தாராபுரம் என்றும் விராடபுரம் என்றும் பெயர் பெற்ற இடம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு.

இன்று நாம் காண இருப்பது ஒரு இடத்தின் பெருமையை. அது எந்த இடம்?? என்ன?? ஏன் அதற்கு எவ்வாறு பெயர் வந்தது. ??அது புராணத்தில் மகாபாரதத்தில் அதைப் பற்றி என்ன கூறுகிறது என்ன என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

இன்று நாம் காண இருக்கும் இடத்தின் பெயர் தாராபுரம்.தாரா என்றால் கீர்த்தி புகழ் என்று பெயர் .மேலும் தாரா என்றால் நீர்ப்பெருக்கு என்றும்  அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள காரணத்தினால் தாராபுரம் என்றும் மிகவும் சங்க காலம் தொட்டே புகழ் பெற்ற இடம் என்பதால் தாராபுரம் என்றும் பெயர் பெற்றது. இதைத் தாரை  என்றும் அழைப்பார்கள் .நாம் ஒருவருக்கு ஏதாவது வழங்கிவிட்டால் தாரை வார்த்தல் என்று சொல்கிறோம் அல்லவா!! அதுபோல அங்குள்ள புண்ணியத்தை எல்லாம் அங்கு செல்லும் மக்களுக்கு அங்குள்ள கோயிலில் ராகவேந்திரரும் ஆஞ்சநேயரும் வழங்குவதாலும் அந்த இடத்திற்கு தாராபுரம் என்று பெயர்.

இந்த தாராபுரம் துவாபரயுகத்தில் என்னவாக இருந்தது எப்படி பெயர் வந்தது என்பதை சற்று பார்ப்போமா.!!! மகாபாரதத்தில் சூதாடி துரியோதனிடம் தோற்றபிறகு பாண்டவர்கள் 12 வருடம் வனவாசமும் ஒரு வருடம் அஞ்ஞாதவாசமும் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வாறு அஞ்ஞானவாசம் மேற்கொள்வதற்கு தகுந்த இடமாக அவர்கள் தேர்ந்தெடுத்து தாராபுரத்தைத்தான்.

ஆச்சரியமாக இருக்கிறதா?? ஆம்!! துவாபரயுகத்தில் அவர்கள் தாராபுரத்தைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். காரணம் தாராபுரத்திற்கு புராண காலத்து பெயர் விராடபுரம் ஆகும். ஒரு வருட காலம் பாண்டவர்கள் விராடபுரத்தில் தான் தனது அஞ்ஞானவாசத்தை கழித்தார்கள்.

விராடபுரத்தில் அடர்ந்த காடுகளும் நீர் நிலைகளும் இருந்த காரணத்தினாலும் அங்கு எங்கும் வன்னி மரம் நிறைந்திருந்த காரணத்தினாலும் அங்கு தங்குவதற்கு சிறந்த இடமாக தேர்ந்தெடுத்தார்கள். தனது ஆயுதங்களை விராடபுரம் நுழைவாயிலில் உள்ள வன்னி மரத்தில்தான் அர்ஜுனன் வைத்து பாதுகாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மர் கங்கராகவும் பீமன் வல்லவ பட்டர் என்னும் சமையல்காரராகவும் அர்ஜுனன் ப்ருஹன்னளையாகவும் நகுலன் தர்மக்ரந்தி என்னும் பெயரோடு  தேரோட்டியாகவும் சகாதேவன் தந்திபாலன்  எனும் நாமத்தோடு  மாடு மேய்ப்பவனாகவும் பாஞ்சாலி மாலினீ என்ற பெயரோடு பணிப்பெண்ணாகவும் தனது தோற்றங்களை  மாற்றிக்கொண்டு விராடனின் அரண்மனையில் பணி புரிந்தார்கள்.

