்.ஆனாலும் குலதெய்வம் கேரளாவில் இருப்பதால் கேரள பிராமணர்களா என்றுதான் கேள்வி எழுகிறது.

நான் மிலிட்டரியில் சேர்ந்து அனைத்து மொழிக்காரர்களுடனும் கலந்து உறவாடி அந்தந்த மொழிகளைக்  கற்றுக் கொண்டதால் நான் பல மொழி பேசும் திறன் படைத்து இருந்ததால் என்னை பார்ப்பவர்கள் தமிழ் என்றும் தெலுங்கு என்றும் மலையாளி என்றும் கூறுவார்கள் . வேறு சிலர் நீ கோவை பொள்ளாச்சியில் இருந்ததால் மலையாளம் கற்றுக் கொண்டாயா என்றும் கேட்பவர்கள் உண்டு.

இங்குள்ள பகவதி கோயில்களுக்கு வரலாறு என்று ஒன்று கிடையாது .அது தொன்றுதொட்டு நிலைத்து நின்று வருவதால் இந்த கோயில்களின் வரலாறு பற்றியோ அது அங்கு எவ்வாறு தோன்றியது என்பது பற்றியோ ஒரு குறிப்பும் யாரிடமும் இல்லை. பரம்பரையாக முன்னோர்கள் குலதெய்வம் என்று வழிபட்டு வருவதால் நாமும் அதையே பின்பற்றி குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம் .இதற்கு மூலம் ஆதாரம் ஆராய்ச்சி பண்ணி முடிவு எட்ட முடியாது காரணத்தால் கேரளாவில் உள்ள குலதெய்வ பகவதி கோயில்களில் வரலாறு அறிவது சற்று சிரமமாக இருப்பதால் இதன் வரலாறு தெரியாத காரணத்தால் பகவதி கோயில்.    காவு      குலதெய்வம் என்று அழைக்கிறோம். ஆனால் ஒரு சிலர் வருடத்திற்கு ஒரு முறையும் நான் அடுத்து இருப்பதால் அடிக்கடியும் குலதெய்வம் கோயிலுக்கு செல்வது உண்டு.

நான் தற்போது இந்தப் பதிவை இங்கே பதிய  வேண்டியதன் அவசியம் என்னவென்றால் ஒரு சிலர் என்னிடம் ஊரில் உள்ள எங்கெங்கோ உள்ள கோயில்களின் தல வரலாறைப் பற்றியும் அதன் புராண இதிகாசத்தை பற்றியும் கூறுகிறாயே உன்னுடைய குல தெய்வத்தைப் பற்றி இதுவரை பதிவிட்டு இருக்கிறாயா என்று கேட்ட காரணத்தினால் நிர்பந்தத்தினால் தற்போது இதை பதிய வேண்டிய சூழ்நிலை உருவானது என்று கூறிக் கொள்கிறேன். நேற்றுதான் மீண்டும் நான் எனது குலதெய்வம் கோயிலுக்கு சென்றேன் என்று கூறி அதன் போட்டோவையும் இத்துடன் இணைத்துள்ளேன்

ஆதலால் பெருங்கோட்டுக் காவு  தான் எங்கள் குலதெய்வம் என்று கூறி இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்