மதியாதார் தலைவாசல் மிதியாதே
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
இன்று நாம் காண இருப்பது மகா விஷ்ணுவுக்கும் மகாலட்சுமிக்கும் நடந்த உரையாடலை பற்றிய தொகுப்பு .அதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??.
ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மேல் சயணித்துக் கொண்டிருந்தார். அடுத்து மகாலட்சுமி வீற்றிருந்தார். மகாவிஷ்ணு தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் .அப்பொழுது மகாலட்சுமி ""நாதா""என்ன சிந்தனை? என்ன யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வினவினார். ஒன்றும் பதிலளிக்கவில்லை .மீண்டும் வினவினார்.
அப்பொழுது மகாவிஷ்ணு பூலோகத்தில் மனிதர்களைப் பற்றியோ விலங்குகளை பற்றியோ பக்தர்களை பற்றியோ ஒன்றுமே புரிந்துகொள்ள முடிவதில்லை .நான் அவர்கள் ஆபத்தில் இருக்கும் நேரத்தில் நாம் அவர்கள் அழைத்து நாம் போனால் அவர்களது உபசரிப்பு ஒரு மாதிரி இருக்கிறது .பக்தர்களே என்று நாமாக விரும்பி போனால் அந்த உபசரிப்பு வேறு மாதிரி இருக்கிறது .என்று கூறினார்.மகாலட்சுமிக்கு ஒன்றும் புரியவில்லை. விவரமாக விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டார்.
1. கஜேந்திரன் என்ற யானை முதலையிடம் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்து வலியால் துடித்துக் கொண்டிருந்தது .ஓரளவுக்கு மேல் வலி தாங்க முடியாத காரணத்தினால் பூவைப் பறித்து ஆதிமூலமே என்று என்னை அழைத்தது. அதனுடைய அபயக்குரல் கேட்டு நீ இல்லாமல் சேனை பரிவாரங்கள் இல்லாமல் நான் அவசரமாக கிளம்பி முதலையை கொன்று யானையை காப்பாற்றினேன். அது அழைத்தது நான் சென்றேன். அந்த புகழ் எனக்கு இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
2. துச்சாதனன் பாஞ்சாலி யின் ஆடையை துகில் உறிந்தபோது பாஞ்சாலி எல்லாம் இழந்த நிலையில் இரண்டு கைகளையும் தூக்கி ஆபத்பாந்தவா அனாதை ரட்ஷகா காப்பாற்று என்று என்னை அழைத்தார் .குரல் கேட்ட மறுகணமே ஓடிச் சென்று அவளுக்கான ஆடையைக் கொடுத்து அவளுடைய மானத்தைக் காப்பாற்றினேன்.அந்த புகழ் எனக்கு இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
3.விதுரர் அன்பின் மிகுதியால் எனது குடிலுக்கு வரவேண்டும் என்று விண்ணப்பிக்க அவருடைய ஆசையை நிறைவேற்ற அவர் குடிலுக்குச் சென்று பழத்தை கீழே போட்டு அன்பின் மிகுதியால் தோலைக் கொடுக்க உடனே நான் தோலையே உண்டு மகிழ்ந்து இருந்தேன் .அதை அனைவரும் பாராட்டினார்கள். அந்தப் புகழ் எனக்கு இன்று வரை நிலைத்து நிற்கிறது.
ஆனால் யாரும் என்னை அழைக்காமல் நான் போன இடத்தில் நடந்ததை பற்றியும் கூறுகிறேன் சற்று விவரமாக கேள்.
1.துரியோதனன் என்னை அழைக்கவில்லை. நானாக அவனிடம் சென்று தூது பற்றி பேசலாம் என்று போனேன். அவன் எனக்கு ஆசனம் கூட தரவில்லை. தந்த ஆசனத்திலும் பாதாளம் வரை வீழச் செய்து என்னை கொல்லப் பார்த்தான். அழையாத விருந்தாளியாக போனதில் நான் அவமானப்பட்டேன்.
2.பண்டரிபுரத்தில் புண்டலீகன் என்ற ஒரு சிறந்த பக்தன் இருக்கிறான் .அவனை காணலாம் என்ற எண்ணத்தில் சென்று அவனுடைய வீட்டிற்கு முன்பு நின்று புண்டலீகா என்று அழைத்தேன். அவன் வெளியில் வராமல் வீட்டின் உள்ளே இருந்து யார் அது என்று வினவினான்.நான் தான் பகவான் வந்திருக்கிறேன் என்று கூறினேன் .அவன் அப்படியே இரு வருகிறேன் என்று அசால்டாக பதில் கூறி ஒரு செங்கல்லை எடுத்து வீசி இதன் மேல் இரு நான் வரும் வரை என்று கூறினான். நானும் வேறு வழியில்லாமல் அன்று இடுப்பில் கை வைத்து செங்கல் மேல் நின்றவன் தான் இன்று வரை நின்று கொண்டே இருக்கிறேன்.
இதிலிருந்து பகவானுக்கு மட்டுமல்ல நமக்கும் தெரிவது என்னவென்றால் மதியாதார் தலைவாசல் மிதியாதே .அழையாதார் வீட்டிற்குச் செல்லாதே. விருந்தோம்பல் அழைப்பவர் வீட்டிற்கு செல்லுங்கள்.
இந்தப் பொங்கலுக்கு மத்யமர் நண்பர்கள் அனைவரும் அனைத்து உற்றார் சுற்றம் உறவினர் மாந்தர் நண்பர்கள் அனைவரையும் அழைத்து பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்று கூறி இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி என்று கூறிக் கொள்கிறேன்.
நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.
Comments
Post a Comment