விராட ராஜனுக்கு உத்தர குமாரன் என்ற மகனும் உத்திரை என்ற பெண்ணும் இருந்தார்கள்.பாண்டவர்கள்  தானுண்டு தன் பணியுண்டு என்று இருந்தாலும் விதி சும்மா இருக்காமல் இவர்களிடம் தனது வலையை வீசியது. விராடராஜனின் மைத்துனன் கீசகன் திரௌபதியை அடைய விரும்பி அவளிடம் மிக மோசமாக நடந்து கொண்டான். இதை அறிந்த திரவுபதி பீமனிடம் சொல்ல அவனை உடற்பயிற்சி கூடத்திற்கு வரச்செய்து பீமன் கீச்சகனைக் கொன்றான்.

கீச்சகனை யாரும் சாதாரணமாக கொல்ல முடியாது .ஏழு பேர் மட்டுமே அவனை கொல்ல முடியும் .அந்த ஏழு பேர்  1.கிருஷ்ணர் 2. பலராமர் 3. பீஷ்மர் 4. பரசுராமர் 5. கர்ணன் 6.துரியோதனன்  7.பீமன்.

அஞ்ஞாத வாசத்தில் இவர்கள் எங்கு உறைந்து இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு துரியோதனன் கடும் பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். கீச்சகனை பீமன் கொன்றதினால் மற்ற அனைவரும் அஸ்தினாபுரத்தில் இருக்கும்பொழுது கீசகன் இறந்ததால் கீசகனை  பீமன் தான் கொன்றிருப்பான் என்று உணர்ந்து துரியோதனன் தனது படையை விராடபுரம் நோக்கி ஏவினான்.

அது அஞ்ஞான வாசத்தின்  இறுதிநாளான காரணத்தினால் உத்தர குமாரனை வைத்து ப்ரஹன்னளை வேஷத்தில் இருந்த அர்ஜுனன் அவர்கள் அனைவரையும் மயக்கமுற செய்து வெற்றி பெற்றான். இது அனைத்தும் நடந்தது விராடபுரம் என்னும் தாராபுரத்தில் தான்.

மேலும் விராட ராஜனின் பசுத்தொழுவம் தான் தற்போது உள்ள காரத்தொழுவாகவும் தளபதிகள் தங்கியிருந்த பட்டணம்தான் தளவாய்ப் பட்டணம் என்றும் விராட நாட்டில் இருந்து பசுக்களை எதிரிகள் கவர்ந்து சென்றபோது அர்ஜுனன் அவற்றைத் திரட்டி மீண்டும் திருப்பிய இடம்தான் திருப்பூர் என்றும் வழங்கப்படுகிறது.

இதைப் பற்றிய விவரங்களை வில்லிபாரதத்தில் வில்லிபுத்தூரார் கூறியிருக்கிறார் .மேலும் கொங்கு நாட்டை ஆண்ட பல மன்னர்களின் சரித்திரத்திலும் தாராபுரத்தை பற்றி விராடபுரம் என்று விரிவாக விவரமாக விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

இதுவே தற்பொழுது தாராபுரம் என்றும் துவாபரயுகத்தில் விராடபுரம் என்றும் அழைக்கப்பட்ட நகரம் ஆகும்
தாராபுரத்தில் காடு ஹனுமந்த சாமி என்ற ஆஞ்சநேயர் கோயிலும் ராகவேந்தர் கோயிலும் உள்ளது .அதைப் பற்றிய விவரம் பின்பு விரிவாக விளக்கமாக தெரிவிக்கின்றேன்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

Comments

  1. திரௌபதி அல்லது பாஞ்சாலி என்பதின் அர்த்தம் என்ன? ஐந்து என்ற எண்ணுக்கும் இந்த பெயருக்கும் தொடர்பு உள்ளதா? ஐந்து நிலப்பரப்பை உடையது திராவிடம், ஐந்து கணவர்களை உடையவள் திரௌபதி அல்லது பாஞ்சாலி.

    ReplyDelete
    Replies
    1. திராவிடம் என்று எங்கும் இல்லை. த்ராவிடம் என்பது மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடம்.

      Delete
  2. திராவிடமா....?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்