#கல்யாண வைபோகமே#சண்டே ஸ்பெஷல்

#_கல்யாண வைபோகமே#சண்டே ஸ்பெஷல்

நான் 1982ஆம் வருடம் இந்திய விமானப்படையில் டெல்லியில் இருந்தேன். எனது தங்கையின் திருமணத்திற்காக 20 மே1982 அதற்காக வந்தேன் .அப்பொழுது எனது தாய்மாமா திருச்சியில் தாசில்தாராக இருந்தார். அவருடைய சம்பந்தி வீட்டில் ஒரு பெண் இருப்பதாகவும் அதை வாசுக்கு (அதாவது எனக்கு)முடிக்கலாம் என்று கூறினார்கள். தங்கையின் திருமண வேலை முடிந்து ஒரு பத்து நாட்கள் தான் ஆகியிருந்தது. அவர் மிகவும் அவசரப் படுத்தியதால் நாங்கள்  உடனே சென்று பெண் பாத்தோம் .பெண் பிடித்தது என்று சொன்ன ஒரு வார்த்தைக்காக காத்துக்கொண்டு இருந்தது போல் பெண் பார்த்த நாளில் இருந்து 10 நாளில் எனது திருமணம் நடந்தேறியது.பெண் பார்த்து பிடித்தது. அடுத்த வருடம் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று கூறியதை  சற்றும் பொருட்படுத்தாமல் எனக்கு 10 நாள்தான் லீவு இருந்தது. அதற்குள் எனது திருமணத்தை அவசரம் அவசரமாக முடித்து விட்டார்கள் .நான்  ஃஏர்போர்ஸில் பர்மிஷன் வாங்க வேண்டும் அங்கு வீடு பார்க்க வேண்டும் என்று எவ்வளவோ கூறியும் ஒன்றையும் கேட்காமல் 23 .06.1982ல் எனது திருமணம் இனிதே நடந்தேறியது .

பின் திருமணம் முடிந்து  பத்து தினங்கள் திரும்பி டெல்லி சென்று அங்கே ஏர்போர்ஸில்   பர்மிஷன் கேட்டதற்கு திருமணத்தை முடித்துக்கொண்டு பர்மிஷன் கேட்கிறாயா என்று அவர்கள் கேட்க பிறகு மீண்டும் புதிதாக பழைய தேதியிட்டு ஒரு அப்ளிகேஷன்  குடுத்து பர்மிஷன் வாங்கி அதற்குப் பிறகு எனக்கு திருமணம் ஆனதற்கான சாட்சியை கொடுத்து பின் நான் அங்கு வீடு பார்த்து செட்டிலானேன் .அதுவரை நான் எனது நண்பர் ஒருவர் வீட்டில் தான் தங்கி கொண்டிருந்தேன்.

காரணம் திருமணம் செய்ய வேண்டும் என்றால் முன்தேதியிட்டு ஏர்போர்ஸ்ல் பர்மிஷன் வாங்கிய பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும் .அதற்கு முதல் தகுதி வயது 25-க்கு மேல் இருக்க வேண்டும். எனக்கு எல்லா தகுதியும் இருந்தும் நான் திருமணம் செய்வதற்காக வராத காரணத்தினால் அவசரமாக திருமணம் முடிந்த காரணத்தினால் என்னால் அவர்கள் கூறிய நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாததால் நான் மிகவும் நல்ல பெயர் வாங்கி உள்ள காரணத்தினால் என்மேல் கருணை கொண்டு எனது  மேலதிகாரி தேவையை பூர்த்தி செய்தார்கள்.

இவ்வாறாகத்தான் எனது திருமணம் 23 .06.1982ல் நடந்தேறியது. இதுவே எனது கல்யாண வைபோகம் அனுபவம்.

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்