வாஸ்து சாஸ்திரம்

வணக்கம் மத்யமர் ஆண்டு விழா முடிந்து அலப் பறைகளும் மீம்ஸ்களும் வந்து கொண்டிருக்கின்றன .வாழ்த்து மடல்களும் வாழ்த்து செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஓரளவுக்கு அதுவும் முற்றுப் பெறும் நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது. காரணம் திருமணம் முடிந்து கட்டுச்சோறு கட்டி கொடுத்து அனுப்பிய பிறகு அவரவர்கள் வீட்டிற்குச் சென்று கட்டுச்சோறு உண்டு படுத்து உறங்கினால் மறுநாள் அவரவர்கள் தொழில்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இடையிடையே திருமணத்தைப் பற்றி பேசுவது போல் மூன்று நான்கு தேதி போய் இன்று ஐந்தாம் தேதி ஆகிவிட்டதால் இடையிடையே நாமும் ஆண்டு விழாவைப் பற்றி பேசி நமது தொழிலை கவனிப்போம் என்று கேட்டுக்கொள்கிறேன். நான்  என் தொழிலை கவனிக்க ஆரம்பித்து விட்டேன் என்பதற்கு இது ஒரு முன்னுதாரணம்.

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது வாஸ்துபுருஷன் அவதாரம். யார் இந்த வாஸ்து புருஷன்?? எவ்வாறு தோன்றினார் ??அவரின் முக்கியத்துவம் என்ன?? என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா??.

தற்போதுள்ள காலகட்டங்களில் வாஸ்து என்பது மிகவும் அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது .ஒரு கோயில்: ஒரு தொழிற்சாலை; ஒரு வீடு' எதுவானாலும் முதலில் வாஸ்துபடி கட்டவேண்டும் வாஸ்துப்படி அமைய வேண்டும் என்பதில் அனைவரும் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டுள்ளனர். சரி இனி வாஸ்து யார் எவ்வாறு தோன்றினார் என்பதை காண்போம்.

அந்தகாசுரன் என்ற அசுரன் சிவபெருமானுடன் யுத்தம் புரிந்தான். அவன் பல வரங்களைப் பெற்றவன். ஆதலால் அவனுடன் கடின யுத்தம் புரிய வேண்டிய தேவை சிவபெருமானுக்கு ஏற்பட்டது. அவ்வாறு அவனுடன் யுத்தம் புரிந்து கொண்டிருக்கும் பொழுது அவர் உடலெங்கும் வேர்வையால் வியர்த்து வழிந்தது. அவ்வாறு அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது.

அவ்வாறு தோன்றிய பூதம் மிகுந்த பசியுடன் விளங்கியது. அதன் பசி தீர சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. அந்தத் தவத்தின் வலிமையால் அது பூமியையே விழுங்கும் சக்தி பெற்றது .அவ்வாறு சக்தி பெற்ற அந்த பூதம் பூமியை விழுங்க முயன்றபொழுது பிரம்மா முதலிய தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தை குப்புறத்தள்ளி எழ முடியாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். அப்பொழுது அந்த பூதம் அவர்களிடம் நான் மிகுந்த பசியில் உள்ளேன் .எனது பசியை ஆற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது..

அப்பொழுது சிவபெருமான் தோன்றி இன்று முதல் நீ வாஸ்துபுருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டி எந்த ஒரு கட்டடம் கட்டும் பொழுதும் உனக்கு பூஜை செய்து உன்னை மனதார நினைத்து பக்தியுடன் வணங்கினால் அவர்களுடைய  பூஜா பலன் உனக்கு கிடைத்து உனது பசியாறும். அவ்வாறே உன்னை நினைத்து துதிப்பவர்களுக்கு உனது அருளும் ஆசியும் கிட்டும் பொழுது அவர்களது கட்டடம் தங்குதடையின்றி நிறைவேறும் என்று கூறினார்.

மேலும் பஞ்சாங்கத்தில் சோதிடத்தில் மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்கள் வாஸ்து செய்ய நன்கு என்று கூறியிருப்பார்கள் .அவ்வாறு வாஸ்து நாட்களில்  வாஸ்து புருஷன் காலையில் எழுவதில் இருந்து மாலையில் உறங்குவது வரை வாஸ்து புருஷனுடைய செயல்களை குறிப்பிட்டிருப்பார்கள். காலையில் எழுவது' பிறகு காலை கடன் முடித்து ஸ்நானம் செய்வது' பிறகு பூஜை செய்வது; பிறகு போஜனம் செய்வது; தாம்பூலம் தரிப்பது; பிறகு உறங்குவது என்று அனைத்தையும் குறிப்பிட்டு இருப்பார்கள். இதில் முக்கியமாக போஜனம் செய்து தாம்பூலம் தரிக்கும் நேரத்தில் வாஸ்து சாந்தி செய்தால் அவ்வாறு செய்யப்பட்ட கட்டிடம் தங்குதடையின்றி மிக சிறப்பாக சீக்கிரமாக குற்றம் குறை இன்றி கட்டி முடிக்கப்படும் என்று மத்ஸ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

நாமும் அதில் குறிப்பிட்டுள்ளபடி தாம்பூலம் தரிக்கும் நேரத்தில் கட்டிடம் கட்ட ஆரம்பித்து வாஸ்து புருஷனின் ஆசியை பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக.

இதுவே வாஸ்துபுருஷன் தோன்றிய வரலாறு.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்