கோபேஷ்வர் வரலாறு
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
இன்று நாம் காணவிருப்பது கோபேஷ்வர் மகாதேவ் மந்திர்.இது எங்கு உள்ளது?? இதன் தாத்பரியம் என்? எவ்வாறு இது அமைந்தது. இதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.??
மதுராவில் பிருந்தாவனத்தில் வம்சிவட் என்ற பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் கோபேஷ்வர் மகாதேவ் என்ற பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த சிவலிங்கத்திற்கு புடவை அணிவித்து வணங்குகிறார்கள். என்ன காரணம் ஏன் சற்றுப் பார்ப்போமா!!!.
ஒருமுறை பிருந்தாவனத்தில் கிருஷ்ணரும் கோபியர்களும் பவுர்ணமி இரவில் ராசலீலை என்னும் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த நடனத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆசை சிவனுக்கும் உண்டானது .ஆதலால் அந்த நடனத்தில் ஆடுவதற்காக சிவபெருமான் கைலாயத்தில் இருந்து வந்தார் .ஆனால் பிருந்தாதேவிஃ( துளசி மாதா) அவரை தடுத்து நிறுத்தி ராசலீலா நடனத்தில் கிருஷ்ணரைத் தவிர வேறு ஆண்கள் பங்கெடுக்க முடியாது என்றாள்.இதை கேட்ட சிவன் மிகவும் வருத்தப்பட்டார்.
சிவனுடைய வருத்தம் பிருந்தாதேவியை மிகவும் சங்கடப்படுத்தியது. அவள் சிவனிடம் இங்குள்ள குசும் சரோவர் குளத்தில் குளித்துவிட்டு வருமாறு கூறினார்.சிவனும் அதில் மூழ்கி எழுந்ததும் அழகிய பெண் ரூபம் கிடைத்தது. அளவில்லா சந்தோஷத்துடன் ராஸலீலாவில் பங்கு பெற்று நடனம் ஆடி மகிழ்ந்தார் சிவன். கோபியர் ரூபத்தில் இருந்த சிவனை """கோபேஷ்வர்""என்று அனைத்து கோபியரும் அழைத்தனர்.
பிருந்தாவனத்தில் வம்சி வட்டில் சிவன் கோபியர் போல் பெண் வடிவம் உள்ள அழகிய விக்ரகம் இன்றும் உள்ளது. இந்த நிகழ்வு காரணமாகவே இந்த கோவிலில் சிவலிங்கத்திற்கு புடவை அணிவிக்கிறார்கள்.
மேலும் இந்த கோவிலில் சிவனுக்கு நைவேத்தியம் செய்வதில்லை .காரணம் சிவபெருமான் சாப்பிடுவதற்கு மூன்று வேளையும் கைலாயம் சென்று வருவதாக ஐதீகம்.
இதுவே கோபேஷ்வர் மகாதேவன் வரலாறு. சிவனுக்கு புடவை அணிவதின் வரலாறு.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி.
நாளை வேறு ஒரு வரலாறுடன் காண்போம்.
(இந்த ஆலயம் மதுராவில் கோகுலத்தில் பிருந்தாவனத்தில் வம்சிவட் என்ற பகுதியில் உள்ளது .தகவலுக்காக இதை நான் கூறியுள்ளேன்)
Comments
Post a Comment